பிக்பாஸ் அல்டிமேட்: மீண்டும் ரசிகர்களுக்கு பிடித்த 16 போட்டியாளர்கள்...கலகலப்புக்கு பஞ்சம் இல்லை
சென்னை: ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் அல்டிமேட் இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் விபரம் வெளியாகி உள்ளது.

24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் ஒளிபரப்பாகப்படுகிறது. இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படுவதால் ஒரு சில ரசிகர்களுக்கு நிகழ்ச்சி மீது சலிப்பு தட்டி விடும் என்று கூறி வந்தாலும், ஒரு சில ரசிகர்கள் இதுவும் நன்றாகத்தான் இருக்கும் என்று கூறி வருகின்றனர். ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இருபத்தி நான்கு மணி நேரமும் எடுக்கப்படும் நிகழ்வுகள் எடிட் செய்து ஒரு மணி நேரம் மட்டுமே காட்டப்படும் நிலையில் இனி நேரடியாக உள்ளே நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கலாம் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பிக்பாஸில் வித்தியாசமான முயற்சி
முதல்முறையாக பிக் பாஸ் வித்தியாசமாக பிக்பாஸ் அல்டிமேடில் களம் இறங்குவதால் இதற்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. ஏற்கனவே முதல் சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது இருந்த எதிர்பார்ப்பு தற்போதும் இருந்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் 24 மணி நேரமும் இதையே பார்த்துக்கொண்டிருந்தால் தங்களுடைய வேலை கெட்டுப் போய்விடும் என்று வருத்தத்தோடு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கலகலப்பும், பரபரப்பும் பஞ்சமில்லை
தற்போதைய அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் கடந்த ஐந்து சீசன்களில் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர்கள் தான். இந்த சீசனில் அதிகமாக கலந்து கொள்வதால் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகளும், கலகலப்பும் பஞ்சமில்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சீசனிலும் இருந்து குறிப்பிட்ட ஒருசில போட்டியாளர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்கின்றனர். தற்போது போட்டியாளர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

அல்டிமேட் போட்டியாளர்கள்
முதல் சீசனில் இருந்து சுஜா வருணி, ஜூலி, சினேகன், ஓவியா என நான்கு பேர் கலந்து கொள்கின்றனர். இவர்களில் பரணி வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைய இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் இருந்து தாடி பாலாஜி, ஷாரிக், ஐஸ்வர்யா என மூவரும் கலந்துகொள்ள இருக்கின்றார்களாம், அதுபோல பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் வனிதா விஜயகுமார், அபிராமி கலந்து கொள்கின்றனர். இவர்கள் இருவரின் என்ட்ரியை பார்த்ததும் ரசிகர்கள் வேற லெவல் இருக்கப்போகிறது என்று கூறி வருகின்றனர். நான்காவது சீசனில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ் என மூவர் கலந்து கொள்கின்றனர். ஐந்தாவது சீசனில் இருந்து தாமரைச்செல்வி, சுருதி, நிரூப் என மூன்று பேரும் கலந்து கொள்கிறார்களாம்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications