விக்ரமன் கல்யாணம் செய்த பெண் யார் தெரியுமா? காங்கிரஸ் தலைவரின் பேத்தி.. பிரபல இயக்குனர் தான்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னராக தேர்வான விக்ரமனுக்கு நேற்று எளிமையாக திருமணம் நடைபெற்றது. அவருடைய மனைவி யார் என்ற தகவல்கள் இப்போது வெளியாகியிருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் வின்னராக விக்ரமன் தான் ஜெயிப்பார் என்று ஆரம்பத்தில் இருந்து அதிகமான ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில் கடைசியில் வாக்குகளின் அடிப்படையில் ரன்னராக விக்ரமன் தேர்வானார். விக்ரமன் அதற்கு முன்பு விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்திருக்கிறார்.

ஆனாலும் அப்போது இவர் பெரிய அளவில் பிரபலமாகாமல் இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகத்தான் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இந்த நிலையில் இவர் நேற்று பெற்றோர் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணத்தை முடித்து இருக்கிறார்.
இவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் அவர் வெளியிட்டிருந்ததை தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் விக்ரமன் திருமணம் செய்த பெண் சினிமாவில் உதவி இயக்குனராக இயங்கி வரும் ப்ரீத்தி கரிகாலன் தான். ப்ரீத்தி பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். கோடிட்ட இடங்களை நிரப்புக, கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய படங்களில் வேலை செய்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு இருவருக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டதும் அது காதலாக மாறி இப்போது கல்யாணத்தில் முடிந்திருக்கிறது. ப்ரீத்தி முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தனுக்கு பேத்தி முறையில் சொந்தம் தானாம்.

இரண்டு வீட்டாரின் சம்மதத்தோடு தான் இந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் வைத்து எளிமையாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. அப்போது ப்ரீத்தி தாலி கட்டிக்கணும் என்று ஆசைப்பட்டதால் பெரியவங்க சுயமரியாதை முறைப்படி தாலி எடுத்துக் கொடுக்க அதை நான் அவங்க கழுத்தில் கட்டினேன், பிறகு கிறிஸ்தவ முறைப்படி மோதிரமும் மாற்றிக் கொண்டோம் என்று விக்ரமன் கூறி இருக்கிறார்.

அதோடு இவர்களுடைய திருமணத்தில் இயக்குனர் சீனு ராமசாமி, கரு பழனியப்பன் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களான ரச்சிதா, சிவின், ராம், நமீதா உட்பட ஒரு சிலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications