பிக் பாஸ் 8: ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. வெடித்த கலவரம்.. ரெட் கார்டு யாருக்கு?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அக்டோபர் ஒன்பதாம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோவில் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ரஞ்சித் ரவீந்தரை அடிக்க பாயும் போது இடையில் அருண் கீழே விழுந்து இருக்கிறார். இதனால் இன்று யாருக்கு ரெட் கார்டு கொடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போலத்தான் இன்றைய எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத பெரிய சம்பவம் ஒன்று நடக்க இருக்கிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. பிரச்சனை ஏற்படவில்லை என்றாலும் பிரச்சனையை ஏற்படுத்துவதுதான் பிக்பாஸின் வேலை என்பதை வீட்டிற்குள் கோடு போட்டு காட்டி விட்டார்.

பிக் பாஸ் எதிர்பார்த்தது போலவே போட்டியாளர்களும் நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என்று சொல்வது போல எதற்காகத்தாலும் வீண் விவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். இன்று காலை வெளியான ப்ரோமோவில் விஜே விஷால் மற்றும் பவித்ரா இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. அதில் விஜே விஷால் என்னை பார்த்து டி போட்டு கூப்பிடுகிறார் அது எனக்கு பிடிக்கவில்லை என்று பவித்ரா சண்டையிட்டு இருந்தார்.
அந்த சண்டைக்கு மத்தியில் இதற்கு சமாதானம் செய்யப் போன ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இடையே பெரும் சண்டை வந்திருக்கிறது. அதாவது தற்போது வெளியான ப்ரோமோவில் ரஞ்சித் இடம் பவித்ரா நீங்க கலாய்க்கிற மாதிரி எதுவும் பேசினீங்களா? என்று கேட்க, அதற்கு அந்த நேரத்தில் ரவீந்தர் நீங்க எதுக்கு தேவையில்லாம அந்த பெண்ணை பத்தி பேசினீங்க என்று ரஞ்சித்திடம் கையை நீட்டி பேசுகிறார்.
அதற்கு ரஞ்சித் கையை இறக்கு என்று சொல்கிறார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் கைகலப்பாக மாறப்போகுது போல இருக்கிறது. அதில் ரஞ்சித்தை அருண், ஜெஃப்ரி, அர்னாவ், தீபக் உட்பட பலர் பிடித்திருக்கிறார்கள். அப்போது ரஞ்சித் தன்னைப் பிடித்திருந்தவர்களை பிடித்து தள்ளும்போது அருண் கீழே விழுந்து விடுகிறார். அதோடு நிற்காமல் ரவீந்தர் மேலும் பேசிக்கொண்டே இருக்கிறார்.
ரஞ்சித் நீ கையை நீட்டி பேச நான் ஒன்னும் உன் வீட்டு வேலைக்காரர் கிடையாது என்று சொல்கிறார். பிறகு ரவீந்தர் ஒரு சோபாவில் உட்கார்ந்து இருக்கிறார். அவர் ரஞ்சித்திடம் டேய் என்ன பண்ணுவ என்று கத்தி பேச, ரஞ்சித் தன்னை பிடித்திருந்தவர்களை தள்ளிவிட்டு ஓடி வருகிறார். இந்த ப்ரோமோ இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது உண்மையான சண்டையா? அல்லது ஆண்கள் அணியில் இவர்கள் பிளான் போட்டு இப்படி சண்டை போடுகிறார்களா? என்ற சந்தேகம் வருகிறது. 24 மணி நேர எபிசோடில் இந்த காட்சிகள் இன்னும் வரவில்லை. ஒருவேளை இது உண்மையான சண்டையாக இருந்தால் ரவீந்தர் அல்லது ரஞ்சித் இவர்கள் இருவரில் ஒருவருக்கு ரெட்கார்ட் கொடுத்து வெளியேற்றப்படுவார்கள்.
முதல் நாள் ரவீந்தர் டாஸ்க் விளையாடும்போது காலில் அடிபட்டிருந்தபோது அவரை முழுமையாக கவனித்துக் கொண்டது ரஞ்சித் தான். ஆனால் இன்று இருவருக்கும் இடையே இவ்வளவு பெரிய சண்டை ஏற்பட்டு இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications