ஆயிஷாவுக்கு எதிராக சதி செய்யப்படுகிறதா..? இதுதான் காரணமா..? ஆதாரங்களை வெளியிடும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் ஆயிஷாவுக்கு எதிராக விஜய் டிவியும் பிக் பாஸ் அணியினரும் சதி செய்து வருவதாக ரசிகர்கள் பலர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.
இந்த வாரம் ஓட்டுகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் இருக்கும் ஆயிஷா வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காகத்தான் அவருக்கு எதிராக பல செயல்கள் நடைபெற்று இருக்கிறது என்று ஒவ்வொரு செயல்களையும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ஜீ தமிழ் சத்யா
ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்தியா சீரியல் மூலமாக ரவுடி பேபி ஆக சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் இடத்தை பிடித்திருந்த ஆயிஷா அவருடைய நிஜ பெயரே சத்யா என்று சொல்லும் அளவிற்கு பலருக்கும் பரீட்சையமானவர்தான். சமீபத்தில் தான் சத்யா சீரியல் முடிவடைந்தது. அந்த சீரியல் முடிவடைந்த ஒரு சில வாரங்களுக்குள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆயிஷா கலந்து கொண்டார். இது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வந்தது. இதனால இவருடைய ரசிகர்கள் பலர் ஆரம்பத்தில் இருந்து இவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

வாக்குகளின் அடிப்படை
ஆரம்பத்தில் ஒரு சில நாட்களாகவே ஆயிஷா எந்த விளையாட்டிலும் அந்த அளவிற்கு ஈடுபட்டு விளையாடவில்லை என்று இவரை குறித்து பல கருத்துக்கள் பரவி வந்தது. ஆனாலும் ஒரு வாரம் இப்படி இருந்தால் அடுத்த வாரம் இவர் டோட்டலாக மாறி தன்னுடைய விளையாட்டை வேற லெவலில் காட்டி வருகிறார். இப்படியே கடந்து வந்து தற்போது எட்டாவது வாரத்தில் நின்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வாரம் ஆயிஷாவின் பெயரும் எலிமினேஷன் லிஸ்டில் இருக்கிறது. வாக்குகளின் அடிப்படையில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கின்றனர். ஏற்கனவே இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இருக்கும் நிலையில் ஆயிஷா எப்படியும் வெளியே விடுவார் என்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.

எபிசோட்டில் இல்லையே
ஆனால் இந்த வாரம் நடந்து வரும் மாறுவேட போட்டியில் ஆயிஷாவுக்கு சிம்புவின் கெட்டப் கொடுத்து இருக்கிறது. சிம்புவாகவே இவர் முடிந்த வரைக்கும் நடித்து வருகிறார். அதுவும் கதிரவனிடம் இவர் கற்றுக்கொண்டு நடிக்கும் விதத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் எபிசோட்டில் இவர் பர்பாமன்ஸ் காட்டவே இல்லையாம். மூன்று நிமிடங்களுக்கு மட்டுமே இவருடைய பெர்ஃபார்மன்ஸ் காட்டப்பட்டிருக்கிறதாம். 24 மணி நேரத்தில் பார்த்து ரசித்த இவருடைய ரசிகர்களுக்கு இந்த இது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இந்த வாரம் எப்படியும் ஆயிஷாவை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி பிளான் பண்ணி செய்து இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஓரவஞ்சனையா
விஜய் டிவியை சேர்ந்த ரச்சிதாவிற்கு மட்டும் எளிமையான கேரக்டர் கொடுத்துவிட்டு ஆயிஷாவிற்கு இப்படி ஒரு கேரக்டரை கொடுத்திருக்கிறார்கள். அதுவும் அவருக்கு ஆடை வருவதற்கு அதிகமான நேரம் ஆகிவிட்டது. அதுபோல இவருடைய பெர்ஃபார்மன்ஸ் அதிகமாக நிகழ்ச்சியில் காட்டப்படவே இல்லை. இதிலிருந்தே தெரிகிறது இந்த வாரம் ஆயிஷா தான் வெளியேற்றப்படுவார்கள் என்று ஆனால், பிக் பாஸ் ஒரு போட்டியாளருக்கு இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று சமூக வலைத்தளத்தில் அதிகமானோர் ஆயிஷாவிற்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர். ஏற்கனவே இதற்கு முன்பு சீசனில் சனம் வெளியேறப்படும் போதும் இப்படித்தான் ரசிகர்கள் இது அன்பேர் எவிக்ஷன் என்று கூறி வந்தனர். அது போல தான் இப்போதும் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications