தூக்கில் தொங்கிய அப்பா.. மண்ணெண்ணெய் ஊற்றி நின்ற அம்மா.. பாலியல் தொல்லை! ஜாக்குலின் மறுப்பக்கம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஜாக்லின் தன்னுடைய வாழ்க்கையில் வெளியே தெரியாத பல சோகங்கள் குறித்து நேற்றைய எபிசோடில் கண்கலங்க பேசியிருக்கிறார். தன்னுடைய தந்தை இறப்பு, தாயுடைய அவல நிலை, தனக்கு வந்த மிரட்டல்கள் என எல்லா விஷயங்களையும் ஜாக்குலின் பேசியிருக்கும் நிலையில் அவருக்கு அதிகமான ஆதரவு கிடைத்து வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஜாக்குலின் போட்டியாளராக அறிமுகமான போது இவர் இந்த நிகழ்ச்சியில் அதிகமாக பேசிக்கொண்டே இருக்கிறார், எதற்கெடுத்தாலும் சண்டை போட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார் என்ற பேச்சுகள் வந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இப்போது அவருக்கும் அதிகமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கிறது.

இந்த சீசனில் டைட்டில் வெற்றி பெறுவதற்கு ஜாக்குலினுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது எல்லோரும் தங்களுடைய வாழ்க்கையில் கடந்து வந்த சோகங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த வரிசையில் ஜாக்குலின் தன்னுடைய சோகக் கதை குறித்து பேசி இருக்கிறார்.
அதில் நான் விஜய் டிவியில் 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். என்னுடைய கதையை நான் எந்த இடத்திலும் சொன்னது கிடையாது. இதுதான் நான் என்னுடைய கதையை சொல்வதற்கு சரியான இடம் என்று நினைக்கிறேன். என்னுடைய வாழ்க்கை மிகவும் ஜாலியாக சென்று கொண்டிருந்தது... ஆனால் என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் தான் என்னுடைய வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
எல்லோருக்கும் அவர்களுடைய அப்பாவின் நினைவு என்பது பல்வேறு விதமாக பதிந்திருக்கும். ஆனால் எனக்கு என்னுடைய அப்பாவின் நினைவு அவர் தூக்கு கயிற்றில் தொங்கியது போன்று தான் பதிந்து இருக்கிறது. காரணம் எனக்கு விவரம் தெரிந்து என்னுடைய அப்பாவை நான் பார்த்த விதம் அப்படித்தான்.

இன்று வரை என்னுடைய அப்பாவின் முகம் எனக்கு அப்படித்தான் நினைவில் வருகிறது. அப்பா இறந்த பிறகு என்னுடைய தாத்தாவிடம் எங்க அம்மாவின் நிலத்தை கேட்டார் ஆனால் அவர் என்னுடைய மகனே இல்லை என்று ஆன பிறகு உனக்கு எதுக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அப்போது அம்மாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்று நின்றார்.
அந்த இடத்திலிருந்து தான் எங்களுடைய வாழ்க்கை தொடங்கியது என்று நினைக்கிறேன். அப்போது நான் என்னுடைய தாத்தாவிடம் சண்டை போட்டேன் அதற்குப் பிறகுதான் அவர் நிலத்தை தந்தார். இதைத் தொடர்ந்து என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக ஒருவர் துன்புறுத்தல் செய்தார். அது எனக்கு தெரிய வந்தது ஆனாலும் அதை வெளியே சொல்ல முடியாமல் இருந்தேன்.
என்னை என்னுடைய அப்பா அப்படி வளர்த்து விட்டார். பிறகு ஒருநாள் நானும் என்னுடைய அம்மாவும் நடந்து வந்து கொண்டிருந்தோம் அப்போது என்னுடைய நண்பரிடம் தவறாக நடந்து கொண்ட அந்த நபர் என் மீது காரை ஏற்றுவது போல வந்து பயமுறுத்தினார். அதற்கு காரணம் நான் அவர் பற்றிய விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக அவர் என்னை மிரட்டி இருக்கிறார் என்று எனக்கு புரிந்தது.
அதனால் நான் தைரியமாக காவல் நிலையம் சென்று புகார் செய்தேன். ஆரம்பத்தில் சுபகாரியங்களில் என்னுடைய அம்மாவை முன்னே நிற்க கூடாது என்று கூறியவர்கள், என்னை சரியாக வளர்க்கல என்று அம்மாவை குற்றம் சாட்டியவர்கள் என எல்லோரிடமும் நான் கேள்வி கேட்டேன். அந்த நேரத்தில் எனக்கு பணம் சம்பாதிக்கிறது ஒன்றுதான் நோக்கமாக இருந்தது.
அதற்கு பிறகு விமானத்தில் பணியாற்றும் பெண்ணாக வேலை செய்தேன். பிறகு விஜய் டிவி நடத்திய நீங்களும் ஆகலாம் விஜய் டிவி ஸ்டார் நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன். அதில் நான் தேர்வானேன் அதற்குப் பிறகு எனக்கு என் மீது நம்பிக்கை வந்தது பிறகு வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளலாம் என்ற தைரியம் இன்னும் அதிகமானது.
அதனால் கணவரையோ அல்லது மனைவியோ பிரிந்து வாழும் பெற்றோருக்கு கீழே வளரும் குழந்தைகள் எதை நினைத்தாலும் அவர்களால் அதை செய்ய முடியும். எதற்காகவும் மனதை விட்டுறாதீங்க என்று மோட்டிவேஷனலாக ஜாக்குலின் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications