பிக் பாஸில் அதிர்ச்சி.. நேரடியாக இறுதிக்கு போகும் போட்டியாளர்.. எதிர்பாராமல் வெளியேற்றப்பட்ட தினேஷ், ரவீனா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 26 ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இன்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு போகும் போட்டியாளர்களுக்கான டாஸ்க் தொடங்கி இருக்கிறது.
அந்த டாஸ்க்கில் தினேஷ், விசித்ரா, ரவீனா மூவரும் தோற்று வெளியேறி இருக்கின்றனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் டாஸ்க்கும் விறுவிறுப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.
இதுவரைக்கும் வாயால் சவடால் விடும் டாஸ்க் வைத்து ரசிகர்களை கடுப்பேத்திய பிக் பாஸ் இப்போது உருப்படியான டாஸ்க் வைத்திருப்பது முதல் ப்ரோமோவில் தெரிகிறது. இதுவும் பெரிய அளவில் கஷ்டம் இல்லை... இதற்கு முந்தைய சீசன்களில் ஒப்பிடும்போது இந்த சீசனில் டாஸ்க் பெரிய அளவில் கஷ்டமானதாகவே இல்லாமல் இருக்கிறது.
இதுவரைக்கும் இந்த சீசனில் அதிகமாக பந்து வைத்து டாஸ்க் வைக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல எதிரில் நிற்பவர்களை பேசியே ஆப் செய்வதுதான் இப்போது அதிகமாக நடக்கும் டாஸ்காக இருக்கிறது. ஆனாலும் இன்று இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது செங்கல் ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. தங்களுக்கு ஒரு முயல் பொம்மை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த முயல் பொம்மையை கொடுக்கப்பட்ட கட்டத்திற்குள் வைத்து அந்த செங்கற்களை சுற்றி வீடு போன்று அமைத்து தங்களுடைய முயலை பாதுகாக்க வேண்டும். பிறகு அந்த செங்கற்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தூக்கிப்போட்டு விட்டு தான் வைத்திருக்கும் முயலோடு மேடையில் நிற்க வேண்டும்.
இதற்கான டாஸ்க் வீட்டிற்குள் இருக்கும் 10 போட்டியாளர்களும் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு நடுவராக அர்ச்சனா மற்றும் விஜய் இருக்கின்றார். விஷ்ணு, தினேஷ், நிக்சன், மாயா, பூர்ணிமா, ரவீனா, விசித்ரா, மணி இவர்கள் எட்டு பேரும் தங்களுக்கான முயல் பொம்மையை பாதுகாக்கும் டாஸ்க்கில் விளையாடுகின்றனர்.

அதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வராமல் ரவீனா, விசித்ரா, தினேஷ் மூன்று பேரும் டாஸ்க்கில் தோற்று வெளியேறி இருக்கின்றனர். அந்த டாஸ்க்கில் இறுதியாக மேடையில் விஷ்ணு, நிக்சன், மணி, பூர்ணிமா, மாயா என 5 பேரும் மேடையில் இருக்கின்றனர். இவர்களில் யார் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தேர்வாக போகிறார் என்பதை இன்றைய எபிசோட்டில் பார்க்கலாம்.

ஏற்கனவே கடந்த வாரம் முழுக்க மாயா செய்த செயல் மற்றும் அவருடைய எக்ஸ்பிரஷன் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் மாயா, பூர்ணிமா இந்த டாஸ்கை வெற்றி பெற்று விடக்கூடாது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆனால் என்ன நடந்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications