Bigg Boss 8 grand finale: நான் வெளியேற காரணம் இதுதான்.. ஓபன் ஆக பேசிய பவித்ரா.. குவியும் வாழ்த்து
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே இன்று நடைபெற்று வருகிறது. இதில் நான்காவது போட்டியாளராக பவித்ரா வெளியேற்றப்பட்டார். அவர் தான் எதற்காக வெளியேறினேன் என்பது பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர், முத்துக்குமாரன், ஜாக்குலின், சௌந்தர்யா உட்பட 18 போட்டியாளர்கள் முதல் நாள் என்ட்ரி ஆனார்கள். அதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு பிறகு ராணவ், ரயான், மஞ்சரி உட்பட ஆறு பேர் வைல்ட் கார்டு மூலம் இணைந்தனர்.

இவர்கள் மொத்தம் 24 பேரில் ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்து எவிக்ஷன் வந்தது. கடைசி வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க்கில் ஜாக்குலின் தோல்வி அடைந்ததன் மூலம் மிட்நைட் எவிக்ஷனில் வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து பவித்ரா, முத்துக்குமரன், விஷால், ரயான் மற்றும் சௌந்தர்யா ஆகிய ஐந்து பேரும் இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தனர்.
இந்த நிலையில் இன்று கிராண்ட் பினாலேவில் நான்காவது இடத்தில் பவித்ரா வெளியேற்றப்பட்டார். அவர் தன்னுடைய எவிக்ஷனுக்கு பிறகு நான் இந்த பிக் பாஸ் பயணத்தில் என்னை நானே புரிஞ்சுகிட்டேன். ரொம்ப பொறுமையாக இருந்தது தான் நான் வெளியே வந்ததற்கு காரணம். இந்த நினைவுகளை என்னைக்குமே மறக்க முடியாது.
ஒவ்வொரு நாளும் அனுபவிச்சு வாழ்ந்தேன். எனக்கு ஆதரவு கொடுத்து இத்தனை நாட்கள் கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார். அதோடு நான் இந்த வீட்டிலேயே என்னை இருக்க சொன்னால் கூட நான் சந்தோஷமாக இருந்து விடுவேன். நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இதை பலமுறை சொல்லி இருக்கிறேன்.
என்னுடைய குடும்பத்தினர் மாதத்திற்கு ஒருமுறை வந்து பார்த்தால் கூட போதும், எனக்கு இந்த வீட்டுக்குள் இருப்பது பிடித்திருக்கிறது. இந்த வீட்டிற்குள் பலருடன் பேசி பழகிய பிறகு தான் நான் இயல்பை புரிந்து கொண்டேன். என்னுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகளும் சோகங்களும் நடந்து இருக்கிறது.
சில இடங்களில் நான் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். அதனால் நான் எல்லோரிடமும் பேசி பழகுவதற்கு பயப்படுகிறேன். அது இப்போது எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மாற்றம் கொடுத்திருக்கிறது. இந்த மாற்றம் மூலமாக நான் வெளியே போய் என்னுடைய புது பயணத்தை தொடங்குவேன் என்று பேசி இருக்கிறார். நான்காவது போட்டியாளராக தேர்வான பவித்ராவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications