பிக்பாஸ் அல்டிமேட்:இரட்டை அர்த்தத்திலேயே பேசி தள்ளும் சுரேஷ் சக்கரவர்த்தி..நிரூப் செய்த திடீர் செயல்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் இரட்டை அர்த்தமான வார்த்தைகள் பேசப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் எந்த ஒரு கட்டிங், எடிட்டிங் இல்லாததால் இப்படி அனைவருடைய சுயரூபம் தெரிகிறதா?? என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

இரண்டாவது நாள் தொடக்கம்
தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இன்று இரண்டாவது நாள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு நாட்களுக்குள் இதைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பரவலாக கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றன. இதுவரைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி வித்தியாசமாகவும், பல நேரங்களில் விறுவிறுப்பாகவும், சில நேரங்களில் முகம் சுளிக்கும் வகையிலும் இருந்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

எல்லாம் வித்தியாசமாக இருக்கே
பிக்பாஸ் அல்டிமேட் தொடங்கியதுதான் தொடங்கியது அங்கே சகஜமாக பேசிக்கொள்கிறோம் என்று போட்டியாளர்கள் செய்வது வியப்பாகவும் இருந்து வருகிறது. இதுவரைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தும் சீன்கள் ஒளிபரப்பாமல் இருந்தது. ஆனால் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அவர்கள் பேசிய கெட்ட வார்த்தைகள் பீப் போட்டு மறைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ளே நடப்பவை அப்படியே வெளியே காட்டப்படுவதால் இரட்டை அர்த்தங்கள் உள்ள வார்த்தைகள் அதிகமாக இருந்து வருகிறது.

சுரேஷ் சக்கரவர்த்தியின் வழக்கமான செயல்
நேற்றைய முதல் நாளில், டாஸ்க் என்கிற பெயரில் முகம் சுளிக்கின்ற வகையில் பல கேள்விகள் கேட்கப்பட்டது. நேற்று தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் சும்மாவே போட்டியாளர்கள் பேசுவது இரட்டை அர்த்த தனமாகத்தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள். சுரேஷ் சக்ரவர்த்தி அதிகமாக அனைத்து போட்டியாளர்களையும் வம்பு இழுக்கும் வகையில் பேசி வருவதாகவும், அதுவும் இன்றைய எபிசோடில் ,காலையில் சுரேஷ் சக்கரவர்த்தி காய்கறிகளை வெட்டிக் கொண்டு இருக்கும்போது கீரைகளை கழுவ வேண்டும் என்று சுஜா வருணியை குறிப்பிட்டிருக்கிறார்.

நிரூப்பின் திடீர் செயல்
சுஜா வருணி முதலில் தான் கீரையை கழுவி தருவதாக சொன்னவர், அதை மறந்து மேக்கப் போட ரெடி ஆகி விட்டார். அந்த நேரத்தில் சுருதி குளித்துவிட்டு வந்ததும் நிரூப், சுருதியை கீரையை கழுவ கூப்பிட்டு இருக்கிறார். அப்போது சுருதி மாடர்ன் உடையில் வந்ததற்கு சுரேஷ் சக்கரவர்த்தி தன்னுடைய நக்கல் தனத்தோடு குளிச்சிட்டு அப்படியே வெளியே வந்திராத. ..டிரஸ் போட்டுக்கிட்டு வா என்று கூறியிருக்கிறார். ஆனால் அதை சுருதி கண்டுகொள்ளாமல் அப்போ இது என்ன வாம் என்று கேட்டு இருக்கிறார். ஆனால் அதை அருகிலிருந்து கேட்ட நிரூப், வாயை திறந்தாலே சுரேஷ் தாத்தாவுக்கு இரட்டை அர்த்தம் தான். இப்படி எல்லாம் பேசக்கூடாது... இது என்ன இந்த பேச்சு என்று கூறியிருக்கிறார். பல இடங்களில் சகஜமாக இரட்டை அர்த்தங்களில் பேசும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு நிரூப் பேசிய வார்த்தை கடுப்பாக இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவர் ஜாலியாக எடுத்துக் கொண்டார். இதை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்களில் கலாய்த்து வருகிறார்கள்.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications