பிக் பாஸ் 7: மாட்டுக்கறி சாப்பிடுவியானு பிராண்ட் பண்ண பார்த்தாரு.. பிரபலம் மீது பூர்ணிமா குற்றச்சாட்டு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பூர்ணிமா தன்னிடம் கூல் சுரேஷ் நீ மாட்டுக்கறி சாப்பிடுவியா என்று கேட்டு என்னை பிராண்ட் பண்ண பார்த்தாரு என்று புது குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
ஏற்கனவே தினேஷ் தௌலத் என்று பேசியது வடசென்னையை பிராண்ட் பண்றது தான் என்று கமல்ஹாசன் திட்டி இருந்தார்.
அதைத்தொடர்ந்து சாப்பாடை வைத்து கேள்வி கேட்ட கூல் சுரேஷ் குறித்து பூர்ணிமா பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரமான எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போன்று தான் இந்த வார இறுதி சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரைக்கும் கமல் மற்றும் மாயா குரூப் பேசிய பல வார்த்தைகளை கண்டு கொள்ளாமல் இருந்த கமல்ஹாசன் இந்த வார இறுதி நாட்களில் தினேஷ், அர்ச்சனா, விஷ்ணு, மணி போன்றோரை கட்டம் கட்டி அவர்கள் பேசியது எல்லாமே தவறு என்று அவர்களையே சொல்ல வைத்திருந்தார்.
இது அதிகமானோரால் திட்டப்பட்டு வந்திருந்தாலும் ஒரு சிலர் கமல் செய்ததும் சரிதான் என்று பாராட்டியும் வருகின்றனர். இப்படியாக இருவேறு கருத்துகளை பெற்றிருக்கும் நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தௌலத் என்று சொல்லி தினேஷ் நிக்சனை பார்த்து பேசியதற்கு கமல்ஹாசன் இது நீங்கள் வடசென்னையை இவர்கள் இப்படித்தான் என்று முத்திரை குத்துவது போன்று பேசி இருக்கிறீர்கள் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
அதுபோல மணி நிக்சனை பார்த்து ட்ரூ கலர் கம்மிங் என்று சொன்ன வார்த்தைக்கும் நீங்கள் அவரை சார்ந்த மக்களை குறிப்பிடுவது போன்று இருக்கிறது என்றும் விளக்கத்தை கொடுத்திருந்தார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் சனிக்கிழமை எபிசோடில் பேசிக் கொண்டிருக்கும்போது இடைவேளை நேரத்தில் பூர்ணிமா எனக்கும் இதுபோல இந்த வீட்டில் இரண்டாவது வாரமே பிராண்டு குத்துகிற வேலை நடந்தது.
அதாவது ஒரு முறை கூல் சுரேஷ் என்னிடம் நீ மாட்டுக்கறி சாப்பிடுவியா என்று கேட்டார். நான் ஆமாம் என்று சொன்னேன் அவர் கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டு மாட்டுக்கறி நீ சாப்பிடுவியா என்று மீண்டும் கேட்டார். நாம் ஆமாம் சாப்பிடுவேன் என்று சொன்னேன். அதற்கு அப்படியா நான் எல்லாம் சாப்பிட மாட்டேன் என்று அவருடைய முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு பேசினார்.
அது கமல்ஹாசன் இப்போது சொல்ற மாதிரி பிராண்ட் குத்தற வேலைதான். எனக்கு அது ஆரம்பத்திலேயே நடந்தது என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் இதை கவனிக்காமல் விட்டு விட்டாரா அல்லது இதை கவனித்தால் சுரேஷிற்கு சனிக்கிழமை சரியான பாடம் எடுத்திருப்பார்...
யார் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்க முடிவு பண்ணக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருப்பார். ஆனால் கமல்ஹாசன் இதை எப்படி சொல்லாமல் விட்டார் என்பது பலருடைய கேள்வி, அதுபோல ஒருவேளை கூல் சுரேஷ் சொன்னதால் விட்டுவிட்டாரோ இதையே தினேஷ், அர்ச்சனா அல்லது விஷ்ணுவோ சொல்லியிருந்தால் கண்டிப்பாக இந்த வாரத்தில் கேள்வி கேட்டிருப்பாராக இருக்குமோ என்றும் சில நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications