55 லட்சத்தை தட்டி தூக்கிய பிக் பாஸ் போட்டியாளர்.. அடேங்கப்பா டைட்டில் வின்னர் இவர்தானா? வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் எட்டாவது சீசன் நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நேற்று நடைபெற்றது. அதில் 55 லட்சம் பரிசு தொகையை வென்ற போட்டியாளர் யார் என்ற தகவலை பார்க்கலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு மொழியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் இப்பொழுதுதான் 8வது சீசன் வந்திருக்கிறது. ஆனால் மற்ற மொழிகளில் 20 சீசன்களை கடந்த நிகழ்ச்சியும் இருக்கிறது. தமிழைப் போலவே தெலுங்கில் இப்போது 8வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

Television Bigg Boss Tamil 8 Bigg Boss 8 8

தமிழில் ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதுபோல ஒவ்வொரு மொழிகளிலும் அங்கு பிரபலமாக இருக்கும் நடிகர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள். ஹிந்தியில் 18 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

ஹிந்தியில் சல்மான்கான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரைக்கும் இல்லாத வகையில் முதல் முறையாக தமிழில் இருந்து நடிகை ஸ்ருதிகா ஹிந்தியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அவரும் 70 நாட்களைக் கடந்து நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் தமிழ், ஹிந்தியை போல தெலுங்கில் நாகர்ஜுனா பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அவர் இல்லாத நேரத்தில் அந்த நிகழ்ச்சியை சமந்தாவும் தொகுத்து வழங்கி இருக்கிறார். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தெலுங்கில் எட்டாவது சீசன் துவங்கி விட்டது. இந்த நிகழ்ச்சியின் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி விடுதலை 2 பட குழுவினரோடு கலந்து கொண்டார்.

Television Bigg Boss Tamil 8 Bigg Boss 8 8

அதேபோல இந்த நிகழ்ச்சியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டிலை நிகில் என்ற போட்டியாளர் வெற்றி பெற்றிருக்கிறார். நிகில் தெலுங்கு பிக் பாஸ் 8வது சீசன் கோப்பையை வென்றுள்ளார். அவருக்கு 55 லட்சம் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அதுபோல தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தன்னுடைய படத்தின் ப்ரமோஷனுக்காக ராம் சரண் கலந்து கொண்டார். அப்போது டைட்டில் வின்னருக்கான காசோலையை நாகார்ஜுனா மற்றும் ராம் சரண் நிகில் கையில் கொடுத்திருக்கின்றனர்.

ஆனால் நிகில் டைட்டில் வின்னராக தேர்வானது அன்ஃபேர் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் நிகிலுக்கு அடுத்ததாக கௌதம் கிருஷ்ணா, அவினாஷ், பிரேரனா மற்றும் நஃபில் அப்ரிடி ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் வெற்றி பெற்றனர்.

100 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து டைட்டிலையும் வெற்றி பெற்றதும் நிகில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில், எனது நம்ப முடியாத ஆதரவாளர்களுக்கு.. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் எவ்வளவு நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.

இந்த வெற்றி என்னுடையது மட்டுமல்ல, இது என் மீதான உங்கள் நம்பிக்கை உங்கள் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் உங்கள் அன்புக்கு ஒரு சான்று. ஒவ்வொரு சவாலும் மறக்க முடியாதது. இந்த கனவை நினைவாக்கியதற்கு நன்றி. நான் பெற்ற இந்த வெற்றி உங்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் என்று கூறியிருக்கிறார். அதோடு தனக்கு வாய்ப்பு தந்த நாகார்ஜுனாவிற்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். இவருக்கு தெலுங்கு நடிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+