பிக் பாஸில் ரஞ்சித்தை அடித்த தர்ஷா.. உயிர் நாடியில் விழுந்த அடி.. கோபத்தில் சக போட்டியாளர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்று நடந்த டாஸ்க்கில் தர்ஷா குப்தா ரஞ்சித்தின் ஆணுறுப்பில் அடித்து இருக்கிறார். அதனால் வலியில் ரஞ்சித் துடிக்க சக போட்டியாளர்கள் எல்லோரும் தர்ஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது வாரத்தில் இந்த வார நாமினேஷன் free டிக்கெட் பெறுவதற்கான டாஸ்க் நடைபெற்றது. நேற்று எபிசோடில் இந்த வாரத்தில் மூன்று டாஸ்க் கொடுக்கப்படும் அதில் இறுதியாக எந்த அணி ஜெயிக்கிறதோ அந்த அணிக்கு நாமினேஷன் ஃப்ரீ டிக்கெட் கொடுக்கப்படும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று முதல் டாஸ்க் தொடங்கியது. அதாவது கார்டன் ஏரியாவில் ஒரு கருப்பு கலரில் காயின் இருக்கும். ஆண்களும் பெண்களும் போட்டி போட்டு அந்த காயினை எடுத்து அடுத்தவர்கள் முதுகில் ஒட்ட வேண்டும். பர்சர் அடிக்கும் போது அந்தக் காயின் யார் கையில் இருக்கிறதோ அல்லது முதுகில் இருக்கிறதோ அவர் அவுட் ஆகி வெளியே செல்ல வேண்டும்.
ஐந்து முறை அதுபோல பர்சர் அடிக்கும் இறுதியில் எந்த அணியில் அதிகமான போட்டியாளர்கள் இருக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். அதைத்தெடர்ந்து விளையாட்டு பரபரப்பாக தொடங்கியது.
ஆண் போட்டியாளர்கள் எல்லாம் பெண் போட்டியாளர்கள் மீது காயினை ஒட்டி வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் தர்ஷா மட்டும் களத்தில் இருக்க அவர் ஆண் போட்டியாளர்களிடம் இருந்த காயினை பிடிங்கி ஒட்ட வேண்டும் என்று முயற்சி செய்ய அப்போது மொத்தமாக எல்லோரும் கீழே விழுந்து விடுகிறார்கள்.
கீழே விழுந்தவர்களிடம் இருந்து காயினை வாங்கும் சண்டையில் ரஞ்சித் கீழே படுத்திருக்கும் போது அவருடைய ஆணுறுப்பில் தர்ஷா மிதித்து விடுகிறார். தர்ஷா மிதித்ததும் ரஞ்சித், அம்மா நீ அந்த இடத்தில் மிதிக்காத என்று வலியில் கத்த தர்ஷா உடனே காலை எடுக்கிறார். ஆனாலும் திரும்பத் திரும்ப அதே இடத்தில் மூன்று முறை மிதித்து இருக்கிறார்.
இது 24 மணி நேர லைவில் காட்டப்பட்டது. உயிர்நாடியில் தர்ஷா மூன்று முறை மிதித்து விட்டதால் வலியில் ரஞ்சித் அந்த இடத்தில் ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்து கொண்டு தனியாக அமர்ந்திருக்கிறார். அப்போது வந்த அருணிடம் நான் அந்த இடத்தில் மிதிக்காதே என்று சொன்ன பிறகும் தர்ஷா மிதித்து விட்டார் என்று வேதனையில் புலம்பி கொண்டிருக்கிறார்.
அவமானப்பட்டு வெளியே வந்த அர்னவ்.. ஆனால் பிக் பாஸால் அவருக்கு இத்தனை லட்சம் கிடைச்சிருக்கா?
அதனால் கோபமான அருண் தர்ஷாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ரஞ்சித் தன்னை அந்த இடத்தில் மிதிக்காத என்று சொன்ன பிறகு நீ காயினை வாங்க வேண்டும் என்று மிதிச்சிருக்கிற அது எவ்வளவு ஆபத்தான விஷயம்? விளையாட வேண்டும் என்பதற்காக இப்படி அந்த இடத்தில் அடித்து தான் விளையாடுவீங்களா? என்று கோபப்படுகிறார்

அதற்கு தர்ஷா நான் அந்த இடத்தில் மிதிச்சேன் என்று எனக்கு தெரியவே செய்யாது. அந்த அண்ணன் ஒருமுறை அங்கு மிதிக்காதே என்று சொன்னார். அதற்கு பிறகு நான் அங்கு மிதிக்கவே இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது வலியில் இருக்கும் ரஞ்சித் கூட அமைதியாக இருக்கிறார். ஆனால் தன் மீது சொன்ன குற்றச்சாட்டுக்காக தர்ஷா தான் கதறி கதறி அழுது கொண்டிருந்தார். கடைசியில் வேறு வழியில்லாமல் ரஞ்சித்தே தர்ஷாவை போய் சமாதானம் செய்தார். ஆனாலும் தர்ஷா அழுது கொண்டிருந்தார். இது பற்றி இந்த வாரம் விஜய் சேதுபதி என்ன சொல்லப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications