பிக் பாஸில் நேற்று விஜய்யை தாக்கி விஜய் சேதுபதி சொன்ன “அந்த“ பஞ்ச் டயலாக்.. இனி இதுதான் ட்ரெண்டா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் விஜய் சேதுபதி அங்கிருக்கும் போட்டியாளர்களிடம் ஒரு டயலாக் பேசி இருந்தார். அது ஏற்கனவே விஜய் பேசிய டயலாக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது. இது இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் நடத்திய பொதுக்குழு கூட்டம் பற்றி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நேற்று முழுக்க இணையத்தில் ட்ரெண்டிங்கில் விஜயின் பொதுக்குழு கூட்டம் தான் இடம் பிடித்தது. அதிகமான ரசிகர்கள் அதைப் பற்றி தான் இணையத்தில் தேடிக் கொண்டிருந்தனர். விஜயின் அரசியல் வாழ்க்கையில் நேற்று நடந்த நிகழ்வு அடித்தளமாக அமைந்திருக்கிறது.

விஜய் பேசிய பல வார்த்தைகள் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. சிலர் விஜய் பேசியது சரி என்று அவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால் பல அரசியல் கட்சி தலைவர்கள் விஜய் கருத்திற்கு எதிராக பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள். இப்படியான நிலையில் தான் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் விஜயை தாக்கும் வகையில் விஜய் சேதுபதி பேசி இருந்தார். அதுவும் இப்போது அதிகமாக பேசப்படுகிறது.
Bigg Boss Hindi 18: வெளியே போ என திட்டிய ஆண் போட்டியாளர்.. கெத்தா அடிச்சு நாக் அவுட் செய்த ஸ்ருதிகா
அதாவது இரண்டு வாரங்கள் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார். இது உள்ளிருக்கும் போட்டியாளர்களை அதிக அளவில் பயமுறுத்தியது. ஏற்கனவே நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு உள்ளே நடக்கும் நிலவரங்கள் குறித்து காட்டப்பட்ட போது இன்னைக்கு என்ன நடக்க போகுதுன்னே தெரியல. நினைச்சாலே கொஞ்சம் பயமா தான் இருக்கு என்று தீபக் உட்பட ஒரு சில போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
காரணம் விஜய் சேதுபதி உள்ளிருக்கும் போட்டியாளர்களை பேசவிடாமல் அவர் என்ன பதில் வர வேண்டும் என்று நினைக்கிறார்களோ அந்த பதிலை போட்டியாளர்கள் சொல்ல வைக்கிறது இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்படுகிறது. இந்த வாரத்தில் விஜய் சேதுபதி இணையத்தில் தன்னைப் பற்றிய ட்ரோல்களை பார்த்து இருப்பார் என்று தெரிகிறது.
சனிக்கிழமை எபிசோடில் அருணிடம் நான் உங்களை அவமானப்படுத்துகிறேன் என்று சிலர் வெளியே பேசிட்டு இருக்காங்க என்று சொல்லி இருந்தார். காரணம் அருணுக்கு ஆதரவாக பிக் பாஸ் ஏழாவது சீசன் டைட்டில் வின்னரான நடிகை அர்ச்சனா போஸ்ட் போட்டிருந்தார். அதுபோல பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள், இயக்குனர் உட்பட பலரும் அருணுக்கு ஆதரவாக போஸ்ட் போட்டிருந்தனர்
இதை விஜய் சேதுபதி கவனித்திருப்பார் என்று தெரிகிறது.

இதனாலேயே நேற்று விஜய் சேதுபதி தன்னுடைய கேரக்டரை கொஞ்சம் மாற்றியது போலத்தான் தெரிந்தது. போட்டியாளர்களை பேச விட்டு அதற்குப் பிறகு தன்னுடைய கருத்தை சொல்லி இருந்தார். சில இடங்களில் அவரையும் மீறி சில போட்டியாளர்களை எழுப்பி கேள்வி கேட்டுவிட்டு அவர்கள் பதில் சொல்வதற்கு முன்பு நீங்க உட்காருங்க பிறகு பேசிக்கிறேன் என்று உட்கார சொன்ன சம்பவம் நடந்தது.
ஆனால் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் முன்னுரை போல ஒரு டயலாக் பேசி இருந்தார். அதாவது வாய்ப்பு கொடுக்கப்படல, கொடுத்தாலும் சரியா செய்ய மாட்றாங்க, நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லுறாங்க... என்னை ஒதுக்குகிறாங்க... இப்படி எல்லாம் பல கருத்துக்கள் வீட்டுக்குள் இருந்து வருகிறது என்று முன்னுரை சொல்லி விட்டு, அடுத்ததாக விஜய் ஏற்கனவே ஒரு ஆடியோ லாஞ்சில் சொன்ன டயலாக்குக்கு செக்மென்ட் வைப்பது போல பேசி இருந்தார்.
அதாவது விஜய் சேதுபதி "உம்முன்னு இருக்கிறதும் தப்பு... கம்முனு இருக்கிறதும் தப்பு.." என்று நேற்று சொல்லி இருந்தார். இது ஏற்கனவே விஜய் "உசுப்பேத்தறவனிடம் உம்முனும் கடுப்பேத்துறவரிடம் கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்" என்று சொல்லி இருந்தார். அதை வைத்து விஜய் சேதுபதி இப்படி பேசினாரா? என்ற விமர்சனங்கள் எழுந்து வருகிறது.












Click it and Unblock the Notifications