பிக் பாஸ்க்குள் ஸ்ட்ரைக் செய்த போட்டியாளர்கள்..சாப்பாட்டுக்காக கலவரம்.. போர்டில் எழுதப்பட்ட வார்த்தை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அக்டோபர் 12ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் சின்ன வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கும் இடையே பகை வெடிக்கிறது.

அதில் சின்ன வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் நாங்கள் சமையலை செய்ய மாட்டோம் என்று டைப் செய்ய சாப்பாட்டிற்கு அனைவரும் கஷ்டப்படுகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து டாஸ்க் கொடுத்து பிக் பாஸ் இந்த முறை நிகழ்ச்சியை பரபரப்பாக வைக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அதிகமான ரசிகர்களுக்கு பிரபலமானவர்களாகவே இருக்கின்றனர்.
அதிலும் அதிகமானவர் சின்னத்திரையை சார்ந்தவர்களாகவும், விஜய் டிவி பிரபலமாகவும் இருக்கின்றனர். இதனால் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்று இப்போது அதிகமாக கணிக்க முடியவில்லை. அதே நேரத்தில் அடிக்கடி ப்ரோமோவில் இடம் எடுத்துக் கொண்டிருக்கும் பிரதீப் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் அது கடைசி நேரத்தில் எப்படி வேண்டும் என்றாலும் மாறலாம். அது பற்றி பிறகு பார்க்கலாம். ஆனால் இன்றைய எபிசோடு முதல் ப்ரோமோ பெரும் கலவரமாக காலையிலேயே வெளியாகி இருக்கிறது. அதாவது பெரிய வீட்டில் இருப்பவர்கள் என்ன சமையல் செய்ய வேண்டுமோ அதன் பெயர்களை போர்ட்டில் எழுதிக் கொடுக்கிறார்கள். ஆனால் ஸ்மால் வீட்டில் இருப்பவர்கள் போர்டில் ஏதோ புதுசா எழுதி இருக்கீங்க என்னங்க அது அதை சமைக்க முடியாது என்று சண்டை இடுகின்றனர்.
ஸ்மால் வீட்டில் இருப்பவர்கள் சமைக்க முடியாது என்று சொன்னதால் பெரிய வீட்டில் இருப்பவர்கள் அங்கு இருக்கும் உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் ஸ்மால் வீட்டில் இருப்பவர்கள் நாங்கள் சமையல் செய்ய மாட்டோம் என்று ஸ்ட்ரைக் செய்கிறார்கள். இதனால் இரு வீட்டருக்கும் இடையே பகையால் கலவரம் ஆகி இன்று ஸ்ட்ரைக் வரைக்கும் வந்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த வார தலைவராக இருக்கும் பாண்டியன் ஸ்டோர் சரவணன் எந்த பக்கம் என்ன பேசுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்று கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவர் தலைவர் ஆன பிறகு சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நிலையில் இன்று ஸ்டைக்கில் போட்டியாளர்கள் இறங்கி இருப்பதால் சாப்பாட்டிற்கு என்ன செய்யப் போகிறார்கள்? அதில் தலைவராக இருக்கும் சரவணன் எப்படி இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications