நான் ‘‘அவங்களோட” PR தான்.. புகழ், குரேஷிக்கு பதிலடி கொடுத்த கமல்.. ஆனால் கடைசியில் இப்படி சொல்லிவிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே இன்று நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு புகழ் மற்றும் குரேஷி நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் மற்றும் மாயாவை வைத்து கலாய்த்து பேசி இருந்தனர். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

விஜய் டிவி பிரபலங்களாக இருந்துவிட்டு கமல்ஹாசனை இப்படி ஓபன் ஆக நிகழ்ச்சியில் கலாய்த்து இருக்கிறார்கள் என்று பலரும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வந்த நிலையில் புகழ் மற்றும் குரேஷி இருவரும் தனித்தனியாக தாங்கள் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் ரசிகர்கள் கமல்ஹாசன் ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இது புகழ் மற்றும் குரேஷிக்கு பதிலடி என்று கேப்ஷன் கொடுத்து வருகிறார்கள். அதில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

Bigg Boss Tamil season 7 grand finale Kamal retaliated against kuraishi and pugazh

அந்த வகையில் அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில் ரசனையில் விமர்சனம் இல்லாமல் ரசிகனும் வளர மாட்டான் கலைஞனும் வளர மாட்டான். அதை ஏற்றுக்கொள்ளும் பாங்கு இருக்க வேண்டும். விமர்சகர்களுக்கும் விமர்சிக்கும் பாங்கு இருக்க வேண்டும்.. ஏனென்றால் நாளைய கலைஞர்கள் ஆக அந்த விமர்சகர்களும் வரக்கூடும் பட்சத்தில் அவர்கள் தனக்கென தனிப்பாங்கு இன்றே அமைத்துக் கொள்வது சிறந்தது.

அதனால் தான் ஊடகங்களில் பேசும்போது மரியாதையா பேசணும் என்று சொல்றது. காரணம் அது எங்களுக்கு மரியாதை வேண்டும் என்று அல்ல... நாளை அது உங்களுக்கு தேவைப்பட்டால் வரும் சந்ததியினர் உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதுபோல எங்களுக்கு தெரியும் நாங்கள் எங்களுடைய மூத்தாரை எப்படி மரியாதை கொடுத்தோம் என்பது, அதற்கு இன்னும் உதாரணமாக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நடிகர் திலகம் மற்றும் பாலச்சந்தர், நாகேஷ் போன்றவருக்கு நான் சம்பளம் வாங்காத பிஆர்ஓ அந்த மரியாதை இல்லாமல் அந்த விமர்சனம் இல்லாமல் என்னுடைய தகப்பனாராக இருந்தாலும் அவரை நான் விமர்சனம் செய்து பழகியவன். அந்த விமர்சனம் இல்லாமல் யாராலும் வளர முடியாது. அதே நேரத்தில் அதில் மரியாதை இல்லாமல் வெறும் விமர்சனத்தை வைத்து வளர்ந்திடவும் முடியாது. அதற்கு உதாரணமாக பம்மல் கே சம்பந்தம் திரைப்படத்தில் வருவது போன்று மல்லாக்க படுத்துட்டு எச்ச துப்புவது போல தான்.

அதாவது எதிர் காத்துல எச்சி முடியாதே என்பதுதான் என்னுடைய கருத்து. காரணம் அந்த எச்சி உங்க மூஞ்சிலேயே படும். அதனால எதிர்காத்து எப்பவும் அடித்துக் கொண்டிருக்கும் என்பதை மறந்து விடாதுங்க... என்று அந்த வீடியோவில் கமல்ஹாசன் பேசியிருக்க அதை இப்போது புகழ் மற்றும் குரேஷிக்கு ரசிகர்கள் இதை பார்த்து கத்துக்கோங்க உங்களைப் போன்றோருக்கு தான் கமல்ஹாசன் அன்றே அறிவுரை சொல்லி இருக்கிறார் என்று டேக் செய்து வருகின்றனர்.

கமல்ஹாசன் ரசிகர்கள் இந்த அளவிற்கு கோபப்படுவதற்கு காரணம் கமல்ஹாசன் உலக நாயகனாக உலகத்தில் இருக்கும் மொத்த தமிழர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதால் பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு கமல்ஹாசனுக்கு அதிகமாக நெகட்டிவ் இமேஜ் உருவாகி இருக்கிறது.

அதை சாதாரண மக்கள்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இருந்த நிலையில் இப்போது வெளிப்படையாகவே விஜய் டிவியில் இருந்து கொண்டு புகழ் மற்றும் குரேஷி கமல்ஹாசனை கலாய்த்தது மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதால் புகழ் மற்றும் குரேஷி இருவருக்கும் அதிகமாக பிரஷர் கொடுக்கப்பட்டதாலேயே அவர்கள் மன்னிப்பு கேட்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+