"எதுவும் சொல்லாதீர்கள்”ரச்சிதாவிற்கு பிடித்த நபரின் போட்டோவை வெளியிட்டு கணவர் பதில்..காரணம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் ரச்சிதாவிற்கு அவருடைய கணவர் ஆறுதலாக வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
ரச்சிதாவிற்கு குழந்தையாக இருக்கும் அவருடைய பூனைக்குட்டியின் புகைப்படத்தை வெளியிட்டு தினேஷ் கார்த்திக் பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
நேற்றைய எபிசோடு ரச்சிதா சோகமாக இருந்த நிலையில் அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக கருத்தை அவருடைய கணவர் வெளியிட்டு இருக்கிறார்.

குடும்பத்தினரின் வருகை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது ப்ரிஸ் டாஸ்க் தொடங்கிய. இன்று காலையில் ஆரம்பத்தில் மைனா நந்தினியின் குழந்தை மற்றும் கணவர், தம்பி என மூவர் உள்ளே வந்திருந்தனர். முதல் பிரமோவில் குடும்பத்தினர் அனைவருடைய வருகையும் காட்டப்பட்டது. ஆனால் ரச்சிதாவின் குடும்பத்தில் யார் வரப்போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தனர். காரணம் ரச்சிதா அவருடைய கணவர் தினேஷ் கார்த்திக்கை பிரிந்து இருக்கும் நிலையில் அவருடைய கணவர் அவருக்காக அதிகமாக சமூக வலைதளத்தில் சப்போர்ட் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

ரசிகர்களின் விருப்பம்
தினேஷ் செய்து கொண்டிருக்கும் வேலைகள் உள்ளே இருக்கும் ரச்சிதாவிற்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால் உள்ளே தினேஷ் சென்றதும் ரச்சிதாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் அதை ஏற்றுக் கொள்வாரா? என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆரம்பத்தில் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவின் பின்னாடியே சுற்றிக் கொண்டிருக்கும்போது கூட தினேஷ் உள்ளே போக வேண்டும் என்று பலர் அன்பு வேண்டுகோள் வைத்தனர். தற்போது ராபர்ட் வெளியே வந்து நிலையில் ரச்சிதாவிடம் தினேஷ் நேரடியாக சென்று மன்னிப்பு கேட்டு இருவரும் சேர்ந்து வாழலாம் என்று பலர் கருத்துக் கூறி வருகின்றனர்.

மீண்டும் தொடரும் கிண்டல்
ஆனால் இந்த நிலையில் மைனா நந்தினியின் குடும்பத்தினர் வந்து சென்றனர். அடுத்ததாக யார் குடும்பம் வரும் என்று அனைவரும் ஆர்வத்தோடு இருக்கும்போது மைனா அடுத்ததாக ரச்சிதா அல்லது கதிரின் குடும்பம் வருமாக இருக்கும் என்று கூறிக் கொண்டிருக்கும்போது ஷிவின் மற்றும் மைனா இருவரும் சேர்ந்து ரச்சிதாவை கிண்டல் செய்து இருக்கின்றனர். ப்ளீஸ் மீண்டும் ராபர்ட் மாஸ்டர் வந்தால் நன்றாக இருக்கும் என்று கலாய்த்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே ரச்சிதாவை ராபட் மாஸ்டர் ரோடு இணைத்து பேசியதால் தினேஷ் ரச்சிதாவின் கணவர் தினேஷ் மைனாவை திட்டிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் அவர் அதே வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார்.

குதர்க்கமான பதிவு
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் ரச்சிதா ஆசையாக வளர்த்து வரும் பூனைக்குட்டியின் புகைப்படத்தை வெளியிட்டு அதில் உங்களிடம் எதுவும் சொல்ல முடியாத போது, நீங்கள் எதுவும் சொல்லாதீர்கள் என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார். இந்த வாரம் ரச்சிதா நாமினேஷன் லிஸ்டில் இல்லாமல் இருந்தாலும் ரச்சிதாவை சக போட்டியாளர்கள் எல்லோ கார்டு கொடுத்து இருந்தனர் அதை குறித்து தினேஷ் இப்படி கூறுகிறாரா? அல்லது ரச்சிதாவிடம் எந்த ரகசியத்தையும் யாரும் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கும்போது ரச்சிதா மட்டும் அவருடைய மனதில் இருப்பதை பேச வேண்டும் என்று சக போட்டியாளர்கள் நினைப்பதை குறித்து இவர் எப்படி பேசி இருக்கிறாரா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications