பிக் பாஸ் 7: வஞ்சம்.. விசித்ரா மற்றும் விஷ்ணுவை கிழித்த கமல்.. காரணம் நேற்று இரவு நடந்த சம்பவமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் டிசம்பர் இரண்டாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இன்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் ப்ரோமோ இப்போதுதான் வெளியாகி இருக்கிறது.

அதில் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டிற்குள் வஞ்சப்புகழ்ச்சியாக சிலர் விளையாடுகிறார்கள் என்று விஷ்ணு மற்றும் விசித்திராவை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளில் இருந்து சண்டை சச்சரவுகள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் கமல்ஹாசன் என்ன பஞ்சாயத்து செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் இந்த சீசனில் கமல்ஹாசன் மாயா கேங்கோடு சேர்ந்து அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு சொல்கிறார் என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருந்தது.
அதை தொடர்ச்சியாக சில வாரங்களாக கமல், நான் யாருக்கும் சார்பானவன் கிடையாது. நான் பொதுவானவன். நானும் இங்கே சம்பளம் வாங்கிக் கொண்டுதான் வந்திருக்கிறேன். நீங்களும் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். நான் இல்லாமல் நீங்கள் கண்டன்ட் கிரியேட் பண்ணி விளையாடுங்கள். என்னை வைத்து விளையாடாதீர்கள் என்று பல புரியாத புதிர்களை கடந்த வாரத்திலும் அதற்கு முந்தைய வாரத்திலும் எடுத்துவிட்டு இருந்தார்.
இதனால் இந்த வாரத்தில் கமல்ஹாசன் என்ன பேசப்போகிறாரோ என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருந்தது. இப்படியான நிலையில் இன்றைய சனிக்கிழமை எபிசோடுக்கான ப்ரோமோ வழக்கம் போல மதியத்திற்கு பிறகு தான் வெளியாகி இருக்கிறது. அதில் ஆரம்பமானதுமே கமல்ஹாசன் உள்ளே சிலர் தன்னை பெஸ்ட் என்று காட்டிக் கொள்வதற்காக அடுத்தவர்களை ஒஸ்டு என்று காட்ட முயற்சி செய்கிறார்கள்.
அதை காண முடிகிறது. அப்படின்னா என்னங்கன்னு நீங்க கேட்கலாம். வஞ்சப்புகழ்ச்சி மாதிரி இவங்க பண்றாங்களா? என்று நீங்க கேட்டா, அது புகழ்ச்சி கூட எடுக்கிறது இல்ல. வஞ்சம் மட்டும் தான். புகழ்ச்சி எல்லாம் தனக்கே, வஞ்சமெல்லாம் பிறருக்கு என்று சிலர் விளையாடிக்கிட்டு இருக்காங்க. இதன் விளைவு என்ன என்பதை இன்று இரவு பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்.
அதே நேரத்தில் கமல்ஹாசன் இவ்வளவு கறாராக சொல்வதற்கு காரணம் கடந்த வாரத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே விசித்திராவை பாராட்டி இருந்தார். ஆனால் இந்த வாரம் முழுக்கவே விசித்திராவின் விளையாட்டு ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் பூர்ணிமா மற்றும் மாயாவோடு சேர்ந்து அர்ச்சனாவோடு அடிக்கடி கருத்து மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
அதுபோல விஷ்ணுவோடு சண்டையிட்டு அர்ச்சனா ஒரு கட்டத்தில் கதறி அழுது இருந்தார். அப்போது விசித்திரா இந்த பொண்ணு என்ன பண்ணுதுன்னு தெரியல. எதை சொல்லணும் என்றாலும் கேமரா முன்னாடியே பேசிகிட்டு இருக்கு என்று கூறியிருப்பார். அதுபோல நேற்று முழுக்க விஷ்ணுவும் அர்ச்சனாவோடு சண்டையிட்டு பல தரக்குறைவான வார்த்தைகளை பேசி இருந்தார். ஆனால் இரவு தூங்கும் போது மன்னிப்பு கேட்டு உங்களுக்கு கேப்டன் பதவி முக்கியமா என்று கேட்டிருந்தார்.
இந்த வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபோல நேற்று விசித்திராவும் தன்னோடு கையில் கயிறு கட்டப்பட்டிருந்த கூல் சுரேஷ் இடம் அடிக்கடி சண்டை இட்டு இருந்தார். அதை குறிப்பிட்டு இன்று கமல்ஹாசன் முதல் ப்ரோமோவில் பேசி இருக்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட்டில் பார்க்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications