பிக் பாஸ் 7: ஒரு ஸ்பூன் மரியாதை கிடைக்குமா? மாயாவை தாக்கிய கமல்ஹாசன்.. கடைசியில் சொன்னது தான் ஹைலைட்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 18ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியேறி இருக்கிறது.
சனிக்கிழமை என்பதால் எப்போதும் போலவே ப்ரோமோ மதியம் நேரத்திற்கு பிறகு தான் வெளியாகி இருக்கிறது.

அதில் பேசிய கமல்ஹாசன் இந்த வாரம் விளையாட்டு மாறி இருக்கிறது. புது நட்பு மலர்ந்து இருக்கிறது. உள்ளே மரியாதைக்கு பஞ்சாயத்து நடந்து இருக்கிறது என்று பல விஷயங்களை பேசி இருக்கிறார்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் சண்டை சச்சரவுகள் அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு முன்பு உள்ள போட்டியாளர்கள் கமல்ஹாசன் முன்பு தாங்கள் செய்து தவறுகளுக்கு கமல்ஹாசன் சுட்டிக்காட்டி அறிவுரை சொன்னதும் மன்னிப்பு கேட்டதை பார்த்திருப்போம்.
ஆனால் இப்போது உள்ள ஏழாவது சீசனில் பிரதீப் என்ற போட்டியாளர் நான் கமல்ஹாசன் சொன்னாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று மல்லு கட்டிக்கொண்டு இருந்த நிலையில் அவர் எதிர்பாராத விதமாக திடீரென்று ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். அதற்கு பிறகு உள்ளே போட்டியாளர்களுக்குள் சிறு ஆட்டம் கண்டு இருக்கிறது.
அதன் காரணமாகவே மாயா மற்றும் பூர்ணிமா கேங் தாங்கள் செய்வது தப்பு என்று தெரிந்தும் செய்து, கமல் சார் முன்பு எல்லாத்துக்கும் சாரி என்று சொன்னால் போதும் என்று நக்கல் அடித்து இருந்தனர்.அதையும் குறும்படமாக போட்டு கமல் கிழித்து எடுத்திருந்தார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் இருந்த சுவாரசியமான சண்டைகள் இந்த வாரத்தில் எதுவும் இல்லாமல் இருந்தது.
இதனால் இந்த வாரம் கமல்ஹாசன் எது குறித்து பஞ்சாயத்து செய்வார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. அதே நேரத்தில் நிக்சன் வினுஷாவை பற்றி உருவ கேலி செய்ததற்கு கமல் கடந்த வாரத்தில் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை என்பது பலருடைய வருத்தமாகவும் இருக்கிறது.
இப்படியாக இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கமல்ஹாசன் வழக்கம்போல என்ட்ரியானதும் வாராவாரம் விளையாட்டு மாறிகிட்டே இருக்கு. அப்படின்னு உள்ள பேசிகிட்டு இருக்காங்க. ஆனா என்ன மாறுதுன்னு பார்த்தோம்னா கூட்டணி மாறுது, புதுசா சில நட்புகள் மலருது.

இது எங்க கொண்டு போய் முடியுதுன்னு பார்க்கணும். அப்புறம் எல்லாரும் ஒரு பிளேட் மரியாதை கொடுங்கன்னு கேக்குறாங்க. அதற்கு ஒரு பிளேட்டெல்லாம் கட்டுபடி ஆகாதுன்னு சொன்னா, ஒரு ஸ்பூனாவது கொடுங்கன்னு கேக்குறாங்க. கிடைக்குதா, இல்லையான்னு பார்ப்போம் என்று பேசியிருக்கிறார்.
இந்த ப்ரோமோவிற்கு அதிகமான ரசிகர்கள் கமல் குறித்து இருந்த ஆர்வம் தற்போது அதிருப்தியாக மாறி இருக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர். அதே நேரத்தில் விசித்ரா மரியாதை வேண்டும் என்று சொன்னபோது அவரை மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் கலாய்த்தது குறித்து கமல் இன்று பேசுவாரா என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications