எலிமினேஷன் ஆன தீபக்கிற்கு யாருக்கும் கொடுக்காத கிப்ட் கொடுத்த பிக்பாஸ்.. இது வாழ்நாள் சாதனை!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் நேற்று 14வது வாரத்தில் 3வது எவிக்ஷனாக தீபக் வெளியேற்றினார். அவருக்கு யாருக்கும் கொடுக்காத பெரிய கிப்ட் ஒன்றை பிக் பாஸ் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கி 96 நாட்களை கடந்து இருக்கும் நிலையில் இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத அன்ஃபேர் எவிக்ஷன் நேற்று நடைபெற்றது.

அதாவது இந்த சீசனில் டைட்டில் வின்னராக வருவார் என்று எல்லோராலும் பேசப்பட்ட தீபக் நேற்று வெளியேற்றப்பட்டது தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இதுவரைக்கும் யாருக்கும் கிடைக்காத ஸ்பெஷல் கிஃப்ட் தீபக்கிற்கு கிடைத்திருக்கிறது. வழக்கம்போல யார் எவிக்ஷன் என்று அறிவித்ததும் தீபக் எல்லோரிடமும் பேசிவிட்டு கிளம்பினார்.
அப்போது முத்து குமரன் ரொம்பவே அழுது கொண்டிருந்தார். நீங்கள் பைனல் வரை வந்திருக்க வேண்டும் ஆனால் எப்படி இப்படி ஆச்சு என்று முத்து அழுதது எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. பிறகு தீபக் முத்துக்குமரனை சமாதானப்படுத்திவிட்டு வெளியே கிளம்பினார். அப்போது தீபக் பேசும்போது என் மகன் அப்பவே சொல்லிட்டு தான் போனான். இனிமேல் நீங்கள் எவ்வளவு நாள் இந்த வீட்டிற்குள் இருந்தாலும் அது போனஸ் தான் என்று அவன் சொன்னான் அது எனக்கு புரிந்தது என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து வழக்கம் போல எலிமினேட் ஆனவர்கள் எல்லோரும் டம்மி trophyயை உடைத்து விட்டு கிளம்பும்படி பிக் பாஸ் சொல்வார். ஆனால் தீபக் அப்படி செய்த பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார். அதாவது இதுவரைக்கும் நடந்த சீசன்கள் அனைத்திலும் நீங்கள் தான் சிறந்த கேப்டன் என்று சொல்லி பிக் பாஸ் அவருக்கு பட்டம் கொடுத்து கிரீடம் அணிவிக்க சொன்னார்.
அதைப் பெற்றுக் கொண்டு தீபக் எமோஷனலாக பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பினார். தலையில் கிரீடத்தோடு தீபக் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.
அதுபோல பிஸ் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தீபக்கிற்கு ஒரு வாரத்திற்கு ஒன்றரை முதல் இரண்டு லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அதிகமான சம்பளத்தோடு வெளியே வந்த போட்டியாளர்களில் தீபக்கும் ஒருவராக இருக்கிறார். ஆனால் அவருடைய வெளியேற்றம் இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வரைக்கும் அன்அபிசியல் ஓட்டிங் லிஸ்டில் பவித்ரா தான் கடைசி இடத்தில் இருந்தார்.
அவரை தொடர்ந்து அருண் பிரசாத் மற்றும் வி ஜே விஷால் இருந்தனர். தீபக் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் அவர் எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பது பலருடைய கேள்வி. ஏற்கனவே ஒவ்வொரு சீசனிலும் 14-வது வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு அன்ஃபேர் எவிக்ஷன் வழக்கமாக இருக்கிறது. அதில் தான் தீபக் வெளியேற்றப்பட்டு இருப்பார் என்று தெரிகிறது.
ஆரம்பத்தில் இருந்தே தீபக்கிற்கு விஜய் சேதுபதி சப்போர்ட் செய்து வந்தார். அதனால் தீபக்கை வெளியேற்றுவது அதிகமாக பேசப்படும், அதனால் பினாலே பற்றிய எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கும் என்பதற்காக பிக்பாஸில் இந்த முடிவு எடுக்கப்பட்டதா? என்றும் கேள்விகள் எழுந்து வருகிறது.
அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் பலர் பி ஆர் வைத்து விளையாடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் தீபக் பி ஆர் எதுவும் இல்லாமல் நேர்மையாக விளையாடி வருகிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள். அவருடைய நண்பர்கள் மட்டும் அவருக்கு அவ்வப்போது சப்போர்ட் செய்து போஸ்ட் போடுவதை பார்க்க முடிகிறது. ஆனாலும் தனக்கு மக்கள் இவ்வளவு ஆதரவு கொடுத்ததே பெரிய விஷயம் அதற்கு நன்றி என்று தீபக் நெகிழ்ந்து பேசி இருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications