"எல்லோருக்கும் மாற்று இருக்கிறது ஆனால் மாற்று இல்லாத ஒரே உறவு” உருக்கமாக பேசிய அசீம்.. காரணம்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடந்து வரும் மாறுவேட போட்டியில் பெற்றோர் குறித்து விழிப்புணர்வு ஊட்டும் விதமாக அசீம் பேசியதை பார்த்து சக போட்டியாளர்கள் கண்கலங்கி அழுது இருக்கின்றனர்.
மாறுவேட போட்டியின் கடைசியாக போட்டியாளர்கள் அனைவரும் நடுவர்களின் முன்பு தங்களுடைய திறமையை காட்டி வருகின்றனர். அதில் ஒரு ஆண் தன்னுடைய மனைவி மற்றும் பெற்றோர் இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் நிலையை தத்ரூபமாக காட்டியிருக்கிறார்.

ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமான புதியதில் இருந்து சின்னத்திரை நடிகராக அறிமுகமான அசீமுக்கு அதிகமான ஆதரவு இருந்து வருகிறது. அவர் டாஸ்க் விஷயத்தில் பல போட்டியாளர்களிடம் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சக போட்டியாளர்களை மரியாதை இல்லாமல் பேசுகிறார். என்றெல்லாம் இவரை பற்றி பல்வேறு சலசலப்புகள் வந்தாலும் இவருக்கு ஆதரவு மட்டும் குறைந்த பாடு இல்லை எத்தனையோ முறை போட்டியாளர்கள் இவரை எலிமினேஷன்காக நாமினேசன் செய்தாலும் முதல் இடத்தில் இவர் தான் வாக்குகளின் அடிப்படையில் இருந்து வருகிறார்.

அசீமின் நாடகம்
ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு கொடுத்து வரும் ஆதரவின் காரணமாகவே இவர் என்னதான் சக போட்டியாளர்களை திட்டினாலும் இவர் வெளியேற்றப்படாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் நடந்து வரும் டாஸ்க்கில் மாறுவேட போட்டியில் இவருக்கு சிவாஜி கணேசனின் கெட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் நடித்து வரும் நிலையில் இன்று போட்டியாளர்கள் நடுவர்களில் முன்பு தங்களுடைய தனித்துவத்தை காட்டி வருகின்றனர். அதில் அசீம் ஒரு நாடகத்தை நடித்து இருக்கிறார். அதில் ஒரு குழந்தை ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு தம்பதியினரால் தத்தெடுத்து வளர்க்க ப்பட்டு வருகிறது. ஆனால் அந்த குழந்தைக்கு தான் அனாதை இல்லத்தில் இருந்து வந்தவர் என்பது தெரியாது.

ஒரு ஆணின் தவிப்பு
அந்தப் பையன் வாலிப வயது அடைந்ததும் அவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு அவருடைய மனைவி உங்களுடைய அப்பா நம் வீட்டில் இருந்தால் என்னால் அவரைப் பார்க்க முடியாது என்று கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் எனக்கு இங்கே பிரைவசி இல்லை அதனால் அவரை அனாதை இல்லத்தில் சேர்த்து விட படி சொல்கிறார். அப்படி செய்யவில்லை என்றால் நான் இந்த வீட்டை விட்டு என்னுடைய குழந்தையோடு கிளம்பி விடுவேன் என்று சொல்கிறார். அதனால் வேறு வழி இல்லாமல் அந்தப் பையனும் அவருடைய அப்பாவை அனாதை இல்லத்தில் சேர்க்கிறார். பிறகு இவர் பண கஷ்டத்தில் இருக்கிறார். அப்போது அவருடைய அப்பாவின் முன்பு போய் நிற்கிறார். அவர் என்னவென்று கேட்காமல் அவருடைய சொத்தை எல்லாம் எழுதிக் கொடுக்கிறார். இதைக் குறித்து தனது மனைவியிடம் கூறி அழுகிறார். நான் உனக்காக ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். என்னுடைய தந்தை நான் கேட்காமலே என்னுடைய முகத்தை அறிந்து எல்லாத்தையும் செய்கிறார் என்று கதறி அழுகிறார்.

பெற்றோரை பாதுகாப்போம்
இந்த நாடகம் முடிந்த பிறகு அசீன் உலகத்தில் கணவன் மனைவி அண்ணன் தங்கை என பல உறவுகள் இருக்கலாம். ஆனால் இவர்கள் அனைவருக்கும் மாற்றி என்று ஒன்று இருக்கும். ஆனால் மாற்று என இல்லாத உறவு என்றால் அது அம்மா அப்பா உறவு மட்டும்தான். அப்படிப்பட்ட பெற்றோரை நாம் அவர்களுடைய அருமை தெரியாமல் உதாசினப்படுத்தி இருக்கிறோம். நாம் சிறுபிள்ளையாக இருக்கும்போது நம்மளுடைய மலம், ஜலம் எல்லாம் துடைத்து நம்மை பாதுகாத்தவர்களை அவர்கள் கடைசி காலத்தில் வயது முதிர்ந்த காலத்தில் பார்க்க வேண்டும் என்பது நமது உரிமை அல்ல கடமை. நம் ஒவ்வொருவரையும் கடமை. பெற்றோர்கள் இருக்கும்போது அவர்களுடைய அருமை தெரியவில்லை. அவர்கள் இறக்கும் போது தான் அவர்களுடைய வழி புரிகிறது. அப்படிப்பட்ட உன்னத உறவை பெற்றுவோம். ஆதரவற்றோர் என்னும் அவல நிலையை மாற்றுவோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது வீடியோ சமூக வலைதளத்தில் பரவி ரசிகர்களிடம் பாராட்டை பற்றி வருகிறது.












Click it and Unblock the Notifications