இரண்டாவது நாளே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் 6 போட்டியாளர்கள்.. ஆரம்பமானது பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று அக்டோபர் இரண்டாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் ஆறு போட்டியாளர்களுக்கு இரண்டாவது நாளே பிக் பாஸ் தண்டனை கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் நேற்று அதாவது அக்டோபர் ஒன்றாம் தேதி மாலை ஆறு மணிக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் முதல் நாளில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகியிருக்கின்றனர். இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை இரண்டு வீடு கான்செப்ட் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில் நேற்று அறிமுகமான போட்டியாளர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது வீட்டில் போட்டியாளர்கள் எப்போது அறிமுகமாவார்கள் என்று இவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று வெளியான பிரமோவில் அதற்கான விடை கிடைத்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் முதல் தலைவராக விஜய் தேர்வாகி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியான பிரமோவில் இந்த வார தலைவர் விஜய்யை கவராத போட்டியாளர்கள் பற்றி பிக்பாஸ் பேசி இருக்கிறார்.
அதில் ஐஸ், நெல்சன், பாவா செல்லதுரை, அனன்யா, வினுஷா, ரவீனா என இந்த ஆறு பேரும் அடுத்த பாதை வழியாக இரண்டாவது வீட்டிற்குள் செல்ல வேண்டும். இனி நீங்க இந்த வீட்டிற்குள் வரும்போது தான் உங்ககிட்ட நான் பேசுவேன். அது போல இன்னொரு வீட்டில் இருக்கும் அந்த ஆறு பேரும் எந்த காரணத்தைக் கொண்டும் அந்த வீட்டை விட்டு போக கூடாது என்று அதிரடியான கட்டளைகளை பிக் பாஸ் போட்டிருக்கிறார்.

இப்படியான முதல் பிரமோ வெளியாகி இருக்கும் நிலையில் அதற்கு அதிகமான ரசிகர்கள் பல நாட்களுக்குப் பிறகு பிக் பாஸ் குரலை கேட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் முதல் நாளான நேற்று பிரதீப் பேசியது சரி இல்லை என்று சில கமெண்ட்கள் குவிந்து வருகிறது. அதற்கு அதிகமான லைக்குகளும் கிடைக்கிறது.
அதுபோல ஆரம்பமே இந்த சீசனில் அட்டகாசமாக இருக்கிறது என்றும் இந்த சீசனில் சண்டை சச்சரவுகள் இருக்குமா? அல்லது கலகலப்பாக இருக்குமா? என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்த சீசனில் அதிகமான இளம் தலைமுறையினர் கலந்து கொண்டிருப்பதால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications