அர்னவ் பர்சனல் பற்றி பேசினால் நாறி போய்விடும்! அவன் பேசலாமா? கொந்தளித்த அருண்.. தீபக் கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த அர்னவ் வெளியே சென்ற பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர் பற்றி அருண் கோபமாக பேசி இருக்கிறார்.
இதுவரைக்கும் இல்லாத வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் நடிகர் அர்னவும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒரு சில சீரியலில் நடித்திருக்கிறார். அப்போது அவரோடு சீரியலில் ஒன்றாக நடித்த நடிகை திவ்யா ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அர்னவ் விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லமா சீரியலில் நடித்து வந்தார். அந்த நேரத்தில் செல்லமா சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை அன்ஷிதாவோடு நெருங்கி பழகி வருவதால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது, அதனால் என்னை அடித்து துன்புறுத்துகிறார் என்று திவ்யா ஸ்ரீதர் மருத்துவமனையில் அட்மிட் ஆனது பெரிய அளவில் பேசப்பட்டது.
அதற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அர்னவும் அன்ஷிதாவும் சேர்ந்து தனக்கு போன் செய்து மிரட்டுவதாகவும் பல ஆடியோக்களையும் திவ்யா ஸ்ரீதர் வெளியிட்டு இருந்தார். அதுபோல அர்னவ் திருநங்கை உட்பட பல பெண்களையும் ஏமாற்றியதாகவும் பல பெண்களோடு பேசியதாக ஆடியோக்களையும் திவ்யா வெளியிட்டு இருந்தார். இது சில மாதங்களுக்கு முன்பு பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது திவ்யா ஸ்ரீதர்க்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அவர் அர்னவை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்களுடைய விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் அன்ஷிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அப்போது அர்னவும் பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருவரும் ஏற்கனவே தெரியாது என்பது போல நடந்து கொண்டனர். பிறகு பட்டும் படாமல் பேசி வந்தனர். ஆனால் முதல் சில வாரங்களிலேயே அர்னவ் வெளியேற்றப்பட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத அர்னவ் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து விஜய் சேதுபதி முன்பு நிற்கும்போது உள்ளிருக்கும் சக போட்டியாளர்களை ஜால்ராஸ் என்று பேசியிருந்தார். அது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு பிறகு இவர் மீண்டும் வைல்ட் கார்டில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அவர் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுப்பது குறித்து போஸ்டுகள் போட்டதால் அவரை பிக் பாஸ் குழுவினர் வைல்ட் கார்டில் உள்ளே அனுப்பி வைக்காமல் இருந்ததாக கூறப்பட்டது.
இப்படியான நிலையில் அடுத்த வாரத்தோடு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் எவிக்ஷனான போட்டியாளர்கள் நேற்று முதல் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். அதில் அர்னவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார். அவர் உள்ளே வந்ததும் தன்னுடைய கோபம், வன்மத்தை எல்லாம் மொத்தமாக கொட்டி இருக்கிறார்.
சத்யா மற்றும் ஜெஃப்ரி பிக் பாஸ் வீட்டிற்குள் இல்லை என்பது தெரிந்தும் சட்டை போடாமல் ஒருவன் சுற்றி கொண்டிருப்பானே அவன் எங்கே...?, ஒருத்தன் நோண்டிகிட்டும் தடவிக்கொண்டு இருப்பான் அவன் எங்கே என்று ஒருமையில் திட்டி இருந்தார். அதுபோல அருண் தீபக் எல்லாரிடமுமே கடுமையாக பேசியிருந்தார் இது குறித்து இணையத்தில் அதிகமானோர் விமர்சித்து வருகிறார்கள்.
இப்படியான நிலையில் அர்னவ் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பே ஒரு டாஸ்க் பிக்பாஸ் கொடுத்து இருந்தார். அதாவது இந்த வாரத்தில் வெளியே போன போட்டியாளர்கள் வீட்டிற்குள் வரப் போகிறார்கள் அவர்களுக்கு நீங்கள் என்ன பட்டம் கொடுக்க போகிறீர்களோ அதை கொடுக்கலாம் என்று ஒரு போர்டில் எல்லோருடைய புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அர்னவிற்கு அருண் வீட்டில் இருந்து பெரியவங்க யாரையாவது கூட்டிட்டு வாங்க என்ற வசனம் கொடுத்திருந்தார். அதாவது அவர் தங்கள் முன்பு பேசுவதற்கு தைரியம் இல்லாமல் வெளியே போனதும் தங்களைப் பற்றி ஜால்ராஸ் என்று பேசியது குறித்து அருண் தன்னுடைய கோபத்தை காட்டி இருந்தார்.

அதோடு அருண் அங்கு பேசிக் கொண்டிருக்கும் போது அர்னவெல்லாம் இங்க வந்து அவ்வளவு வாய் பேசிட்டு இருக்கிறான், அவனுடைய பர்சனல் பத்தி பேசினா நாறிப் போய்விடும். இங்க வைத்து அதெல்லாம் சொல்ல கூடாதுன்னு நான் இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் பக்கத்தில் இருந்த தீபக்கிற்கு அர்னவ் பற்றி எந்த விஷயமும் தெரியாதாம். அதனால் என்ன பர்சனல் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார்.
அதற்கு அருண், அர்னவ் பற்றி நிறைய விஷயம் இருக்கு. அதை வெளியில போய் சொல்றேன். அதை சொல்றதுக்கான இடம் இது கிடையாது என்று கூறியிருக்கிறார். அதோட அவர் இந்த வீட்டிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவில்லை என்றாலும் நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியே போன பிறகு அவரிடம் நேரடியாக இதைப் பற்றி பேசுவேன் என்று அருண் சொல்லி இருக்கிறார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications