பிக் பாஸ் 7: கதறி அழுத பூர்ணிமா.. பேச விட்டு வேடிக்கை பார்க்கும் பிக்பாஸ்.. மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 8ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் ஒரு டாஸ்க் கொடுத்து அதில் ஜெயிக்கிறவர்களுக்கு ஐந்து ஸ்டார் என்று பிக் பாஸ் புது டாஸ்க் கொடுத்து இருக்கிறார்.
அதோடு தாங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எதிரில் இருப்பவர்களை ஜெயிக்க விடாமல் அவர்களைப் பற்றி பேச வேண்டும் என்றும் டாஸ்கில் கூறப்பட்டிருக்கும் நிலையில் பூர்ணிமா கதறி அழுது இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் எப்போது யார் சண்டையை தொடங்குவார்கள் என்று யாராலும் சொல்ல முடியாமல் இருக்கிறது. சென்னை முழுக்க மிக்ஜாம் புயலால் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் அந்த பாதிப்பு இல்லாததால் உள்ளே சண்டை சச்சரவுகள் தான் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. நேற்று முழுக்க அர்ச்சனா மற்றும் நிக்சன் சண்டை பெரிய அளவில் இருந்தது.
இதில் யார் பக்கம் சரி யார் பக்கம் தவறு என்ற கேள்விகளும் இணையத்தில் கருத்து மோதல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இன்று இந்த பிரச்சனையை மேலும் பெரிதாக்குவதற்காக பிக் பாஸ் ரூம் போட்டு யோசித்து புது டாஸ்க் கொடுத்து இருக்கிறார். ஒரு ஸ்டாருக்காகவே கல்லூரி டாஸ்க்கில் இத்தனை நாட்களாக தங்களுடைய மனதில் இருந்த வன்மத்தை எல்லாம் போட்டியாளர்கள் போட்டி போட்டு கொட்டிக் கொண்டிருந்தனர்.
இப்போது ஒரே டாஸ்க்கில் 5 ஸ்டார் கொடுக்கப்படும் அதை நீங்கள் பெறுவதற்காகவும் போராடலாம் அல்லது வேறு ஒருவருக்கு போக கூடாது என்பதற்காகவும் நீங்கள் போராடலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதில் ஒரு டேபிளில் ஸ்டார் வைக்கப்பட்டு அதை ரவுண்டு கட்டி அணைத்து போட்டியாளர்களும் நின்றபடி தன்னைப் பற்றி பெருமையாகவும், மற்றவர்களை பற்றி குறைகளையும் அள்ளி அடுக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதில் கடைசியில் பூர்ணிமா விஷ்ணு பேசிய வார்த்தைகளால் கதறி அழுது கொண்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டை சச்சரவு இருந்தால்தான் அந்த நிகழ்ச்சியை பற்றிய பரபரப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கும் என்பதை புரிந்து கொண்ட பிக் பாஸ் அதற்கு தகுந்த மாதிரியே காயை நகர்த்தி இன்று 5 ஸ்டார்களை காட்டி அதனால் சண்டையை கொளுத்தி போட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று நிக்சன் மற்றும் அர்ச்சனா பிரச்சனைக்கு மத்தியிலும் விஷ்ணு கறாராக பேசிக் கொண்டிருந்தார். இன்று பூர்ணிமாவையும் எதையோ பேசி அழ வைத்திருக்கிறார். இதனால் இந்த வாரம் நிக்சனை அடுத்து விஷ்ணுவுக்கும் கமல் முன்பு அர்ச்சனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கும் என்பதை நாளை வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications