Bigg Boss 9: பிக் பாஸில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம்! இந்த வாரம் வெளியே போவது மூன்று பேரா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் டிசம்பர் 27 ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு புதிய தகவலை வந்திருக்கிறது. அதாவது இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையிலும் இந்த நிகழ்ச்சியில் யார் டைட்டில் வெற்றி பெறப் போகிறார்கள் என்று ரசிகர்களால் யூகிக்க முடியாத நிலைதான் உருவாகிக் கொண்டிருக்கிறது.

இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் நிகழ்ச்சி தொடங்கி ஒரு சில வாரங்களிலே இவர்தான் இந்த சீசன் டைட்டில் வின்னராக வரவேண்டும் என்று ரசிகர்கள் பிக்ஸ் பண்ணி விடுவார்கள். ஆனால் இந்த சீசன் அதற்கு நேர் மாறாக இருக்கிறது. ஆரம்பத்திலிருந்து இந்த சீசனில் இருக்கும் போட்டியாளர்களின் விளையாட்டு ஒவ்வொரு வாரமும் மாறிக்கொண்டிருக்கிறது.
இவங்க நல்லவங்களா கெட்டவங்களா என்று சொல்ல முடியாத மாதிரி தான் ஒவ்வொருவருடைய விளையாட்டும் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு பாதிக்கு பாதி நெகட்டிவ் தான் இருக்கிறது. இப்படியான நிலையில் இந்த வாரத்தில் மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.
அதிலும் இரண்டு பெண் போட்டியாளர்கள் ஒரு ஆண் போட்டியாளர்.. யார் தெரியுமா? சுபிக்ஷா, அரோரா மற்றும் அமித் பார்கவ் மூன்று பேரும் இந்த வாரம் வெளியேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் அரோரா இருந்தாலும் அவருடன் சுபிக்ஷாவையும் வெளியேற்ற போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தற்போது வெளியான தகவலின் படி அமித் தான் இந்த வாரம் வெளியேறப் போகிறார் என்று கூறப்படுகிறது.
தற்போதைய நேரத்தில் படி இந்த வாரத்திற்கான சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. இதில் கடைசி நேரத்தில் எந்த மாற்றம் ஆனாலும் நடக்கலாம். ஆனால் உள்ளிருக்கும் பார்வையாளர்கள் கொடுத்த தகவல் இப்படி மூன்று பேர் வெளியேற்றுவதற்கு தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாரத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வந்து விட்டு போயிருக்கிறார்கள்.
எல்லோரும் உள்ளே இருக்கும் மற்ற போட்டியாளர்களை குறை சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள். இதனால் குடும்பத்தினரின் பேச்சைக் கேட்டு எந்த போட்டியாளர் தங்களுடைய வீர விளையாட்டை தொடங்க போகிறார்கள் என்று ஆர்வமும் இருக்கிறது. அதே நேரத்தில் இனி நீங்க வயசுக்கு வந்தா என்ன? வரலன்னா என்ன? என்பது போலத்தான் நிலைமையும் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் மூன்று வாரம் தான் இருக்கிறது. இதற்குள் உள்ளிருப்பவர்கள் என்னதான் விளையாட்டை மாற்றினாலும் பெரிதாக சுவாரஸ்யம் இருக்கப் போவதில்லை என்ற மனநிலை மக்களுக்கு வந்துவிட்டது. ஆனாலும் இந்த வாரம் யாரை வெளியே தூக்கி போட போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications