என்னை பிக் பாஸ் விட்டு போக சொன்னாங்க! நான் இதை தான் கேட்டேன்! ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த சேதுபதி
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை நிகழ்த்தக்கூடாது என்றும் அவர் தொகுத்து வழங்குவது குறித்து வெளியாகும் மீம்ஸுகளுக்கு இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி பதிலடி கொடுத்து இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கடந்த ஏழு சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 8வது சீசன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு இந்த சீசனிலிருந்து நான் விலகி விட்டேன் என்று கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே விஜய் சேதுபதி இன்றைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கி இருந்தார்.

ஆனால் இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த நிலையை முற்றிலுமாக மாற்றி விஜய் சேதுபதி தனக்குறிய தனி தன்மையோடு நிகழ்ச்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சரி இல்லை என்று அதிகமான மீம்ஸ்கள் வலம் வருவது வாடிக்கையாக இருக்கிறது.
அதுபோல விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சாச்சனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டுகளும் எழுந்தது. அதற்குப் பிறகு ஜெஃப்ரிக்கு ஆதரவாக விஜய் சேதுபதி செயல்படுகிறார் என்றும் சிலர் குற்றம் சாட்டி வந்தனர். அதிலும் குறிப்பாக கடந்த வாரத்தில் ராணவ் மற்றும் ஜெஃப்ரிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டபோது ஜெஃப்ரிக்கு மட்டும் விஜய் சேதுபதி அதிக சப்போர்ட் கொடுக்கிறார் என்று ராணவின் அப்பா கூட ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் இதை பற்றி விஜய் சேதுபதி விளக்க வேண்டும் என்று பிக் பாஸ் அனுப்பினர் முடிவெடுத்தார்களோ என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளராக வந்த ஒரு பெண் இதை குறிப்பிட்டு கேள்வி கேட்டிருக்கிறார். அதாவது உங்களைப் பற்றிய பல வதந்திகள் பரவி வருவதை நாங்கள் பார்க்கிறோம். அதிலும் நீங்கள் ஒரு போட்டியாளருக்கு சப்போர்ட் செய்வதாக சொல்கிறார்கள்.
பிறகு அந்த போட்டியாளர் வெளியே சென்றதும் அடுத்த இன்னொரு போட்டியாளருக்கு நீங்க சப்போர்ட் செய்வதாகவும் ஆதரவு தெரிவிப்பதாகவும் சொல்கிறார்கள். அந்த செய்தியை நீங்க பார்த்தீங்களா என்று அந்த பெண் கேட்கிறார். அதற்கு விஜய் சேதுபதி என்னை இந்த நிகழ்ச்சி நடத்தக்கூடாதுன்னு கூட சிலர் சொன்னாங்க, அதை நீங்க பார்த்தீங்களா என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்னைப்பற்றிய செய்திகள் மற்றும் மீம்ஸ்களை எனக்கு ஷேர் செய்வார்கள்.
அதனால் நான் அதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் அதற்குள் நான் முழுமையாக போக மாட்டேன். அதை நான் பார்க்க தொடங்கி விட்டால் நான் எது செய்வதும் சரியா தவறா என்று ஒரு கேள்வி வந்துவிடும். அதனால் அதை கண்டுகொள்வது கிடையாது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வாரத்திற்குள் ரவீந்தர் சார் வெளியே போகும்போது எனக்கு வருத்தமாக இருந்தது.
இவரை உடனே வெளியே அனுப்ப வேண்டுமா? கூட ஒரு வாரம் இருக்க வைக்க முடியாதா என்று நான் கேட்டேன். அதுபோல ஆனந்தி வெளியே போகும்போது கூட ஆனந்திக்கு ஓட்டு கம்மியாக இருக்கா என்று அதிர்ச்சியா கேட்டேன். நான் இப்படித்தான் இருக்கிறேன் ஆனால் என்னை பற்றி என்னென்னவோ செய்திகள் வருகிறது அதைப் பற்றி நான் கண்டுகொள்ள போறது கிடையாது என்று விஜய் சேதுபதி தன்னைப் பற்றிய ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்றைய நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே பேசி இருக்கிறார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications