அசீமிடம் அதிகாரம் காட்டிய குயின்சி.. அலட்டிக்காமல் அசீம் உடைத்த ரகசியம்..அனைத்தும் அம்பலமாகிவிட்டதே?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று 47வது நாளில் முதல் ப்ரோமோவில் நீதிபதியாக இருக்கும் குயின்சியை அசீம், குயின்சி செய்த தவறை சொல்லி ரகசியத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார்.
கதிரவன் தொடர்ந்த பொது நல வழக்கில் ஏழு போட்டியாளர்கள் மாட்டியிருக்கும் நிலையில் அசீம் நீதிபதியாக இருக்கும் குயின்சி யின் மீது குற்றச்சாட்டுகளை வைத்ததை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

கதிரவன் தொடுத்த வழக்கு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஏழு வாரங்களை கடந்து இருக்கும் நிலையில், இந்த வாரம் நீதி மன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒவ்வொரு நாளும் வழக்குகளை தொடுத்து வருகின்றனர். அந்த வகையில் கதிரவன் வீட்டில் சாப்பிட்ட தட்டுகள் மட்டும் கிளாசை பல பேர் கழுவுவதில்லை என்று புகார் அளித்தார். அதன் விசாரணை தான் தற்போது நடந்து வருகிறது. குற்றவாளிகளாக ஏழு பேர் அந்த வழக்கில் கதிரவன் சேர்த்து இருக்கிறார். அதில் ஒரு குற்றவாளியாக இருக்கும் அசீம் நீதிபதியாக இருக்கும் குயின்சியை சாப்பிட்ட பிளேடுகளை கழுவுவதில்லை என்று குற்றம் சுமத்துகிறார். இந்த பிரமோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அசீமின் கேள்வி
இந்த வாரம் நான் பர்சனல் ஆக எல்லோருக்கும் சொன்னேன், யார் யார் குடித்தீர்களோ அதை நீங்களே கழுவி விடுங்கள் என்று ஆயிஷா தன்னுடைய குற்றசாட்டை சொல்ல, அவரிடம் மணிகண்டன் விசாரணை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அதை யாரும் செய்யவில்லையே என்று ஆயிஷா கூறுகிறார். அவரைத் தொடர்ந்து ரட்சிதா வாதாட வருகிறார். அப்போது அசீம் குற்றவாளி கூண்டில் இருக்கிறார். இந்த டூட்டி வந்து செல்ஃப் டூட்டி தானே ?நான் பர்சனலா இந்த குரூப்பில் பார்த்தது குயின்சியை பார்த்தேன். சாப்பிட்டுட்டு வைத்துவிட்டு வாஷ் பண்ணாம வந்துட்டாங்க .குயின்சி அவங்க சாப்பிட்டதுக்கு அப்புறம் அவங்க சாப்பிட்ட பிளேட்டையும் கூட அப்படியே வச்சுட்டு வந்துட்டாங்க என சொல்ல அதற்கு கதிரவன் தலையை ஆட்டியபடியே மணிகண்டன் இடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

தீர்ப்பு என்னவாக இருக்கும்
நீதிபதியாக இருக்கும் குயின்சி இங்கே ஒருத்தரை மட்டும் யாரும் சொல்லவில்லை .இது பொது நல வழக்கு என்று தெரிந்தும் இப்படி பேசுவது என்று சொல்ல இங்கே நீங்களும் பொதுவாக தான் இருக்கீங்க குயின்சி நான் இங்கே எல்லாரையும் சேர்த்து தான் சொல்கிறேன் என அசீம் சொல்ல இந்த ப்ரோமோ முடிவு அடைந்து இருக்கிறது. ஏற்கனவே குயின்சி மற்றும் அசீம் இடையே அடிக்கடி பிரச்சினைகள் முட்டிக் கொண்டிருக்கும்போது இப்போது நீதிபதி குற்றவாளி இடையேயும் பிரச்சனைகள் ஏற்பட தொடங்கி இருக்கிறது. நீதிபதியாக இருக்கும் குயின்சி மீது அசீம் குற்றசாட்டுகளை வைப்பதால் இனி இவர் என்ன தீர்ப்பு சொல்லப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

என்னவாக இருக்கும்
இந்த ப்ரோமோவை பார்த்த அசீமின் தீவிரமான ரசிகர்கள் பலர் மூஞ்சிக்கு நேராக அசீம் எதையும் சொல்லிவிடுகிறார் என்று இவரை புகழ்ந்து வரும் நிலையில் எல்லா ப்ரோமோயிலும் அசீம் மட்டுமே தவறாமல் வந்து விடுகிறாரே என்று இன்னும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் இந்த ப்ரோமோ மொக்கையாக இருக்கிறது கொஞ்சம் விறுவிறுப்பானதாக இருந்திருக்கக் கூடாதா என்று பீல் பண்ணி வருகிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் குயின்சிக்கு அசீம்னா மட்டும் ஏன் ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை. ஒரு சில நாட்களாக அசீமோடு நன்றாக பேசி வந்த குயின் சி பொம்மை டாஸ்க் பிறகு அவரோடு அடிக்கடி சண்டை போட்டு வருவதை குறித்தும் இன்றைய ப்ரோமோவில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நேற்று கதிரவன் பொது நல வழக்கு தொடுப்பதற்கு முன்ப வீட்டில் யாரும் டீ கப் பிளேட்டுகளை சரியாக கழுவவில்லை என்பதை குறித்து மைனா நந்தினியின் மீது தான் கம்பளைண்ட் கொடுத்தார். ஆனால் பிக் பாஸ் அது முடியாது என்று சொன்ன பிறகு மாட்டி இருப்பவர் 7 போட்டியாளர்கள் .இவர்களுக்கு யாருக்கு தீர்ப்பு கிடைக்கப் போகிறது என்பது இன்றைய எபிசொட்டில் தெரியும்.












Click it and Unblock the Notifications