பிக் பாஸ் 8: மேடையில் உடைந்து போன ரஞ்சித்.. குரல் நடுங்க சொன்ன அந்த வார்த்தை.. பிரியா ராமன் கிரேட்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் நடிகர் ரஞ்சித் எவிக்ஷன் ஆகி வெளியே வந்தார். அப்போது விஜய் சேதுபதி முன்பு மேடையில் ரஞ்சித் வரும் போது அங்கிருந்த ப்ரியா ராமனை பார்த்ததும் கண் கலங்க ரஞ்சித் பேசியது இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி 76 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் இருந்தனர். அதற்குப் பிறகு ஆறு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வந்தனர். அதில் சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.

ஆனால் முதல் நாள் அறிமுகமான ரஞ்சித் நேற்று எவிக்ஷனாகி இருந்தார். இவர் எல்லாம் அதிக நாட்கள் இந்த நிகழ்ச்சியில் தாக்குபிடிக்க மாட்டார் என்று ஆரம்பத்தில் அதிகமானோர் சொன்னார்கள். அதற்கு காரணம் ரஞ்சித் இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் திரைப்படத்தில் அவர் பேசிய வசனங்களும் அவருடைய ரியாக்ஷன் தான்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு தனக்கு உருவான நெகட்டிவ் இமேஜை அளிப்பதற்காகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வதாகவும் ரஞ்சித் சொல்லி இருந்தார். ரஞ்சித் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே சாமி, கண்ணு.. என்று எல்லா போட்டியாளர்களிடமும் பேசிக்கொண்டிருந்தார்.
ஒரு சில இடங்களில் இவர் நடிக்கிறார் என்று சொல்லி வந்தாலும் இவருடைய இயல்பான கேரக்டர் பலராலும் விரும்பப்பட்டு வந்தது. அதனாலயே இவரால் இத்தனை வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் தாக்க பிடிக்க முடிந்தது. கடந்த வாரத்தில் பல சுவாரஸ்யமான மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்றது.
அதுபோல கடந்து வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருந்தன. இந்த நிலையில் தான் ரஞ்சித் எவிக்ஷனாகி இருக்கிறார். அவர் எவிக்ஷன் என்று அறிவித்ததும் அவருடைய மனைவியான பிரியா ராமனும் நிகழ்ச்சியில் பார்வையாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
இது தெரியாத ரஞ்சித் விஜய் சேதுபதி அழைத்ததும் மேடைக்கு வரும்போது அங்கிருந்த ப்ரியா ராமனை பார்த்ததும் டக் என்று அதிர்ச்சியாகி குரல் உடைந்து நா தழுதழுக்க கண்களாலேயே எப்படி இருக்கிற.. என்ன இங்க வந்திருக்கிறா... என்கிற மாதிரி பேசிக் கொண்டிருந்தார். அவருடைய மனைவி பிரியா ராமனும் நாங்க நல்லா இருக்கிறோம். நான் உனக்காக இருக்கிறேன் என்கிற மாதிரி கண்களாலே முகத்தை மட்டும் அசைத்து பேசினார்.

இந்த க்யூட்டான மூமண்ட் பார்ப்பவர்களையும் ரசிக்க வைத்தது. அதைத் தொடர்ந்து உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக தான் சார் நாங்க மேடத்தை வரவச்சிருக்கோம் என்று விஜய் சேதுபதி சொல்ல, ரஞ்சித் ரொம்பவும் சந்தோஷப்பட்டு இருக்கிறார். அதோடு பிரியா ராமனிடம் விஜய் சேதுபதி எப்படி இருக்கீங்க மேடம் என்று கேட்க, அதற்கு பிரியா ராமன் நல்லா இருக்கிறேன்.
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொல்ல, நான் உங்களை இத்தனை நாளா திரையில் தான் பார்த்திருக்கிறேன். இப்போதான் முதல்முறையாக நேரில் பார்க்கிறேன் என்று விஜய் சேதுபதி சொல்லி இருக்கிறார். ரஞ்சித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் நாள் பிரியா ராமன் கலந்து கொள்ளவில்லை.
அதற்கு காரணம் தங்களை நம்பிய ஒரு தம்பதியின் பங்க்ஷனில் அதே நாளில் ரஞ்சித் சார்பாக நான் கலந்து கொண்டேன் என்று பிரியா ராமன் கூறி இருந்தார். ஆனால் இப்போது ரஞ்சித் வெளியேறும்போது பிரியா ராமன் அவருக்காக நான் இருக்கிறேன் என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications