தலைவரையே தூக்கி எறிந்த பிக் பாஸ்! "இந்த சீசனில் என்ன ஃபேமஸ் தெரியுமா? நோ டிசிப்ளின்!" துஷாரால் வந்த விபரீதம்
சென்னை: தமிழ் சின்னத்திரையில், எட்டு சீசன்கள் முடிந்து இப்போது ஒன்பதாவது சீசனை எட்டியிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி, ஆரம்பமே அமர்க்களமாகச் சர்ச்சைகளுடனும், முகம் சுளிக்கும் கன்டென்ட்களுடனும் போய்க்கொண்டிருக்கிறது. 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசனில், போட்டியாளர்களின் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளால், வீட்டுத் தலைவர் பதவியே பறிக்கப்பட்டிருக்கிறது!

பிக் பாஸ் வைத்த பஞ்சாயத்து
பிக் பாஸ் வீட்டில் ஒழுங்கு என்பதே தொலைந்து போய்விட்டதாக, பிக் பாஸ் இப்போது போட்டியாளர்கள் மீது நேரடி தாக்குதலைத் தொடங்கியுள்ளார். புதிதாக வெளியான ப்ரோமோவில், பிக் பாஸ் போட்ட ஒரு பஞ்சாயத்து தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ், போட்டியாளர்கள் அனைவரையும் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டார்: "ஒவ்வொரு சீசன்லயும் இந்த பிக் பாஸ் வீடு ஒரு ஃபேமஸா இருக்கும். ஆனா, இந்த சீசன்ல என்ன ஃபேமஸா இருக்குன்னு தெரியுமா?". போட்டியாளர்கள் அனைவரும் குழப்பத்துடன் நிற்க, பிக் பாஸ் சொன்ன பதில் தான் அதிர்ச்சி கலந்த கிண்டலை உருவாக்கியுள்ளது. "நோ டிசிப்ளின்!" என்று பிக் பாஸ் சொல்லி இருக்கிறார்
தலைவருக்கே தண்டனை
வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள், ஒழுக்கத்தைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டதாகப் பிக் பாஸ் நேரடியாகவே குற்றம் சாட்டினார். "தூங்குறது, மைக் போடறது இல்ல" என, போட்டியாளர்களின் அஜாக்கிரதையான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய பிக் பாஸ், இத்தனைக்கும் காரணம் யார் என்பதைத் தலைவரான துஷாரிடம் நேரடியாகவே கேள்வி கேட்டார்.
தலைவர் மீது பழி
"துஷார், நீங்களே பலவாட்டி மைக் போடாம இருக்கீங்க. அப்புறம் எப்படி மத்தவங்க போடுவாங்க?" என்று, வீட்டுத் தலைவரே விதிமீறலில் ஈடுபட்டதை சுட்டி காட்டினார். "டிசிப்ளின் இல்லாத வீட்டுக்குத் தலைவர் எதற்கு? தேவையில்லை!" என்று சொல்லிவிட்டு, "வீட்டுத் தலைவருக்கான பதவி உங்ககிட்ட இருந்து பறிக்கப்படுது!" என்று அறிவித்தார். பிக் பாஸ் வைத்த இந்த அதிரடித் தண்டனையால், தலைவராக இருந்த துஷாரின் முகம் மாறிப் போனது!
கலாச்சார சீரழிவுக்கு கிடைத்த தண்டனையா?
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு சில நாட்களிலேயே, அரோரா - திவாகர் மிரர் முத்தம், அரோரா - துஷார் 'தொடை தடவல்' கன்டென்ட் என, 'கன்டென்ட்' என்ற பெயரில் எல்லை மீறிய செயல்கள் அரங்கேறின. இவை ஒருபுறம் இருக்க, அடிப்படை விதிகளான ஒழுக்கத்தைப் பின்பற்றுவதிலும் போட்டியாளர்கள் தோற்றுப் போனார்கள்.
இப்படி, போட்டியாளர்கள் தங்கள் இஷ்டத்துக்கு நடந்துகொள்வது, "பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் கூத்தாடிகள் இருக்கும் இடம்" என்ற விமர்சனத்தைப் பிரவீன் காந்தி போன்றவர்களிடம் இருந்து வர வைத்தது. இப்போது, ஒழுக்கமே இல்லாத வீட்டிற்குத் தலைவரே தேவையில்லை என்று பிக் பாஸ் தண்டனை கொடுத்திருப்பது, எங்கே இருந்தாலும் ஒழுக்கம் தேவை என்று பிக் பாஸ் கொடுத்திருக்கும் அல்டிமேட் கிண்டலாகவே பார்க்கப்படுகிறது!
இந்தத் தண்டனைக்கு பிறகு, ஆவது ஆவட்டும் என்று மீதிப் போட்டியாளர்கள் இன்னும் கட்டுப்பாடில்லாமல் நடப்பார்களா, இல்லைன்னா கட்டுக்கோப்பாக இருந்து அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பார்களான்னு பொறுத்திருந்து பார்ப்போம்!
"ஒழுங்கா விளையாடச் சொன்னா, தொடையைத் தடவிக்கிட்டு, மைக் போடாம தூங்கிட்டு இருந்தா, பிக் பாஸ் வேற என்னதான் செய்வாரு?" - இதுதான் இப்போ நெட்டிசன்களின் ஒரே கேள்வி!
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications