BB 8 Grand finale: மேடையில் ராணவை அடுத்தடுத்து அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி! தீபக் கேட்ட கேள்வி!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே ஒளிபரப்பாகி வருகிறது. பினாலே மேடையில் விஜய் சேதுபதி ராணவை அடுத்தடுத்து அவமானப்படுத்தி இருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது விஜய் சேதுபதி ராணவ்விடம் பேசியது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.

கிராண்ட் பினாலே மேடையில் முன்னாள் போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி என்னிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் கேள்வி கேட்கலாம் என்று சொல்ல, அதற்கு ராணவ் நீங்க இந்த நிகழ்ச்சியில் இருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள் சார் என்று கேட்கிறார். அதற்கு விஜய் சேதுபதி எந்த ஒரு நல்ல விஷயம் நடந்தாலும் அந்த இடத்தில் உங்களைப் போல குழப்பம் பண்ண கூடாது என்று நினைத்திருக்கிறேன்.
அப்படியே குழப்பம் செய்தாலும் உங்களைப்போல பாவமாக முகத்தை வைத்து எல்லாரையும் ஏமாற்றவும் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று சிரித்தபடி சொல்லிய விஜய் சேதுபதி, உங்களுடைய தலைமுடி அழகாக இருக்கிறது ஸ்டேட்டிங் பண்ணுனீங்களா என்று கேட்க, அதற்கு ஆமா சார் என்று ராணவ் சொல்கிறார்.
அதற்கு விஜய் சேதுபதி, எதிர்காலத்தில் நாம ரெண்டு பேரும் ஒரு படத்தில் ஒன்றாக நடிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நான் நடிக்க மாட்டேன். நடிப்பே வேண்டாம் என்று போய்விடுவேன் என்று சிரித்தபடியே சொல்கிறார். அதோடு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூட ராணவை தாக்கும் வகையில் தான் பேசி இருந்தார் என்று ராணவ் ரசிகர்கள் கூறி வருகிறது.
அதாவது ராணவிடம் இந்த நிகழ்ச்சி பற்றி பேசுங்கள் என்று விஜய் சேதுபதி சொன்னதும் ராணவ் இந்த நிகழ்ச்சியில் நான் அறிமுகமாகும் போது ரொம்பவும் பயந்து கொண்டே வந்தேன். பிறகு என்னுடைய பயத்தை வெளியே காட்டாமலே நான் விளையாடினேன். இந்த விளையாட்டில் பல மாற்றங்கள் எனக்குள் இருந்தது.
நீங்கள் தொகுத்து வழங்குவதை பார்க்கும்போது எனக்கு ஒரு தன்னம்பிக்கை வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இதெல்லாம் பொய் இதை நம்பாதீர்கள் என்று பிரேக் விட்டுவிட்டு விஜய் சேதுபதி போய்விட்டார். அதுபோல தீபக் இந்த நிகழ்ச்சியில் இருந்து எவிட்டான 18 போட்டியாளர்களில் ஒருவரை மீண்டும் நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பலாம் என்ற வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் யாரை அனுப்புவீர்கள் என்று கேட்க,
அதற்கு விஜய் சேதுபதி இந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றியும் எனக்கு தெரியும் என்று ஒவ்வொருவரை பற்றியும் சொல்லிக் கொண்டு வரும்போது ராணவ் ஒரு இடத்தில் நல்ல விஷயம் நடக்கும் அதை குழப்பம் செய்யும் நபர் என்று சொல்லி இருக்கிறார். இதனால் ஆரம்பத்தில் இருந்தே ராணவ் மீது விஜய் சேதுபதிக்கு ஏதோ வன்மம் இருக்கிறது அதனால் தான் பினாலே மேடையில் கூட அந்த வன்மத்தை இப்படி கொட்டுகிறார் என்று ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications