தேசிய விருது பெற்ற படத்தின் ரீமேக்கில் இனி பிக் பாஸ் “விஷ்ணு”.. பட்ட கஷ்டத்துக்கு கிடைத்த பலன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான "கனா காணும் காலங்கள் சீரியல்" மூலம் பிரபலமடைந்த நடிகர் விஷ்ணு சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய அளவில் பேசப்பட்டார். இந்த நிலையில் அவர் எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. அதாவது தெலுங்கில் தேசிய விருது பெற்ற திரைப்படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கு நடிகர் விஷ்ணுவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நடிகர் விஷ்ணு தன்னுடைய சினிமா வாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து தான் அடுத்தடுத்து ஒவ்வொரு இடங்களில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய அக்கா மற்றும் தங்கைகளை திருமணம் செய்து கொடுத்து 35 வயதை கடந்துவிட்ட பிறகும் விஷ்ணு திருமணம் செய்யாமல் இருக்கும் நிலையில் அவர் ஆசைப்பட்ட மாதிரியே இப்போது அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஏற்கனவே விஷ்ணு ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதுவும் 2017 ஆம் ஆண்டு வெளியான "இவன் யார் என்று தெரிகிறதா...?" என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் அதற்கு முன்பே இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கனா காணும் காலங்கள் கல்லூரி கதை என்ற சீரியலில் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார்.
அதை தொடர்ந்து இவருக்கு ஆபீஸ் சீரியலிலும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலிலும் தன்னுடைய நடிப்பை காட்டி இளம் ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த நிலையில் தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சத்யா சீரியலில் கதாநாயகனாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து அந்த சீரியலில் "அமுல் பேபி" ஆக ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார். அதனாலயே முதல் பாகம் முடிவடைந்து இரண்டாவது பாகம் தொடங்கப்பட்ட போது கதாநாயகனாக அவரே நடித்திருந்தார்.
ஆனால் திடீரென்று அந்த சீரியலில் இருந்து இவர் விலகப் போகிறார் என்றதும் சீரியலை முடித்து விட்டனர். அதற்கு பிறகு கலர்ஸ் தமிழில் "சொல்ல மறந்த கதை" என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக "நடிகை ரச்சிதா" நடித்திருந்தார். இந்த சீரியலும் நல்ல ஒரு கதை அம்சத்தோடு போய்க்கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத விதத்தில் திடீர் என்று அந்த சீரியலை பாதியிலே நிறுத்தி விட்டார்கள்.
அந்த நேரத்தில்தான் விஷ்ணு பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டாலும் இவருடைய காமெடி ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஐந்து இடம் பிடித்தவர்களில் விஷ்ணுவும் ஒருவராக இருந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு விஷ்ணு இப்போது ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார் என்ற தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. 2018 ஆம் ஆண்டு ராகுல் ரவீந்தர் இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு படமான "சி லா சோவ்" என்ற படத்தினுடைய தமிழ் ரீமேக்கில் தான் விஷ்ணு நடிக்கிறார். இந்த படம் தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் தேசிய விருதையும் பெற்றிருந்தது. தற்போது இந்த படத்தில் விஷ்ணு நடிக்கும் தகவல் வெளியானதும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications