Bigg Boss: இந்த வாரம் பிக் பாஸை விட்டு அதிரடியாக வெளியேற்றப்படுவது இவர்தானா? கசிந்த தகவல்! காரணம்?
சென்னை: தமிழ் சின்னத்திரையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் 9வது சீசன், ஆரம்பம் முதலே ரசிகர்களுக்குச் சற்றுச் சோர்வை ஏற்படுத்தி வருகிறது. 8 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8 வது சீசன் முதல் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் 8வது சீசனில் ஹிட் கொடுத்தாலும், இந்த 9வது சீசன் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி ஆரம்பித்தது முதல், மந்தமாக போய்க்கொண்டிருப்பதால் இதற்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

குறையும் ஆர்வம்
நிகழ்ச்சி மீது ஆர்வத்தைக் கூட்ட பிக் பாஸ் குழுவினர் ஏதேதோ டாஸ்க்குகள் கொடுத்துப் பார்த்தாலும், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இந்த சீசனில் காமெடிக்கும் கடும் பஞ்சம் நிலவுகிறது. வினோத் மற்றும் திவாகர் இருவரும் செந்தில் - கவுண்டமணி போல் எலியும் பூனையுமாக இருந்து செய்த காமெடிகள் ஆரம்பத்தில் ரசிக்கும்படி இருந்தன. ஆனால், கடந்த வாரம் அவர்களின் காமெடி வைரலான விஷயத்தை விஜய் சேதுபதியே போட்டுடைத்ததால், இப்போது அவர்கள் இருவரும் கடுப்பேற்றும் விதமாக காமெடி செய்து வருகிறார்கள் என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.
ஓவர் டோஸ் நாடகம்
பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சண்டைகள் கூட இப்போது அட்டகாசமான நாடகமாகத் தெரிவதாலும், சண்டையிட்ட போட்டியாளர்கள் அடுத்த சில நிமிடங்களில் பேசிச் சமாதானம் ஆவதாலும், ரசிகர்களுக்குச் சீரியஸான கன்டென்ட் கூடக் கிடைக்கவில்லை. முதல் வாரமே டி.ஆர்.பி ரேட்டிங் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது என்று வெளியான தகவல், இந்தச் சீசனின் சோர்வை உறுதிப்படுத்தியது.
இந்த வார எலிமினேஷன்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரூல்ஸ் படி, வார வாரம் நடைபெறும் நாமினேஷனில் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் வார இறுதியில் வெளியேற்றப்படுவார். இதுவரை பிரவீன் காந்தி மற்றும் அப்சரா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வார நாமினேஷனில் வியானா, பிரவீன் ராஜ், சுபிக்ஷா, துஷார், கலை, ரம்யா ஜோ, அரோரா மற்றும் ஆதிரை ஆகியோர் சிக்கி இருந்தனர்.
மக்கள் தீர்ப்பு
இவர்களில் வியானா அதிகபட்ச வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். பிரவீன் ராஜ், சுபிக்ஷா, துஷார் மற்றும் கலையரசன் ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பெற்றுத் தப்பித்துள்ளனர். இறுதியில் ரம்யா ஜோ, அரோரா மற்றும் ஆதிரை தான் குறைவான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களில் மிகவும் கம்மியான வாக்குகளைப் பெற்றவர் ஆதிரை தான் என்று கூறப்படுகிறது. அவரைவிட அரோரா அதிகம் வாக்குகள் பெற்றுள்ளதால், இந்த வாரம் ஆதிரை எலிமினேட் ஆக அதிகம் வாய்ப்பு உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் சண்டைக் கோழியாக இருந்து வந்த ஆதிரை, முதல் வாரத்தில்உன்னை நடக்கும் பிரச்சனைகளில் நியாயமாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த சில வாரங்களாக அவருடைய நடவடிக்கை மற்றும் விளையாட்டு ரசிக்கும் படியாக இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. அவர் எஃப்ஜே பின்னாடி சுற்றிக்கொண்டு இருப்பது இவருக்கு மைனஸ் ஆக இருக்கிறது. இந்த வாரம் இவர் வெளியே சென்றால் பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கு ஒரு பெரும் பஞ்சம் வந்துவிடும் போல!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications