இரவு முழுக்க தூங்காத பவா செல்லதுரை.. கேப்டன் ஆனதும் சரவணன் சொன்ன வார்த்தையால் வந்த வினை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து எழுத்தாளர் பவா செல்லத்துரை திடீரென்று வெளியேறி இருக்கிறார்.
அவர் வெளியேறுவதற்கு இந்த வார வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சரவணன் சொன்ன வார்த்தை தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அதுபோல இரண்டாவது முறையாக எந்த வாரமும் சின்ன வீட்டில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தாராம். அதோடு மேலும் சில பிரச்சனைகள் நடைபெற்றிருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் ஆரம்பத்திலேயே அறிமுகமானவர்கள். அவர்களின் பலதரப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் எழுத்தாளராகவும், நடிகராகவும் இருக்கும் பவா செல்லத்துரையும் ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி இருந்தார்.
ஆரம்பத்தில் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்ற போது இவரெல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு எதற்காக போனார். இவருக்கு இருக்கும் பெயரையும் புகழையும் கெடுத்துக் கொள்ளப் போகிறார் என்று பலர் கருத்து கூறி வந்தனர். அதே நேரத்தில் ஒரு வாரத்திற்குள் இவர் வெளியேறி விடுவார் என்றும் பலர் கூறி வந்தனர். அதுபோல இவர் தன்னுடைய கதை சொல்லும் திறமையின் மூலமாக பலருடைய மனதை கவர்ந்திருந்தார். அதே நேரத்தில் இவர் வீட்டிற்குள் எச்சில் துப்பிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாகி வந்தது.
அதுபோல நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா மற்றும் விசித்திரா இடையே பிரச்சனை ஏற்பட்டபோது கூட இவர் ஜோவிகாவிற்கு ஆதரவாக படிப்பு அத்தியாவசியம் இல்லை என்று சொன்ன கருத்தும் சமூக வலைத்தளத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதுபோல ஜோவிகாவிற்கு ஆதரவாக பேசி அவருக்கு கை கொடுக்க அதற்கு வயது வித்தியாசம் கூட பார்க்காமல் ஜோவிகா அவருக்கு கை கொடுக்க மறுத்த விஷயமும் பலருக்கும் அதிருப்தியை கொடுத்திருந்தது.
இந்த நிலையில் முதல் வாரம் முடிவடைந்திருக்கும் நிலையில் இரண்டாவது வார தலைவராக நடிகர் சரவணன் அதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியலின் கண்ணன் தேர்வாகி இருக்கிறார். இவர் பவா செல்லதுரை குறித்து பேசும்போது "சோம்பேறி" என்று குறிப்பிட்டாராம். அது போல இந்த வாரமும் இவர் சின்ன வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். இதனால் அதிர்ச்சியான பவா இரவு முழுக்க தூங்காமல் இருந்தாராம்.

அதுபோல தன்னால் இந்த இந்த வீட்டிற்குள் பல டாஸ்குகள் செய்ய முடியாது. ஆனால் எல்லாம் தெரிந்து தான் இந்த வீட்டிற்குள் வந்தேன். ஆனால் இங்கே வந்த பிறகு அதிகமான வன்மங்கள் என்னை சுற்றி இருப்பது எனக்கு தெரிகிறது. அதனால் என்னால் இங்கே தொடர முடியாது. என்னை வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் என்று பிக் பாஸ் இடம் பேச அதற்கு பிக் பாஸ், உங்களை மக்கள் இந்த வீட்டிற்குள் பார்க்க விரும்புகிறார்கள்.
அதனால் தான் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்றெல்லாம் பேசிப் பார்த்தார். ஆனால் அதற்கு பவா செல்லதுரை சம்மதிக்கவில்லை. அதோடு நீங்கள் உடனே இந்த வீட்டை விட்டு இன்று கிளம்ப முடியாது இன்று இரவு வரைக்கும் இங்கே தான் இருக்க வேண்டும். நாங்கள் உங்களுக்காக ஒரு மருத்துவரை அனுப்புகிறோம்.
அவரிடம் பேசிவிட்டுஅனுப்புகிறோம் என்று பிக் பாஸ் கூறி இருந்த நிலையில் அந்த மருத்துவரிடமும் பேசிவிட்டு மீண்டும் பவா என்னால் இங்கு இருக்க முடியாது. என்னை அனுப்பி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால் இன்னும் சிறிது நேரத்தில் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விடுவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications