பிக் பாஸ் 7: பிக் பாஸின் ரகசியத்தை உளறிய கூல் சுரேஷ்.. மிட் நைட் வெளியேற்றம் நாடகமா? அம்பலமான உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்றைய எபிசோடில் மிட்நைட் வெளியேற்றம் நடைபெற்றது.

அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அனன்யா வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே கூல் சுரேஷ் நான் வெளியேற வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு சுவர் ஏரி குதிக்க முயற்சி செய்த பிறகும் அவரை வெளியேற்றாமல் அனன்யா நேற்று வெளியேற்றப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் அதைத்தொடர்ந்து சுரேஷ் ஏற்கனவே இந்த மிட் நைட் எலிமினேஷன் நடக்க போறது எனக்கு தெரியும் என்று பேசி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 bigg boss tamil season 7 Suresh has already said that midnight elimination is going to happen

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத வகையில் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த சீசனில் அதிகமான சர்ச்சைகள் இருக்கும் நிலையில் இந்த சீசனை எப்படியாவது பிரபலப்படுத்தி விட வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சி இயக்குனர்கள் அதிகமாக முயற்சி செய்து வருகிறார்கள். ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை அதிகமாக கழுவி ஊற்றி வருவதை சரி செய்வதற்காக பிக் பாஸ் எடுத்திருக்கும் முயற்சிதான் நேற்று எதிர்பாராத மிட் நைட் வெளியேற்றம்.

ஏற்கனவே கடந்த வாரத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பலராலும் வாக்கு செலுத்த முடியாது என்ற காரணத்தை சொல்லி எலிமினேஷனை ரத்து செய்திருந்தனர். அதனால் இந்த வாரத்தில் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்த வகையில் இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் கூல் சுரேஷ் மற்றும் அனன்யா இருவரும் தான் கடைசி இடத்தில் இருக்கிறார்கள்.

இதனால் இவர்கள் இருவரும் இந்த வாரத்தில் வெளியேற்றப்படுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்ததுதான். ஆனால் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று இன்று மிட் நைட் எலிமினேஷன் நடைபெறும் என்று பிக் பாஸ் கூறியிருந்தார். ஏற்கனவே நேற்று முன்தினம் போட்டியாளர்கள் தங்களுக்குள் பணத்தைப் பட்டுவாடா செய்தது பிக்பாஸை அதிகமாக கோபப்பட வைத்திருந்தது.

அதற்கு பிறகு போட்டியாளர்களிடம் பிக் பாஸ் கோபத்தை காட்டி இருந்த நிலையில் அதற்குப் பிறகு சில போட்டியாளர்களிடம் தங்களுடைய தப்பை உணர்ந்து தவறை திருத்திக் கொண்டனர். இதை பிக் பாஸ் நேற்றைய எபிசோடில் பாராட்டி இருந்தார். அதற்கு பிறகு மிட்நைட்டில் அனன்யா வெளியேற்றப்பட்டார். அதற்கு பிறகு கூல் சுரேஷ், தினேஷ், மாயா முதலியோர் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது கூல் சுரேஷ் அனன்யா பொண்ணு ஏற்கனவே சொல்லிக் கொண்டுதான் இருந்தது. இந்த வாரத்தில் மிட்நைட் எலிமினேஷன் இருக்கும் என்று அது எப்படி இப்படி நடந்தது என்று எனக்கே தெரியவில்லை என்று கூல் சுரேஷ் ஆச்சரியப்பட்டு இருக்கிறார். அனன்யாக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தான் வெளியே போய் விடுவோம் என்று தெரிந்துவிட்டது, என்று மாயாவும் சொல்கிறார்.

ஜோவிகா எப்படி தான் வெளியே போவதற்கு முன்பு தனக்கு அது தெரிந்தது என்று சொன்னாரோ அதுபோல அனன்யாவுக்கும் தெரிந்திருந்தது என்று கூல் சுரேஷ் சொல்கிறார். இதனால் ஏற்கனவே ரசிகர்கள் சந்தேகப்படுகிற மாதிரி இது ஸ்கிரிப்ட் படி தான் நடைபெறுகிறதா? அல்லது போட்டியாளர்களின் மனதில் தானாக சில எண்ண அதிர்வுகள் தோன்றி அதுவே நடைபெறுகிறதா? என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் அதிகமாக எழுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+