பிக் பாஸில் நடப்பது இதுதான்! வெளியே தெரியாது.. பெரிய போராட்டம்.. போட்டுடைத்த ரயான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி நேற்று ஜனவரி பத்தாம் தேதியோடு முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது இடத்தில் வெற்றி பெற்ற ரயான் இன்று தான் நடித்த படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலர் போட்டி போடுகிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு வெளி உலக தொடர்பு எதுவும் இல்லாமல் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் முகத்தை மட்டுமே பார்த்து விளையாடும் போட்டியாளர்களின் விளையாட்டு ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது.

அதே நேரத்தில் கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளரான ரயான் போட்டியாளராக வந்த போது பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் ஒரு சில வாரங்கள் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்த நிலையில் திடீரென்று அவருடைய மாற்றம் ரசிகர்களுக்கு வியப்பை கொடுத்தது.
அவருடைய குடும்பத்தினர் வந்து விட்டுப் போன பிறகு ரயான் வெறித்தனமாக தன்னுடைய விளையாட்டை தொடங்கியிருந்தார். டிக்கெட் டூ பினாலேவில் வெற்றி பெற்று நேரடியாக அவர்தான் பைனலுக்கு வந்தார். ஆனாலும் அவர் ஐந்தாவது இடத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
அப்போது ரயான் பேசும்போது, இது எனக்கு என்னை அறிந்து கொள்ளும் பயிற்சியாகவே இருந்தது. ஒவ்வொரு நாளும் நான் நிறைய கற்றுக் கொண்டேன். கடைசி நேரத்தில் தான் நான் ஆட்டத்தை புரிந்து ஆடினேன். முத்துக்குமரன் தான் எனக்கு மோட்டிவேஷனாக இருந்தார். என்னுடைய மன நிறைவின்படி ஆடி இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இவருடைய எலிமினேஷன் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. முத்துக்குமரனுக்கு போட்டியாக ரயான் இருந்தார். ஆனால் ஐந்தாவது இடத்தில் வெளியேறியது பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு லாஸ்லியா நடிப்பில் வெளியான மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் என்ற திரைப்படத்தில் பட பிரமோஷனில் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் ரயான் நடித்ததற்காக லாஸ்லியா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தபோது அவரும் பிரமோஷனில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் பயணம் முடிந்த அடுத்த நாளே தன்னுடைய சினிமா வேலைகளை ரயான் பார்க்க தொடங்கி விட்டார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்க் பீஸ் என்று பட்டத்தை வென்ற ரயான் அது பற்றி தற்போது நடந்த பிரமோஷனில் பேசும்போது, நேற்றுதான் பிக் பாஸ் முடிஞ்சது, உடனே என்னுடைய அடுத்த பணியை தொடங்கி விட்டேன். இந்த படத்துக்காக முதல்ல இயக்குனர் அருண் கிட்டபேசும்போது அவருக்கே பெருசா என் மேல நம்பிக்கை இல்ல.
இந்த படத்துக்கு முன்னாடி நான் எந்த விஷயமும் பெருசா பண்ணல. என்னை நான் நிரூபிக்கிறதுக்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கல. இந்த படத்துல நடிக்கும் போது தினம் தினம் பல விஷயங்கள் நான் கத்துக்கிட்டேன். இந்த படத்துல நடிக்கும் போது லாஸ்லியா கிட்ட பிக் பாஸ் பற்றி பேசினேன்.
அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு நானே பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனேன். அது நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்காத விஷயம்தான். எல்லோரும் வாய்ப்புக்காக காத்திருப்பாங்க எனக்கு இப்போ அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை நான் சரியா பயன்படுத்திக்கணும்னு நினைக்கிறேன் என்று பேசி இருக்கிறார்.
அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் போயிட்டு வந்தவர்கள் பலர் உடல் எடை குறைந்து இருப்பது குறித்து கேள்விக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் பிக் பாஸ் வீட்டுக்குள்ள சாப்பாடு கிடைக்கும். ஆனால் அதுக்குன்னு பெரிய டாஸ்க் இருக்கிறது. இப்போ பிக் பாஸ் வீட்டுக்கு போயிட்டு வந்தவங்க பலரும் எடை குறைஞ்சி இருக்காங்க.
அதுக்கு காரணம் உள்ளே இருக்கும் மன அழுத்தம் மற்றும் டாஸ்க் தான் என்று சொல்வேன். வெளியே பிக் பாஸ்க்குள் நடக்கும் சில செயல்கள் மட்டும்தான் காட்டப்படுகிறது. உள்ளே அதிகமான விஷயங்கள் இருக்கிறது என்று அந்த நிகழ்ச்சியில் ரயான் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications