பிக் பாஸ் 7: பூர்ணிமா மேல் சந்தேகப்பட்ட போலீஸ்.. வீட்டிற்கு வந்து சொன்ன வார்த்தை.. நடந்தது என்ன?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பூர்ணிமா நேற்று கதை சொல்லும் டாஸ்க்கில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்களை பற்றி பேசி இருக்கிறார்.
அப்போது சென்னைக்கு வேலைக்கு வந்த இடத்தில் தனக்கு வீடு வாடகைக்கு கிடைக்காததால் 11 ஆண்களோடு தான் தனியாக தங்கி இருந்ததாக பூர்ணிமா கூறியிருக்கிறார்.
அதோடு அது பற்றி போலீஸ் வீட்டிற்கு வந்து விசாரித்தது குறித்தும், தன்னுடைய பெற்றோரிடம் போலீஸ் சொன்ன வார்த்தையை குறித்தும், அந்த டாஸ்க்கில் பூர்ணிமா பேசியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இப்போது தான் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட 50 நாட்களை தாண்டி இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க் வந்து இருக்கிறது. கடந்த சீசனில் கதை சொல்லும் டாஸ்க்கில் அலாரம் வைத்து சக போட்டியாளர்கள் கதையை பிடிக்கவில்லை என்றால் நிறுத்தி விடும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த சீசனில் அப்படி இல்லை.
இந்த நிலையில் முதல் நாளே இந்த கதை சொல்லும் டாஸ்க்கில் விசித்திரா சொன்ன கதை சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து நேற்று பூர்ணிமா தன்னுடைய கதையை சொல்லி இருந்தார். அதுவும் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது பூர்ணிமா தன்னுடைய சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வேலைக்காக வந்திருந்தாராம். வந்த இடத்தில் வேலை பார்க்கும் போது அவருக்கு தங்குவதற்கு வீடு இல்லாமல் இருந்திருக்கிறது.
பல இடங்களில் தான் தேடிப் பார்த்தும் தனக்கு வீடு இல்லாமல் இருந்த நிலையில் தன்னை போலவே 11 ஆண்கள் வீடு தேடி இருந்தார்களாம். அப்போது அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து பூர்ணிமாவும் ஒரு வீடு எடுத்து தங்கி இருந்திருக்கிறார். அது குறித்து பூர்ணிமா பேசுகையில், எனக்கு அந்த ஆண்களால் எந்த தொந்தரவுமே இல்லை. நான் அவர்களோடு நிம்மதியாக தான் அந்த வீட்டில் இருந்தேன். சில நேரங்களில் அவர்கள் சாப்பாடும் பொருள்களை அப்படியே போட்டுவிட்டு போய்விடுவார்கள்.
அது மட்டும் தான் பிரச்சனை வேறு ஒன்றும் இல்லை. ஆனால் நான் அந்த வீட்டில் இருந்ததை அக்கம்பக்கத்தினர் தவறாக புரிந்து கொண்டனர். அதனால் ஒரு நாள் என்னிடம் போலீசே வந்து விசாரித்தார். என்ன நீங்க இங்கே தனியா இருக்கீங்க என்று பேசினார். அப்போது நான் என்னுடைய சூழ்நிலையை பற்றி சொன்னேன். அதோடு நான் வேலை பார்க்கும் இடத்தைப் பற்றியும் சொன்னேன்.
பிக் பாஸ் 7: விஷ்ணுவை வெளுத்து வாங்கிய அர்ச்சனா.. கூல் சுரேஷ் இப்படி செய்யலாமா? பிக் பாஸின் பாரபட்சம்
அதற்குப் பிறகு போலீஸ் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்து இருக்கிறார்கள். அப்போது ஒரு சில என் மீது தப்பில்லை என்று சொன்னதைக் கேட்டு போலீஸ் என்னை விட்டு விட்டார்கள். பிறகு என்னுடைய அப்பா, அம்மாவுக்கு போன் பண்ணி இப்படி 11 ஆணோடு ஒரு பெண் இருப்பது சரி இல்லை என்று கூறி இருக்கிறார்கள். அதற்கு பிறகு தான் நான் அந்த ரூமை காலி செய்து விட்டு என்னுடைய ஆபீஸ்லையே தங்கி இருந்தேன்.
என்னுடைய வாழ்க்கையில் நான் ரொம்ப கஷ்டப்பட்டது என்றால் இருக்கும் இடத்திற்கு தான். அந்த இடத்தை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று நினைத்தேன். பிறகு வேலையை விட்டுவிட்டு நான் போட்டோ சூட்டில் இறங்கி இருந்தேன். அப்போது ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு பிறகு நான் வீடியோக்களெல்லாம் போட ஆரம்பித்த பிறகு எனக்கு வருமானம் வர தொடங்கியது.
அதற்குப் பிறகு சென்னையில் இப்போது புதியதாக ஒரு வீட்டையே வாங்கி இருக்கிறேன். ஒரு காரையும் வாங்கி இருக்கிறேன் என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 11 ஆண்களோடு தனியாக ஒரு வீட்டில் தங்கி இருந்த பூர்ணிமாவிற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இத்தனை கேமராவோடு இருக்கும் பிரதீப் நடந்து கொண்டது பாதுகாப்பு இல்லாமல் இருந்ததா? இது எல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications