ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்.. நேரடியாக எலிமினேஷனுக்கு போகும் கூல் சுரேஷ்.. பிக் பாஸின் சதி...!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அக்டோபர் 18ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் சாபக்கல் என்ற டாஸ்க் கொடுத்து பிக் பாஸ் போட்டியாளர்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதில் எல்லா போட்டியாளர்களும் கூல் சுரேஷின் பெயரையே சொன்னதால் கூல் சுரேஷ் கோபமாகி அந்த சாபக்கல்லை எடுத்து இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி இன்றோடு 17வது நாள் ஆகின்றது. அதில் இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவில் பிக் பாஸ் ஒரு சாபக் கல் ஒன்றை கொடுத்து இது யாரிடம் வருகிறதோ, அவர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அது மட்டுமல்லாமல் அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவித்திருக்கிறார்.
அதில் எல்லா போட்டியாளர்களும் வரிசையாக கூல் சுரேஷ் பெயரையே நாமினேஷன் செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் ஒரு கட்டத்தில் கோபமான கூல் சுரேஷ் நான் இப்போ சீரியஸா தான் கேட்கிறேன் உங்களுக்கு ஒரு இளிச்சவாயன் வேணும் அதுக்காக என் பேரு சொல்லுவிங்களா? ஏமாந்து ஆள் என்னை மட்டும் வச்சு செய்யுங்கப்பா என்று கோவப்பட்டு அந்த கல்லை தூக்குகிறார்.
இதை நானே வைத்துக்கொள்கிறேன் என்று சொல்ல, அதற்கு சக போட்டியாளர்கள் இருங்க அண்ணா இருங்க என்று சமாதானப்படுத்த முயற்சி செய்ய அதற்கு இருங்க நான் சொல்றேன் என்று கத்தி கூல் சுரேஷ் பேசிக்கிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதற்கு அதிகமான ரசிகர்கள் காமெடி என்கிற பெயரில் நேற்று ஜோதிடம் சொல்லும்போது எல்லா போட்டியாளர்களையும் உருவகேலி செய்து அனைவருடைய வெறுப்பையும் கூல் சுரேஷ் சம்பாதித்து இருக்கிறார்.

3வது வாரத்திற்கான நாமினேஷன்.. ரூல்ஸை மீறி சிக்கிக்கொள்ளும் பிரபலம்.. இவர்தான் வெளியேற்றமா?
அதனால் கூல் சுரேஷுக்கு இது தேவைதான் என்று ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் இன்னும் ஒரு சிலர் பிக் பாஸ் சரியான டாஸ்கை கொடுத்து இருக்கிறார். இது மூலம் எல்லாருடைய நிஜ கேரக்டரும் வெளிவரும் என்று கூறி வருகின்றனர். அதே நேரத்தில் இதுவரைக்கும் தான் கூல் சுரேஷ் என்று கூறி வந்தவர் இப்போது ஹார்ட் சுரேஷ் ஆக மாறிவிட்டாரே என்று பலரும் கலாய்க்கவும் தவறவில்லை.
இப்படியாக கமாண்டுகள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் நேற்று இவர்கள் கதை சொல்லும் டாஸ்க்கில் சொன்ன சோகங்களை கேட்டு பல பேர் கண்ணீரில் மூழ்கி இருப்பதால் இன்று ப்ரோமோவில் அது குறித்தும் பீல் பண்ணி கமெண்ட்களை போட்டு வருகின்றனர். அதுபோல வழக்கம் போல இந்த வாரம் மாயா தான் வெளியேறுவார் என்று கமெண்டுகள் குவிகிறது. ஆனால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications