"அம்பேத்கர் பெயருக்கு தடையா?” பிக் பாஸ் தமிழில் ஸ்கூல் டாஸ்கில் நடந்த சர்ச்சை – கானா வினோத்தின் பேச்சு மியூட்!
சென்னை: சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சம் வைக்காத நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 9 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி விடுகிறது.

அம்பேத்கர் பெயருக்கு மியூட்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் 'ஸ்கூல் டாஸ்க்' நடந்து வருகிறது. இதில் பிரஜன் முதல்வர் (பிரின்சிபல்) ஆகவும், கனி, அமித் ஆகியோர் ஆசிரியர்களாகவும் பங்கேற்றுள்ளனர். இந்த டாஸ்கின் போது போட்டியாளர்களில் ஒருவரான கானா வினோத் பேசிய ஒரு விஷயம் தான் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
வினோத்தின் பேச்சு
பிரஜன் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தபோது எழுந்து நின்ற கானா வினோத், ஒரு முக்கியக் கருத்தைக் கூறி, இறுதியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பெயரை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். ஆனால், விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோவில், அம்பேத்கர் பெயரை வினோத் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் 'மியூட்' போடப்பட்டுள்ளது. அதாவது, அவர் பேசிய அந்த பெயர் மறைக்கப்பட்டு, சத்தம் ஒலிக்காமல் வெளியிடப்பட்டுள்ளது.
ரசிகர்கள் கேள்வி
கானா வினோத் குறிப்பிட்ட அந்தக் கருத்து வருமாறு: "நீ கற்ற கல்வி உன் சமுதாயத்திற்கு பயன்படவில்லை என்றால் நீ சாவதே மேல்". இப்படிப்பட்ட சமூக நீதி சார்ந்த ஒரு முக்கியமான கருத்தைக் கூறியபோது, அதற்குக் காரணமான முன்னோடித் தலைவரின் பெயரை மட்டும் மறைத்தது ஏன் என்று சமூக வலைதளங்களில் கடும் விவாதம் எழுந்துள்ளது.
சர்ச்சை வெடித்தது
இதைக் கண்ட நெட்டிசன்கள் மற்றும் பார்வையாளர்கள், "பிக் பாஸ் வீட்டுக்குள் அம்பேத்கர் பெயரை பயன்படுத்தத் தடை இருக்கிறதா?" என்று விஜய் டிவிக்கு கடுமையான கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு கல்விச சூழல் சார்ந்த டாஸ்கில் இத்தகைய ஒரு முக்கியத் தலைவரின் பெயரைக் கூடப் பயன்படுத்தக் கூடாது என்று நிகழ்ச்சி தரப்பு நினைத்தது ஏன் என்ற குழப்பம் நிலவுகிறது.
சமூக நீதியை பேசுபவரின் பெயரே மறைக்கப்பட்டது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது மேலும் ஒரு விமர்சன புள்ளியை பதிந்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications