Bigg Boss 7 finale: அர்ச்சனா வின்னர் ஆனதும் தூக்கி கொண்டாடிய அந்த 4 பேரு.. நெகிழ வைத்த அந்த காட்சி
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகி இருக்கிறார். அவர் வெற்றி பெற்றதும் அவருடைய நண்பர்களான கூல் சுரேஷ், தினேஷ், விஷ்ணு, பிராவோ ஆகிய நான்கு பேரும் ஓடி வந்து அர்ச்சனாவை தூக்கி தங்களுடைய சந்தோஷத்தை வெளிக்காட்டி இருக்கின்றனர். பிக் பாஸ் மேடையில் இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிக நேரமாக கமல்ஹாசன் யார் வெற்றியாளர் என்பதை சொல்லாமல் போக்கு கட்டிக் கொண்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அர்ச்சனாவின் கையை தூக்கி வெற்றியை அறிவித்த போது அங்கிருந்த மாயா மற்றும் அவரை சார்ந்த குரூப் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர்.

ஆனாலும் மேடையில் வந்து சிலர் ஒதுங்கி நின்று கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் கிரான்ட்ஃபினாலேவில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகி இருக்கிறார். ஒரு சில நாட்களாகவே இந்த சீசனில் டைட்டில் வின்னராக அர்ச்சனா அல்லது மாயா தான் வருவார் என்று அதிகமாக ரசிகர்கள் மத்தியில் கருத்து எழுந்து வந்தது.
இந்த நிலையில் இன்று அர்ச்சனா வெற்றி பெற்று இருக்கிறார். மேடையில் அர்ச்சனாவின் வெற்றியை அறிவித்ததும் அவருடைய பெற்றோர்கள் ஆனந்த கண்ணீர் விட்டு இருந்தனர். அதுபோல இந்த சீசனில் டாப் 5 போட்டியாளர்களாக அர்ச்சனா, மணி, மாயா, தினேஷ், விஷ்ணு ஆகிய ஐந்து போட்டியாளர்கள் இருந்தனர். அதில் ஐந்தாவது இடத்தில் இந்த சீசனில் வெற்றியாளராக விஷ்ணு தேர்வாகி இருக்கிறார்.
அதை தொடர்ந்து நான்காவது இடத்தில் தினேஷ் தேர்வாகி இருந்தார். அதை தொடர்ந்து அர்ச்சனா, மாயா, மணி மூன்று பெரும் இறுதி கட்டத்தில் மேடைக்கு வந்திருந்தனர். அவர்களில் மாயா எவிக்டாகி வெளியே அனுப்பப்பட்டிருந்தார். அவர் செகண்ட் ரன்னர் ஆப்பாக தேர்வானதும் அர்ச்சனா மற்றும் மணி இறுதி கட்டத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது இதுவரைக்கும் இல்லாத வகையில் கமல்ஹாசன் இந்த முறை இவர்கள் இருவரில் யார் வெற்றியாளர் என்பதே சொல்வதில் அதிகமாக போக்கு காட்டிக் கொண்டிருந்தார்.
பிறகு ஒரு கட்டத்தில் அர்ச்சனா தான் வெற்றியாளர் என்று அறிவித்தார். அறிவித்த மறுகணமே அங்கிருந்த கூல் சுரேஷ், தினேஷ், பிராவோ, விஷ்ணு போன்றோர் ஓடி வந்து அர்ச்சனாவை கட்டிபிடித்து அவரை தூக்கி தலை மேல் வைத்து கொண்டாடி இருந்தனர். அப்போது மீதமுள்ள போட்டியாளர்கள் ஒதுங்கி நின்று கைகளை மட்டும் தட்டிக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் தான் ஜெயிக்கவில்லை என்றாலும் வெற்றி பெற்ற அர்ச்சனாவை உடனே மணியும் ஓடி சென்று கட்டிப்பிடித்து தன்னுடைய அன்பை வெளிக்காட்டி வாழ்த்துக்களை கூறியிருந்தார். இந்த நெகிழ்ச்சியான காட்சிகளோடு இந்த சீசன் முடிவுக்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் மாயா, அர்ச்சனா, மணி போன்றோர் தங்களுக்கு வாக்கு அளித்த மக்களுக்கு சமூக வலைத்தளத்தில் நன்றி கூறி போஸ்ட் போட்டு இருக்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications