பிக் பாஸ் 8: ஜாக்குலின் சொன்ன வார்த்தை..! திடீரென வெளியேறி பிரச்சனை செய்யும் போட்டியாளர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நவம்பர் 13ஆம் தேதிக்கான எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஸ்கூல் டாஸ்க்கில் ஜாக்லின் சொன்ன வார்த்தையால் கோபமடைந்த சில போட்டியாளர்கள் டாஸ்கிலிருந்து திடீரென வெளியேறி இருக்கிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் நடக்கும் ஸ்கூல் டாஸ்க் இந்த வாரம் தொடங்கப்பட்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் இருந்து இந்த டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் பலர் பள்ளி மாணவ மாணவிகளாகவும், ஒரு சிலர் ஆசிரியர்களாகவும் மாறி இருக்கிறார்கள்.

ஸ்கூல் டாஸ்க் என்றால் கலகலப்பாக இருக்கும் என்று நினைத்த ரசிகர்களுக்கு நேற்றைய எபிசோடு ஏமாற்றமாக தான் இருந்தது. ஸ்கூல் நிர்வாகியின் மகளாக வர்ஷினி தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் விவாகரத்து செய்து வெளியே துரத்திய மாப்பிள்ளை வைஸ் பிரின்ஸ்பல் கேரக்டர் அருணுக்கு கொடுக்கப்பட்டது.
அதற்கு பிறகு பாரின் ரிட்டர்ன்ஸ் மற்றும் மாரல் கிளாஸ் டீச்சர் கேரக்டர் ஜாக்குலினுக்கு கொடுக்கப்பட்டது. பிறகு தமிழ் டீச்சர் மஞ்சரி, லவ் ஃபெயிலியர் பிடி டீச்சர் ஜெஃப்ரி என்று பலர் பல்வேறு கேரக்டரில் இருந்தனர். நேற்று நடந்த இந்த டாஸ்க்கில் யார் சரியாக தங்களுடைய கேரக்டரை வெளிக்காட்டவில்லை என்று காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் கேள்வி கேட்கப்பட்டது.
இதில் பலர் பல்வேறு குற்றசாட்டுகளை வைத்தனர். நேற்று முழுக்க சிவக்குமார் வாட்ச்மேன் கேரக்டரில் இருந்தாலும் இரவு பெண்கள் அறையை அடிக்கடி எட்டிப் பார்க்கிறார் என்பது இன்று காலையில் வைக்கப்பட்ட முதல் குற்றசாட்டாக இருந்தது. அது போல ஜாக்குலின் மீது தீபக் வழக்கம் போல குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
மாரல் கிளாஸ் எடுக்கும் டீச்சர் அதை பின்பற்ற வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார். அதை தொடர்ந்து தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஜாக்குலின் மீண்டும் கிளாஸ் எடுக்கிறார். அப்போது, தீபக் மாரல் வந்து நமக்கு தெரிஞ்ச விஷயம் மற்றவர்களுக்கு தெரியணும் என்று அவசியம் இல்லை. நமக்கு தெரிஞ்சிடுச்சு என்பதற்காக அறிவாளியும் இல்ல என்று ஜாக்லின் சொல்கிறார்.
அதற்கு தீபக் சூப்பர் என்று நக்கலாக சொல்கிறார். அதைத் தொடர்ந்து பேசிய ஜாக்குலின் பேசுகையில், எந்த இடத்தில் பேசணுமோ அங்கு பேசுங்க, எங்கு பேசக்கூடாதோ அங்கு பேசாதீங்க கவனிங்க என்று சொல்ல, அதற்கு ராணவ், இது உங்களுக்கும் பொருந்தும் இல்ல என்று கேட்கிறார். அதற்கு ஜாக்லின் எனக்கு பொருந்தும்தான் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து சத்யாவிடம் லீடர் ஷிப் குவாலிட்டி ஒருத்தவங்க கிட்ட இருக்கனும்... என்று சொல்ல வரும்போது இடையில் சத்யா நீங்க பேசுறது நாமினேஷன் ரிவ்யூ மாதிரி இருக்கு என்று சொல்ல, நான் எடுக்கிறது கிளாஸ் தான் நீங்க கவனிக்க வேண்டும். உங்களுக்கு பிடிக்கல என்றால் வெளியே எழுந்து போங்க என்று சொல்ல சத்யா அந்த கிளாசை விட்டு வெளியே செல்கிறார். இந்த அதிரடியான ப்ரோமோ இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை குவித்து வருகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications