Bigg Boss Finale: பிக் பாஸ் ஃபினாலே- வில் மாற்றப்பட்ட முடிவு.. டைட்டில் வின்னர் இவங்க இல்லையா? திடீரென வெளியேற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே தற்போது நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு முக்கிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. இந்த சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என்று பெரும்பாலானோர் கணித்திருந்த போட்டியாளர் அரோரா, ஃபினாலே சுற்றிலேயே வெளியேற்றப்பட்டுள்ளார்.
கிராண்ட் ஃபினாலேக்கு நான்கு போட்டியாளர்கள் தேர்வாகியிருந்த நிலையில், சபரி, திவ்யா கணேஷ், தினேஷ் மற்றும் அரோரா ஆகியோர் களத்தில் இருந்தனர். இதில் அரோராவே டைட்டில் வெல்ல அதிக வாய்ப்புள்ளவர் என்று சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், கடந்த வார எபிசோட்களில் விஜய் சேதுபதி அரோராவுக்கு ஆதரவாக பேசிய விதம் தான்.

இதனால், "பிக் பாஸ் டீம் அரோராவையே ஜெயிக்க வைக்க முயற்சி செய்கிறது" என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக எழுந்தன. அந்த விமர்சனங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், சில நாட்களுக்கு முன்பு ஃபினாலே வாக்குப்பதிவுக்காக கொடுக்கப்பட்ட நான்கு போட்டியாளர்களின் போன் நம்பர்களில், அரோராவை தவிர மற்ற மூன்று போட்டியாளர்களுக்கு சரியாக கால் செல்லவில்லை என்ற புகார்களும் எழுந்தன. இதை வைத்து, "விஜய் டிவி மோசமாக நடந்து கொண்டு, அரோராவே டைட்டில் வின்னராக வர வேண்டும் என்று பிளான் போடுகிறது" என்று ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று வெளியான தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. வாக்குகளின் அடிப்படையில் இந்த சீசனில் அதிக ஆதரவு பெற்றவர் திவ்யா கணேஷ் என்பதும், அதே நேரத்தில் அரோரா ஃபினாலே சுற்றிலேயே முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார் என்பதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், அரோரா இந்த சீசனின் நான்காவது இடத்தை பிடித்தார்.
இந்த வெளியேற்றம் ரசிகர்களிடையே கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. "டைட்டில் வின்னர் என்று நினைத்தவர் முதல் வெளியேற்றமே ஆகிவிட்டார்" என்று சிலர் ஆச்சரியப்பட, "வாக்குகள் தான் முக்கியம், கணிப்புகள் இல்லை" என்று பலர் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரோரா குறித்து முன்பே சில விமர்சனங்களும் இருந்தன. அவர் பல இடங்களில், "இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்றால் தான் நடிக்க வேண்டும்", "அல்லது மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டும்" என்று மாறி மாறி பேசியது குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால், "சோசியல் மீடியா மூலம் ஏற்கனவே அதிகமாக சம்பாதிக்கும் அரோரா, மக்களின் அனுதாபத்தை பெறவே இப்படிப் பேசுகிறாரா?" என்ற விமர்சனங்களும் எழுந்தன.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஃபினாலே மேடையில் விஜய் சேதுபதி நேரடியாக அரோராவிடம் கேள்வி எழுப்பினார். "சில இடங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்றீங்க... சில இடங்களில் படிக்க வேண்டும் என்று சொல்றீங்க... இப்போ உங்களுடைய இறுதி முடிவு என்ன?" என்று கேட்டார். அதற்கு அரோரா, "நான் படிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய முடிவு" என்று தெளிவாக பதிலளித்தார்.
அதன்பின்னர், விஜய் சேதுபதி அரோராவை அவரது நண்பர்களுடன் சேர்ந்து அமர சொல்ல, முதல் நாளிலிருந்து அவருடன் நெருக்கமாக இருந்த துஷார் எழுந்து வந்து அரோராவை கட்டிப்பிடித்து வாழ்த்துகள் தெரிவித்தார். இந்த காட்சி பலரையும் நெகிழ வைத்தது.
மொத்தத்தில், பிக் பாஸ் தமிழ் சீசன் 9 கிராண்ட் ஃபினாலே, எதிர்பார்ப்புகளையும் விமர்சனங்களையும் தாண்டி, வாக்குகளின் பலத்தால் முடிவுகள் மாறக்கூடும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. டைட்டில் வின்னர் யார் என்பதைக் காட்டிலும், "நியாயமான முடிவு தான் வந்ததா?" என்ற கேள்விக்கு இந்த வெளியேற்றம் ஒரு பதிலாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications