அசீம் வெற்றியை குறித்து பிக் பாஸை விளாசும் காஜல் பசுபதி.. தொடர்ந்து கருத்தை குவித்து வரும் காரணம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றோடு முடிவடைந்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த முடிவு ரசிகர்கள் பலருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாத அதிர்ச்சி முடிவாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அசீமுடைய நடவடிக்கையை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து கருத்து தெரிவித்து வந்த காஜல் பசுபதி தன்னுடைய கோபத்தை பிக் பாஸ் மீது காட்டி பல்வேறு பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் போட்டியாளர்
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய காஜல் பசுபதி தற்போது நடந்து முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை பற்றி பல்வேறு பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து இந்த சீசனில் டைட்டில் வின்னர் விக்ரமன் ஆகத்தான் இருக்க வேண்டும் அல்லது ஷிவின் ஆக இருக்கலாம் என்று தன்னுடைய ஆதரவை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அசீம் போன்று ஒரு நபர் டைட்டில் ஜெயித்தால் அது ஒரு தப்பான உதாரணமாக மாறிவிடும் சமுதாயத்தில் அடுத்தவர்களை மட்டம் தட்டி "தான்" என்ற ஆணவத்தில் ஆடும் நபர்களுக்கு மதிப்பு கொடுத்து உள்ளே இருக்கக் கூடாது ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பல்வேறு தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதே கருத்தை காஜல் பசுபதியும் தெரிவித்து கொண்டு இருந்தார்.

பிக் பாஸுக்கு எதிராக வெறுப்பு
ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த கடைசி விருது வழங்க நிகழ்வு பலருக்கும் பெரிய அதிர்ச்சியாக மாறிவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனுக்குத் தான் டைட்டில் கிடைக்க வேண்டும் என்று அதிகமான ரசிகர்கள் எதிர்பார்த்து ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் சொற்ப வாக்குகளின் வித்தியாசத்தில் அசீம் ஜெயித்து விட்டதாக கடைசியில் கூறப்பட்டதும், ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் தங்களுடைய இயலாமையும் கோபத்தையும் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தாங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கப் போவதில்லை என்றும் அதனால் தங்களுக்கு ஹாட்ஸ்டார் தேவை இல்லை என்றும் பலர் அன்இன் ஸ்டால் செய்து கொண்டிருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் விஜய் டிவியை புறக்கணிக்க போவதாகவும் கூறி வருகின்றனர்.

காஜல் பசுபதியின் பதிவுகள்
நிலையில் அசீம் தான் டைட்டில் வின்னர் என்ற தகவல் வெளியான சிறிது நேரத்தில் இருந்தே தொடர்ந்து காஜல் பசுபதி பல்வேறு பதிவுகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், "எப்படிடா எங்கேயும் உண்மையா, டீசன்ட்டா, நல்லவங்களா,நேர்மையா இருந்தா ஜெயிக்கவே முடியாதா? என்று முதல் பதிவை வெளியிட்டு இருந்தார். அதை தொடர்ந்து தீமை தான் வெல்லும் யார் தடுத்தாலும் என்று இரண்டாவது பதிவையும் வெளியிட்டு, அதற்குப் பிறகு சீசன் 6 வெற்றிகரமாக முடிஞ்சு போச்சி இனி சீசன் 7க்கு யாரை கூப்பிடலாம்? மறுபடியும் அசிமையே கூப்பிட்டு அவருக்கு திருந்த ஒரு வாய்ப்பு தரலாமா ?என்று விஜய் டிவி யோசிப்பது போன்ற ஒரு மீம்ஸை ஷேர் செய்திருந்தார்.

ஆண் செய்தால் ஹீரோவா
அதைத்தொடர்ந்து அசிம் டைட்டில் ஜெயித்ததும் விக்ரமன் தோளில் கமல்ஹாசன் கையைப் போட்ட படி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, பார்த்து செத்துட்டேன்டா என்கிற மாதிரி ஒரு பதிவை பகிர்ந்து இருக்கிறார். அதற்குப் பிறகு இன்னைக்கு அசீம் பண்ணுவதை விட ரொம்பவே கம்மியா தான் வனிதா, ஐஸ்வர்யா, காயத்ரி ரகுராம் பண்ணாங்க. அவங்களை பஜாரி னு எவிக்ட் பண்ணிட்டு அசீமுக்கு தீ பொறி பறக்க விட்டிருக்கீங்க, சமூகம் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்.. என்கிற மீம்ஸை பகிர்ந்து இருக்கிறார். தனக்கு பிக் பாஸ் மீது இருக்கும் கோபத்தை தொடர்ந்து பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டு காஜல் பசுபதி காட்டி வருகிறார். இதை ரசிகர்கள் பலரும் ஆதரித்து வருகின்றனர். அசீம் உடைய ரசிகர்கள் இந்த பதிவை கலாய்த்து திட்டி வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications