Bigg Boss: ரஜினிக்கு அடுத்து நான் தான்! அவருக்கே அப்படி நடந்ததே? திவாகர் சொன்ன விஷயம்! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: நடிப்பு அரக்கன் எனத் தன்னை முன்னிறுத்தி வரும் திவாகர் (வாட்டர்மெலன் ஸ்டார்), பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகும், அளித்திருக்கும் பேட்டிதான் இப்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது. தான் வெளியேறியதைப் பற்றி ஒரு துளி கூட வருத்தப்படாமல், "எனக்குக் கிடைத்த ரெஸ்பான்ஸ் பயங்கரம்!" என்று அவர் பேசியிருக்கும் பேச்சு, பிக்பாஸ் நிகழ்ச்சியையும், அவரையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

மக்கள் கண்ணீர் விட்டார்களாம்
நிருபர் ஒருவர், "வெளியே வந்த பிறகு ரெஸ்பான்ஸ் எப்படி சார் இருக்கு?" என்று ஒரே ஒரு கேள்வியைத்தான் திவாகரிடம் கேட்டார். அதற்கு அவர் கொடுத்த பதில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. "ஐயய்யோ சார்... பயங்கர ரெஸ்பான்ஸு சார்! பிக்பாஸில் ஆறு வாரம் இருந்திருக்கிறேன். முதல் மூன்று வாரங்களில் நீங்கதான் டாப்ல இருந்திருக்கீங்கனு வைல்ட் கார்டில் உள்ளே வந்தவர்கள் சொன்னார்கள்."
"நீங்க வெளியே வந்தது எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை என்று வெளியே வந்ததும் மக்கள் சொன்னார்கள். நீங்க இல்லாம அந்த ஷோ எப்படி இருக்கும்னு தெரியலனும் சொல்றாங்க. போர் அடிக்குது. ஃபன்னா இல்ல. ஒரே ஆளா இருந்து எல்லாரையும் துவம்சம் செஞ்சீங்க. நெகட்டிவிட்டியை உடைச்சு பாஸிட்டிவிட்டியைப் மாத்திருக்கீங்கனும் சொன்னாங்க."
திவாகரின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள், இந்த நிகழ்ச்சி குறித்து அவருக்குத் தவறான தகவல் மட்டுமே கிடைத்திருக்கிறதோ என்று விமர்சித்து வருகின்றனர். தான் ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் கோபப்பட்டேன் என்று மீண்டும் ஒருமுறை விளக்கம் அளித்த திவாகர், தன் கோபத்திற்குக் காரணம் கானா வினோத்தான் என்றும், வினோத்தின் ஒரிஜினல் முகம் வெளியே தெரியாது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
விஜய் சேதுபதியின் பாராட்டு
ஆரம்பத்தில் இயற்கையாவே போச்சு. நாள் ஆக ஆக ஃபன்னா போச்சு. ஒரு சமயம் விஜய் சேதுபதி 'உங்க காம்போ நல்லா இருக்கு'னு சொன்னதும், அதிலிருந்து உருவக் கேலி பண்ண ஆரம்பிச்சுட்டாரு."கானா வினோத்தைப் பொறுத்தவரைக்கும் எல்லாப் பிரச்சினையையும் கொளுத்திப் போட்டு வேடிக்கையா பார்க்கிறவர். அவர் பக்கத்தில் நான் படுக்க ஆரம்பிச்ச பிறகுதான் அவருடைய ஒரிஜினல் முகத்தை நான் பார்க்க ஆரம்பிச்சேன்."
உருவக்கேலி மைனஸ்
"வெளியில் இருக்குறவங்களுக்குத் தெரியாது. உள்ளே இருக்குறவங்களுக்குத்தான் தெரியும். உருவக்கேலி நிறைய பண்ணுவாரு. இதனாலே எனக்கு மைனஸுதான். ஏனெனில் என்னுடைய ப்ளஸே எமோஷனலாக நல்லா பண்ணுவேன்." திவாகரின் இந்த பேச்சை பார்த்த ரசிகர்கள், இருவருக்கும் இடையேயான மோதல் இன்னும் முடியவில்லை என்பதையே இந்த பேட்டி காட்டுவதாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
நான் நடிப்பு அரக்கன் தான்
"நடிப்பு வராமல் ஏன் 'நடிப்பு அரக்கன்'னு பேர் போடுறீங்க?" என்ற ரசிகரின் கேள்விக்கு திவாகர் பதிலளித்துள்ளார். "நடிப்பாலதான் இன்னிக்கு பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே போயிருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் காமெடி நடிகர் யோகி கூட என்னை மாதிரியே பண்ணியிருந்தார். அதுவே எனக்குக் கிடைத்த பெரிய வெற்றி" என்று, தான் ஒரு உண்மையான நடிகர் என்பதை மீண்டும் நிரூபிக்க முயன்றார்.
ரஜினியுடன் ஒப்பிடல்
"இப்ப மட்டும் நான் நடிக்கல, பள்ளிப் பருவத்தில் இருந்தே நான் நடிக்க ஆரம்பிச்சுட்டேன். எல்லாப் போட்டிகளிலும் நான் தான் ஃபர்ஸ்ட். பெரிய பெரிய நடிகர்களுக்கே இந்த மாதிரி நடந்திருக்கு. ஏன் ரஜினிக்கே அவருடைய முதல் படத்திலேயே, 'நீயெல்லாம் நடிகரா?' என்று கேட்டிருக்கிறார்கள். விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதனால் நான் மக்கள் கண்களில் பட ஆரம்பிச்சுட்டேன். நான் நடிப்பு அரக்கன் தான் சார். எந்த வித சந்தேகமும் இல்லை" என்று பேசியுள்ளார்.
மொத்தத்தில், திவாகர் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயும் வெளியேயும் தனது பாணியை மாற்றிக்கொள்ளாமல் இருப்பது, தொடர்ந்து சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகவே இருக்கிறது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications