உள்ளாடை சர்ச்சை.. தினேஷ் கேட்ட கேள்வி.. வெளியேற முடிவு எடுத்த பூர்ணிமா.. பிக் பாஸ் வைத்த செக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் நவம்பர் 10ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மாயா நிக்சனிடம் உள்ளாடையை எடுத்துக்காட்டியது குறித்து தினேஷ் தரப்பில் கேஸ் போடப்பட்டிருக்கிறது.

bigg boss tamil season 7 November 10th Promo 1 and fans reaction

அதில் தினேஷ் மற்றும் அர்ச்சனா கேட்ட கேள்வியால் பூர்ணிமா நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே போகப் போகிறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஒரு மாதத்தை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சி அதிகமாக சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் இணையத்தில் இந்த நிகழ்ச்சி பற்றி தான் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் பிரதீப்
வெளியேற்றம் அதனால் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயும் வெளியேயும் அதைப் பற்றியே விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்தது தவறு என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயும் அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது வினுஷாவை பார்த்து நிக்சன் உருவ கேலி செய்தது வெளியே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் வினுஷா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு இந்த வீடியோக்களை பார்த்து கடுப்பாகி பல பேட்டிகளில் இது பற்றி பேசி இருந்தார்.

இப்படியாக இருக்கும் நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் இது பற்றிய பிக் பாஸ் போட்டுக் கொடுத்து ஒரு டாஸ்க் வைத்து நிக்சனை இதற்கு விளக்கமும் கொடுக்க வைத்திருந்தனர். இதுவரைக்கும் இல்லாத வகையில் முதல் முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அடுத்தவர்களை பற்றி பேசிய வார்த்தைகளை திரையில் போட்டு காட்டி அதை யார் சொன்னது யாரைப் பற்றி சொன்னது என்பதற்கு விளக்கம் கொடுக்க வைக்கப்பட்டிருந்தது.

அதனால் இந்த டாஸ்க் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்போது நீதிமன்றம் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் நிக்சன் வீடு பெருக்கிக் கொண்டிருக்கும் போது மாயா மற்றும் பூர்ணிமாவிடம் மாஸ்க் கேட்க, அப்போது மாயா தன்னுடைய உள்ளாடையை எடுத்து காட்டி இருப்பார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அது குறித்து தினேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில் தினேஷ் தன் தரப்பு வாதத்தை வாதிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு மரியாதை இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அதற்கு மாயா நான் உள்ளாடை தூக்கி காட்டியது ஒரு காமெடிக்காக செய்தது என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அதை தொடர்ந்து அர்ச்சனா இதே ஒரு ஆண் உள்ளாடை எடுத்து கமெண்ட் பண்ணி இருந்தா இவங்க என்ன பண்ணி இருப்பாங்க என்று கேள்வி கேட்கிறார். அதைத்தொடர்ந்து நிக்சன் நான் இதை பார்த்திருந்தா உடனே நான் போய் கேட்டு இருப்பேன் என்று சொல்லிக் கொண்டு இருக்க அதைத் தொடர்ந்து விஷ்ணுவும் தன் தரப்பு நியாயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இப்படியாக காரசார விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்த விளக்கிற்கு நீதிபதியாக இருந்த பிராவோ கோர்ட் இதோடு கலைகிறது என்று கூறுகிறார். அதைத்தொடர்ந்து மாயா குரூப் பிக் பாஸ் வீட்டிற்குள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஐசு இதுவெல்லாம் ஆண்களுக்கு எதிராக என்று சொல்ல முடியாது என்று கூறுகிறார்.

அதற்கு பூர்ணிமா நான் இந்த வீட்டை விட்டு போயிரட்டுமா என்று கேட்கிறார் அதைத் தொடர்ந்து ஜோவிகா, மாயாவை விஷ்ணு என்ன சொன்னான் என்ன சொன்னான்னு நீ கேக்குறதை விடு. அவன் என்ன சொன்னானு தெரிஞ்சுக்கிறதில்ல உனக்கு என்ன ஆசை என்று கேட்டு சண்டையிடுகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+