பிக் பாஸ் 7: இட்லி துணியை வைத்து.. அர்ச்சனாவை குறித்து விக்ரம் சொன்ன வார்த்தை.. வெடித்த பூகம்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்றில் விக்ரம் ஒரு நாள் நான் அர்ச்சனாவாக மாறினால் இட்லி துணியை வைத்து வாயை மூடிக்கொள்வேன் என்று கூறியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதே நேரத்தில் எப்போதும் சண்டை பிடிக்கும் அர்ச்சனா விக்ரம் பேசிய வார்த்தைக்கு சிரித்துக் கொண்டிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இந்த சீசனின் டைட்டில் வின்னர் நான் தான் என்று விக்ரம் தன்னைத்தானே கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது அர்ச்சனாவை பற்றி விமர்சித்திருக்கும் விதம் குறித்து பலரும் திட்டி வருகின்றனர்.

bigg boss tamil season 7 Vikram saying to Archana charater

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டை சச்சரவுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. இதில் நேற்றைய எபிசோடில் ஒரு டாஸ்க் நடைபெற்றது. அதில் எல்லோரும் எழுந்ததும் விடியும் போது வேறு ஒருவர் போல மாறினால் நீங்கள் யாரைப்போல மாறுவீர்கள்? அப்படியானால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு ஒவ்வொருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது முதலில் அர்ச்சனா நான் பூர்ணிமாவாக முழிச்சுட்டேன் என்றால் உடனே போய் மாயா கேங்குக்கு ராஜினாமா கடிதம் கொடுத்து அந்த கேங்கிலிருந்து வெளியே வந்து விடுவேன். மாயா உங்களை எனக்கு பிடிக்கும் ஆனால் எதுவா இருந்தாலும் வெளியே போய் பார்ப்போம் என்று மாயாவுக்கு சொல்வேன் என்று கூறியிருக்கிறார்.

அதை தொடர்ந்து ரவீனா நான் மாயாவா முழித்தேன் என்றால் எல்லாருக்கும் இடையில் சண்டை போட்டு அடிச்சுக்கோங்கடா என்று விடமாட்டேன். என்னோட நல்ல தன்மைகளை வெளிக்காட்டுவேன் என்று கூறுகிறார். இதை அடுத்து விக்ரம், அதாங்க இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டிருக்கும் நபர்தான். அவர், நான் அர்ச்சனாவா மாறிட்டா எல்லோருடைய காதுக்கிட்டையும் போய் கத்தி அவர்களை செவிடு ஆக்குவேன்.

பிக் பாஸ் 7: வீட்டுக்கு போறேன் கதறிய ஜோவிகா.. பதிலடி கொடுத்த வனிதா.. கடைசியில் இப்படி இறங்கிட்டாரே
சத்தமா பேசுவேன்.. எல்லாருக்கும் நல்லது பண்ணனும் என்றால் இட்லி துணியை வச்சி என் வாயில அடைத்து கொள்வேன் என்று கூறி இருக்கிறார். இதற்கு அர்ச்சனா கோவப்படுவார் என்று பார்த்தால் அவர் கோபப்படாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார். இதுதான் ஆச்சரியம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

bigg boss tamil season 7 Vikram saying to Archana charater

அதே நேரத்தில் எபிசோடு முழுக்கவே அர்ச்சனா மற்றும் விஷ்ணு சண்டையிட்டு கொண்டிருந்தனர். ஆனாலும் சக போட்டியாளர்கள் யாரும் இவர்களின் சண்டையில் காது கொடுக்காமல் விலகி இருந்தது அர்ச்சனாவை மேலும் கோபப்பட வைத்தது. அதனாலேயே நேற்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கூட அர்ச்சனா கதறி அழுதிருந்தார்.

பிக் பாஸ்7: அர்ச்சனா தம் அடிக்கிறாங்க, அதுவும் “அந்த” மாதிரி.. கமலிடம் பஞ்சாயத்துக்கு போகும் விஷ்ணு
இந்த நிலையில் இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் விக்ரம் தான் எவிக்டாகி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் கமல்ஹாசன் இந்த வாரம் யாருக்கு டோஸ் கொடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+