Bigg Boss Tamil 8 winner ஆனார் முத்துக்குமரன்.. runner ஆன சௌந்தர்யா சொன்ன சூப்பர் வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இன்று கிராண்ட் பினாலே நடைபெற்று வருகிறது. இதில் வின்னராக முத்துக்குமாரனும், ரன்னராக சௌந்தர்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அவார்ட் கொடுக்கும்போது பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலேவில் ரசிகர்கள் எதிர்பார்த்ததுபடியே இன்று முத்துக்குமரன் வின்னராக தேர்வு ஆகி இருக்கிறார். இறுதிக்கட்டத்தில் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா இருவரும் மேடையில் நிற்கும் போது இவர்கள் இருவரில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று விஜய் சேதுபதி விளையாட்டு காட்டினார்.

இருவருடைய கைகளை விஜய் சேதுபதி பிடித்ததும் முத்துக்குமாரின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தது. அப்போது சௌந்தர்யாவிடம் உங்களுக்கு பயம் இல்லையா? என்று விஜய் சேதுபதி கேட்க, சௌந்தர்யா சிரித்துக்கொண்டிருந்தார். அதற்கு விஜய் சேதுபதி உங்களுக்கு பயம் இல்லையா? அல்லது பயத்தை மனதிற்குள் வைத்துக்கொண்டு ஸ்கூலாக இருக்கிறீர்களா என்று கேட்கிறார்.
அதற்கு சௌந்தர்யா, கொஞ்சம் பயம் இருக்கு சார் என்று சொல்கிறார். பிறகு உங்களுக்கு முத்துக்குமரனை பிடிக்கும் தானே என்று சௌந்தர்யாவிடம் விஜய் சேதுபதி கேட்க அதற்கு சௌந்தர்யா ஆமாம் என்று சொன்னதும் அப்போ முத்துக்குமரனுக்காக நீங்க விட்டுக் கொடுத்து விடுவீஙகளா என்று கேட்க, அதற்கு சௌந்தர்யா கொடுக்கலாம் சார் என்று சொன்னார்.
அதற்கு பிறகு முத்துக்குமரன் வெற்றியாளர் என்று விஜய் சேதுபதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து சௌந்தர்யாவிடம் இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கேட்க, அதற்கு சௌந்தர்யா ஒருவேளை நீங்க என் கைய புடிச்சு நீங்க தான் வெற்றியாளர்ன்னு சொல்லிடுவீங்கன்னு நெனச்சேன் சார். ஆனா சொல்லல என்பது கொஞ்சம் ஏமாற்றம் தான்.
ஆனால் நீங்க அப்படி சொல்லியிருந்தால் கூட எங்க அப்பா ஓடிவந்து அந்த அவார்டை புடிங்கி முத்துக்குமரனிடம் கொடுத்திருப்பார் என்று சிரித்தபடியே சொல்லி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் சௌந்தர்யாவை பாராட்டி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications