பிக் பாஸ் 7: லைவ்வை மறந்து கெட்ட வார்த்தை பேசிய விக்ரம் தந்தை.. வார்னிங் கொடுத்த பிக் பாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் சரவணன் விக்ரமிற்க்கு அவருடைய தந்தை மற்றும் தாய் வந்திருக்கின்றனர்.

அப்போது விக்ரமனின் தந்தை அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று அவரையும் மீறி கெட்ட வார்த்தை பேசி இருக்கிறார்.

அதோடு விக்ரமுக்கு ஆதரவாக விஷ்ணுவை முகத்துக்கு நேராகவே விக்ரமின் அம்மா திட்டி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

bigg boss tamil season 7 Freeze Task Vikram Father who forgot live and spoke bad words

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் என்ன நடந்தது என்பதை விரிவாக இப்போது பார்ப்போம். ஏற்கனவே இந்த வார நாமினேஷனில் மூன்று போட்டியாளர்கள் சிக்கி இருக்கும் நிலையில் இந்த வாரத்தில் சரவண விக்ரம் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

bigg boss tamil season 7 Freeze Task Vikram Father who forgot live and spoke bad words

ஏற்கனவே அவர் தன்னைத்தானே டைட்டில் வின்னர் என்று அழைத்துக் கொண்டு இத்தனை நாட்கள் எப்படி இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் பயணித்தார் என்பது பலருக்கும் கேள்விக்குறியாக தான் இருக்கிறது. பெரிய அளவில் எந்த இடத்திலும் தன்னுடைய கருத்தை தைரியமாக எடுத்து வைக்காத சரவணன் விக்ரம் குறித்து அதிகமானோர் அடிக்கடி விமர்சித்து வரும் நிலையில் இன்று ஃப்ரீஸ் டாஸ்க்கில் அவருடைய அம்மா மற்றும் அப்பா வந்திருக்கின்றனர்.

bigg boss tamil season 7 Freeze Task Vikram Father who forgot live and spoke bad words

அப்போது அவர்கள் ஆரம்பத்தில் விக்கிரமை பார்த்ததும் கண்கலங்கி அழுது இருந்தனர். பிறகு விக்ரமிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்போது விக்ரம் தன்னுடைய தந்தையிடம் யாரு நல்லா கேம் விளையாடுறாங்க என்று கேட்கிறார். அதற்கு விக்கிரமுடைய அப்பா "மயிராண்டி" எல்லாம் ஆடுவாங்க. நீ கவலைப்படாம ஆடு... என்று சொல்லிவிட்டு பிறகு தான் கெட்ட வார்த்தை பேசியதற்காக கேமராவிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

bigg boss tamil season 7 Freeze Task Vikram Father who forgot live and spoke bad words

அதோடு நீ நாம சொல்லிக்கிட்ட மாதிரி விளையாடு, ஜாலியா இரு.. எதற்கு பயப்படுற? எப்பவும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்காத என்று அட்வைஸ் கொடுக்கிறார்கள். அதற்கு விக்ரம் நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் முதல் வாரத்தில் ஜாலியாக இருந்தேன். இரண்டாவது வாரத்தில் தலைவர் பதவி வந்ததும் எனக்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டது என்று சொல்லகிறார்.

அதற்கு அவருடைய பெற்றோர் உன்னை பற்றி சிலர் முதுகுக்கு பின்னாடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீ அவர்களிடம் கவனமாய் இரு என்று அட்வைஸ் கொடுக்கிறார்கள். அதோடு நான் எப்படின்னு உனக்கு தெரியுமில்ல? இப்போ உனக்காக உங்க அம்மா டெய்லி சாமி கும்பிடுறாங்க. நானும் உனக்காக கடவுளிடம் வேண்டுகிறேன் நீ நல்லபடியா இருக்கணும் வெளிய நல்ல பேரோட வரணும் என்று தான் எங்களோட ஆசை என்று விக்ரம் அப்பா சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

அதோடு நிறைய விஷயங்களை பற்றி இவர்கள் விவாதிப்பதை பார்த்ததும் பிக் பாஸ் இவர்களுக்காக எல்லா விஷயத்தையும் பேசக்கூடாது என்று வார்னிங் கொடுக்கிறார். அதுபோல விஷ்ணுவிடம் விக்ரமின் அம்மா நீ தான் என்னுடைய பையனை அதிகமாக திட்டுற, அவனுடைய முதுகுக்கு பின்னாடி ரொம்ப தப்பு தப்பா பேசுற, அதை எல்லாம் வெளியில காட்டுறாங்க என்று சொல்ல, அதற்கு விக்ரம் சரி விடுங்கம்மா அவன் என்னோட நண்பன் அதனால அவ ன்என்ன வேணும்னாலும் பேசிட்டு போகட்டும் என்று பெருந்தன்மையாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அதோடு மாயாவிடமும் நீங்க உங்களுக்கு தேவைக்காக விக்ரமை பயன்படுத்தி இருக்கீங்க என்று விக்ரம் உடைய அம்மாவும் அப்பாவும் சொல்ல மாயாவின் முகம் மாறிவிடுகிறது. அப்படியே பேசிக் கொண்டிருக்கும்போது விசித்திராவை விக்ரம் உடைய பெற்றோர் பெருமையாக பேசிக் கொண்டிருக்கும்போது விசித்திரா நீங்க உங்க பையனே நல்லா வளர்த்திருக்கீங்க என்று சொல்லகிறார்.

அதற்கு சந்தோஷப்பட்ட விக்ரமுடைய பெற்றோர் எங்களுக்கு இதுவே போதும். அவன் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று கூட எங்களுக்கு இனி தேவை இல்லை. இந்த ஒரு வார்த்தை எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று தான் நாங்கள் ஆசைப்பட்டோம். அது உங்க வாயால கெடச்சது எங்களுக்கு ரொம்ப சந்தோசம் என்று பேசியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+