பிக் பாஸ் வெளிய காட்டுற மாதிரி இல்ல! ரெஸ்ட் ரூம் முதல் ஸ்மோக்கிங் ரூம் வரை! ரவீந்தர் உடைத்த ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்ட ரவீந்தர் அந்த நிகழ்ச்சி பற்றி பல விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அதில் பிக்பாஸ் தொடங்கிய முதல் நாள் நடந்த நிகழ்வுகள் முதல் ஒரு வாரம் முழுக்க போட்டியாளர்கள் நடவடிக்கை குறித்தும் பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் செய்யாத சாதனையை ரவீந்தர் செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வீட்டிற்குள் முதல் ஆளாக சென்ற ரவீந்தர் முதல் ஆளாக எலிமினேஷன் ஆகி வெளியே வந்திருக்கிறார். இதுவரைக்கும் ஆறு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ செய்த ரவீந்தர் முதல் வாரத்தில் வெளியேற்றப்பட்டது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.

bigg boss tamil 8 bigg boss 8 8

ஆனால் அவர் எப்போதும் போல தன்னை பற்றி எந்த விமர்சனங்கள் வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் ஜாலியாக கலாய்த்து கடந்து போய்க் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அந்த நிகழ்ச்சியில் தான் இருந்த ஒரு வாரம் என்ன நடந்தது என்பது பற்றி பேட்டிகளில் பேசி இருக்கிறார். அதில் நாங்க பிக் பாஸ் வீட்டிற்குள் ஆறு பேர் போனதும் கதவு திறந்தது என்று நீங்க வெளியே பார்த்திருப்பீங்க. ஆனால் அது எங்க ஆறு பேருக்காக திறக்கவில்லை.

எல்லோரும் வந்த பிறகுதான் திறப்பதாக இருந்தது என்று நினைக்கிறேன். ஆனால் சாச்சிகா ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்று சொன்னதால்தான் கதவு திறந்து விட்டாங்க. அதற்குப் பிறகுதான் அங்கு பிரச்சனை தொடங்கியது. உள்ளிருக்கும் போட்டியாளர்களில் பலர் என்னுடைய உருவத்தை வைத்தே என்னை மட்டம் தட்டி வெளியே அனுப்ப முயற்சி செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியும் இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு எத்தனை கட்ட பரிசோதனை நடக்கிறது என்று. உள்ளே நூறு நாட்கள் ஒரு போட்டியாளராக இருக்க முடியுமா? என்று அவருக்கு பல கட்டங்களாக மருத்துவ பரிசோதனை செய்து தான் பிக் பாஸ் வீட்டிற்குள் விடுவார்கள். எனக்கும் அத்தனை மருத்துவ பரிசோதனையும் நடந்தது.

அதற்குப் பிறகுதான் அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். முதல் டாஸ்க்கில் எனக்கு அடிபட்ட போது கூட பிக் பாஸ் உங்களால் தொடர்ந்து விளையாட முடியுமா என்று கேட்டார். ஆனால் நான் கான்பிடென்ட் ஆக முடியும் என்று விளையாடினேன் அதனால்தான் எனக்கு கால் வலி அதிகமாகி விட்டது.

அதுபோல நான் நடக்கும் போது மூச்சு சத்தம் கேட்கிறது. இவரால் உட்காரவும் முடியல எழுந்து நடக்கக்கூட முடியல இப்படி மூச்சு வாங்குவது என்று பலர் கேள்வி கேட்டதை நானும் பார்த்தேன். எனக்கு கழுத்து பக்கத்தில் மைக் இருப்பதால் நம்முடைய மூச்சு சத்தம் அவ்வளவு வேகமாக கேட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். மத்தபடி பேட்டிகளில் பேசும்போது நான் அப்படியா மூச்சு விடுகிறேன்.

அது போல சில பெண்கள் எனக்கு ஏதாவது உதவி செய்யட்டுமா அண்ணா என்று வந்து கேட்பார்கள். ஆனால் அவர்கள் பாசத்திற்காக கேட்கிறார்களா என்றால் கேள்வி குறிதான். ஒவ்வொரு முறையும் நம்மிடம் ஏதாவது செய்யவா என்று கேட்டுக் கொண்டு கேமராவை பார்ப்பவர்கள் தான் அங்கு ஏராளமானோர் இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் முத்துக்குமரன் உட்பட ஒரு சிலர் உண்மையான பாசத்தோடும் இருக்கிறார்கள். முத்துக்குமரன் விளையாட்டு அருமையாக இருக்கிறது. என்னுடைய இடத்தை அவன் நிரப்பி விட்டான் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் அவன் என்னை விட சிறப்பான ஆட்டக்காரன். அவன் மூன்று முறை ப்ரோ கபடி லீக்கில் முயற்சி செய்து தேர்வாகாமல் போய்விட்டான்.

இந்த நிகழ்ச்சியில் அவன் உண்மையாக நடக்கிறான். விளையாட்டு புத்தி இருந்தாலும் வெளியே நாம் செய்வது எப்படி போகும் என்று புரிதல் இல்லாமல் இருக்கிறான் அதுதான் அவனுடைய மைனஸ் ஆக இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் முத்துக்குமரனை எல்லா தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு நான் வெளியே வந்த பிறகு எனக்கு முதல் முதலாக போன் செய்தது அர்ச்சனா தான்.

நீங்க நல்லா விளையாடுனீங்க என்று என்ன பாராட்டுனாங்க. பிறகு அருண் ஏன் இப்படி விளையாடுறான்னு எனக்கு தெரியல போன முறை அவனுக்கு தான் பிக் பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. அப்போ அவன் என்னை போக சொல்லி எனக்கு அட்வைஸ் கொடுத்தான். அவன் சொன்னபடி தான் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடினேன் என்று அர்ச்சனா சொன்னாங்க.

அது எனக்கு அதிர்ச்சியா இருந்தது. அவங்க ரெண்டு பேரும் நண்பர்கள் என்பது எனக்கு தெரியாது. அருண் நல்ல விளையாட்டு காரன் தான் ஆனால் அவன் இன்னசென்ட் மாதிரி நடிக்கிறான். அதுபோல பெண்களை ஜாக்குலின் மற்றும் தர்ஷிகா இந்த விளையாட்டை பற்றி சரியான புரிதல்களோடு சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுபோல அர்ச்சனா சொல்லும்போது இன்னொரு விஷயத்தையும் சொன்னாங்க, அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள்ள ஸ்மோக்கிங் ஏரியாவில் தான் எல்லோரும் குரூப்பா சேர்ந்து பேசுவாங்க. அங்கே பேசுவது வெளியே காட்ட மாட்டாங்க என்பதால் யாரை கவுக்கலாம் யாரை அடிக்கலாம் என்பது எல்லாம் அங்கே தான் பிளான் போடுவாங்க என்று சொன்னாங்க.

அதுபோல இந்த சீசனிலும் கூட என்னைப் பற்றி பெண்கள் அவன் குண்டன், அவனுக்கு சாப்பாடு போட்டு முடியாது என்றெல்லாம் கிண்டல் செய்து இருக்கிறாங்க என்று அந்த பேட்டியில் ரவீந்தர் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+