பிக் பாஸ் 8: ஜாக்குலின் எடுத்த ரிஸ்க்.. அவருக்கே வினையாக போனது! அதிரடியாக வெளியேற்ற காரணம் இதுதானா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இருந்து ஜாக்குலின் இந்த வாரத்தில் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதோடு 5 லட்சம் பணப்பெட்டியை எடுப்பதற்காக அவர் செய்த முயற்சி அவருக்கு வினையாக முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதியில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இந்த வார ஞாயிற்றுக்கிழமை முடிவடைய இருக்கிறது. கிராண்ட் பினாலேவில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பின் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்த வாரத்தில் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்திற்கு சென்று இருக்கிறார்கள். ஏற்கனவே எவிக்ஷனான போட்டியாளர்களும் கடந்த வாரத்திலிருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் உள்ளிருக்கும் போட்டியாளர்களில் மனநிலையை குழப்ப வைக்கவும் வகையில் போட்டியாளர்கள் சில பிரச்சனைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல இந்த வாரத்தில் சில டாஸ்குகள் புதியதாக தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு கடைசி வாரத்திற்கு முந்தைய வாரத்தில் டாஸ்க் தொடங்கும். அதில் எந்த நபர் வேண்டும் என்றாலும் பெட்டியை எடுத்துக்கொண்டு விளையாட்டில் இருந்து வெளியேறி விடலாம். ஆனால் இந்த முறை கடைசி வாரத்தில் தான் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் இதுவரைக்கும் இல்லாத வகையில் புதுமையாக டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு அறைக்குள் பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தின் தொகை அதிகரிக்கிறது. ஆனால் அதற்கு அந்த பெட்டிக்கான தூரமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் பெட்டியை தூக்கிக்கொண்டு போட்டியாளர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து விட வேண்டும் என்பதுதான் டாஸ்க் அப்படி வரவில்லை என்ற அந்த போட்டியாளர் எலிமினேட் ஆவார். அந்த வகையில் முதல் போட்டியாளராக முத்துக்குமரன் 50,000 பணப்பெட்டியை தூக்கி தன்னுடைய வெற்றி அமௌன்ட் உடன் இணைத்து இருக்கிறார்.
அவரை தொடர்ந்து ரயான், பவித்ரா, விஷாலும் பண பெட்டியை எடுத்து வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆனால் சௌந்தர்யா பாதியிலேயே மீண்டும் வீட்டுக்குள் திரும்ப வந்துவிட்டார். அதைத்தொடர்ந்து ஜாக்குலின் முயற்சி செய்தபோது குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர் வீட்டிற்குள் திரும்ப முடியாமல் எவிக்ஷன் ஆகி இருக்கிறார்.
இந்த சீசனில் இதுவரைக்கும் யாரும் செய்யாத சாதனையை ஜாக்குலின் செய்திருந்தார். 15ஆவது வாரங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் 15 வாரமும் இவர் நாமினேஷனில் இடம் பிடித்திருந்தார். எல்லா வரமும் இவரை மக்கள் காப்பாற்றி இருந்தனர். ஆனால் கடைசி வாரத்தில் இவர் எடுத்த முடிவே இவருக்கு வினையாக வந்திருக்கிறது. அதனால் இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications