பிக்பாஸ் சொன்ன ஒரு வார்த்தை..கையெடுத்து கும்பிட்டு கதறும் போட்டியாளர்கள்..ஒரு வாரத்திற்குள்ளேயா??
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் கையெடுத்துக் கும்பிட்டு கதறி இருக்கிறார்கள்.
பிக்பாஸ் டாஸ்க் பற்றி கூறுவதை கண்டுகொள்ளாமல் போட்டியாளர்கள் செய்த செயல் ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெயர் மாற்றம் அடைந்த நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வேற லெவல் வெற்றியடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போட்டியாளர்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்கள் தான் மீண்டும் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக மாறி இருக்கின்றனர்.

வலம்வரும் ப்ரோமோக்கள்
இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் பற்றி ஆரம்பத்தில் ரசிகர்களிடம் அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. நாட்கள் போகப்போக என்ன இவர்களா இப்படி என்று சொல்லும் வகையில் ஒரு சில போட்டியாளர்கள் நடந்து வருகிறார்கள் என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகி வந்தாலும் அதில் குறிப்பிட்ட அதிரடியான சீன்கள் மட்டும் ப்ரோமோவாக வெளியாகி வருகிறது. ஒவ்வொரு ப்ரோமோ வெளியாகி குறைந்தது நான்கு மணி நேரங்களுக்கு பிறகு அந்த நிகழ்ச்சி லைவ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

முடிவடைந்த டாஸ்க்
பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்றே இதிலும் ப்ரோமோவை நம்பி நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு பல நேரங்களில் ஏமாற்றம் கிடைக்கிறது. என்றாலும் இந்த நிகழ்வில் என்னதான் நடக்கிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவில் பிக்பாஸில் தற்போது நடந்து கொண்டிருக்கும் களவாணியும் காவல்துறையும் எனும் டாஸ்க் முடியப்போகிறது. இரண்டாவது பாகத்தில் இதுவரைக்கும் காவல்துறையில் இருந்தவர்கள் இனி களவாணியாகவும், களவாணியாக இருந்தவர்கள் காவல்துறை ஆகவும் மாற்றி செயல்படவேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

போட்டியாளர்களின் செயல்பாடு
பிக்பாஸ் பேசிக்கொண்டிருப்பதை கொஞ்சம் கூட சட்டை பண்ணாமல் வனிதா, சுஜாதா போன்ற போட்டியாளர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள். பிக்பாஸ் பேசும்போது இது எங்களுக்கு வேண்டாம் பிக்பாஸ் எங்களுக்கு தேவையில்லை என்று கையெடுத்துக் கும்பிட்டு வருகிறார்கள். சுஜாதா, அபி வந்து முரட்டுத்தனமாக விளையாடிக் கொண்டிருந்தார் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு அபிநய் உங்களுக்கு நான் சாரி சொல்லிவிட்டேன் என்று கூறியிருக்கிறார். நிகழ்ச்சி தொடங்கி பத்து நாட்களுக்குள் எல்லாம் போதும் போதும் என்று சொல்கிற மாதிரி இருக்கிறது என்று கையெடுத்து கும்பிட்டு போட்டியாளர்கள் செய்த செயலுக்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications