பிக் பாஸ் 8ல் வெடித்த பிரச்சனை.. அசிங்கமாக பேசிய ராணவ்.. ரெட் கார்டு யாருக்கு? நடந்தது இதுதான்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் நவம்பர் 13-ஆம் தேதிக்கான எபிசோடின் 4வது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஸ்கூல் டாஸ்க் விளையாடும் போது போட்டியாளர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஸ்கூல் டாஸ்க் தொடங்கப்பட்டது. இந்த டாஸ்க் ஒவ்வொரு சீசனிலும் சுவாரசியமாக இருக்கும். அதிலும் சாண்டி மாஸ்டர், கவின் போன்றோர் கலந்து கொண்ட சீசனில் இந்த ஸ்கூல் டாஸ்க் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அப்போது அவர்கள் செய்த பர்பாமன்ஸ் இப்போதும் இணையத்தில் வீடியோக்களாக வைரலாகி கொண்டிருக்கிறது.

அதை பார்க்கும் ரசிகர்களையும் சிரிக்க வைக்கிறது. ஆனால் இந்த முறை இந்த டாஸ்க் தொடங்கப்படுவதற்கு முன்பு இந்த டாஸ்க்கில் எல்லோரும் காதல் கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்று தான் அதற்காக ரெடியாகி கொண்டு கொண்டிருந்தனர். டாஸ்க் தொடங்கியதும் ஒரு சில போட்டியாளர்கள் கமிட் ஆகி விட்டனர்.
வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த ராணுவை மட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை. சொல்ல வேண்டும் என்றால் எல்லோரும் அவரை ஒதுக்கி வைத்து புல்லி பண்ணினார்கள். அவருக்கு எதுவும் தெரியாது, சொன்னால் புரிய மாட்டேங்கிறது, அவரோடு பேச முடியாது என்று எல்லோரும் ஒவ்வொரு காரணம் சொல்லி ராணவை ஒதுக்கி தள்ளி கொண்டு இருந்தனர்.
நேற்று எபிசோடு பார்த்த ரசிகர்களுக்கு இது தெரிந்திருக்கும் ஆனாலும் இதற்கெல்லாம் மனம் தளராமல் ராணவ் நான் எனக்காக விளையாடுவேன், எனக்காக நானே பேசிக்கொள்கிறேன் என்று பர்பாமன்ஸ் செய்திருந்தார். இதுவரைக்கும் ஒரு வாரமாக ராணவ் வெளியே தெரியாமல் இருந்த நிலையில் நேற்று அவருடைய செயல்பாடு பெரிய அளவில் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இன்று மூன்று ப்ரோமோக்களிலும் அவருக்கு அதிகமான பாசிடிவ் கமாண்டுகள் குவிக்கிறது. தற்போது நான்காவது பிரமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் எல்லா போட்டியாளர்களும் பொங்கி எழுந்து கத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவது நடந்து கொண்டிருக்கும் ஸ்கூல் டாஸ்க் வரிசை கட்டி போட்டி போட்டு காதல் கண்டண்டு செய்வதால் ராணவ் ஏதோ குழப்பம் செய்து இருக்கிறார்.
இந்த டாஸ்கில் அவருக்கு கடைசி பென்ச் ஸ்டூடன்ட் அதுவும் மக்கு ஸ்டுடென்ட் என்ற கேரக்டர் தான் கொடுத்து இருக்கிறது. அதற்கு சரியாக அவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் காதல் செய்பவர்களை பிரித்து விடும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறார். இது இவருடைய தனி விளையாட்டாக இருந்தாலும் அதை வைத்து தான் இன்று பிரச்சனை வந்திருக்கிறது.
தற்போது வெளியான ப்ரோமோவில் சத்யா மற்றும் ராணவ் இருவருக்கும் அடிதடி வரைக்கும் போகிறது. உனக்கு கொடுத்த கேரக்டரை ஒழுங்கா செய்ய துப்பில்லை என்று தர்ஷிகா திட்டுகிறார். அதற்கு ராணவ் இந்த வீட்டிற்குள் யாரும் காதலிக்க கூடாது என்று கோபமாக கத்துகிறார். இது உண்மையான சண்டையா? அல்லது ஃப்ராங்கா என்ற சந்தேகமும் இருக்கிறது.
காரணம் இந்த ப்ரோமோவில் ஜாக்குலின் மட்டும் எதுவும் செய்யாமல் அமைதியாக நிற்கிறார். இதனால் இவருக்கு தெரிஞ்சி இது பிராங்காக நடக்கிறதா? அல்லது இந்த பிரச்சனைக்கு காரணமே ஜாக்லின் தானா? என்ற குழப்பம் இருக்கிறது என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications