மணிமேகலையின் "சுயமரியாதை".. பூனைக்கு மணி கட்டிய மணி.. விஜய் டிவிக்கு மெகா சறுக்கல்.. பிரியங்கா பதில்?
சென்னை: ரியாலிட்டி ஷோக்களிலேயே டாப் இடத்தை தக்க வைத்து வரும் விஜய் டிவிக்கு இன்னொரு அடி பலமாக விழுந்திருக்கிறது.. தொகுப்பாளர் மணிமேகலையின் "சுயமரியாதை" ரூபத்தில்.. மணிமேகலை குறிப்பிடுவது பிரியங்கா தேஷ்பாண்டேவை தான் என நெட்டிசன்கள் கூறிவருவதுடன், இதற்கான கமெண்ட்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்கள்.
சின்னத்திரைகளில், ரியாலிட்டி ஷோக்களை, வெகுஜன மக்கள் மத்தியில் விரைந்து கொண்டுபோய் சேர்த்தது விஜய் டிவி எனலாம்.. இந்த ஷோக்கள் எந்த அளவுக்கு, ரசிகர்களை இழுத்ததோ, அதே அளவுக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் ஈர்க்கவே செய்தது.

பிரபலங்கள்: பெரும்பாலும் தொகுப்பாளர்கள் ஆஸ்தான என்ற இடத்தை எட்டிப்பிடிப்பது கடினம்.. ஆனால், விஜய் டிவி இதிலும் சக்ஸஸ் செய்தது.. ஆஸ்தான தொகுப்பாளினிகளாக டிடி, ரம்யா, பாவனா என்று மூவருமே றெக்கை கட்டி பறந்தார்கள்.. இல்லத்தரசிகளின் இதயத்தில் இந்த 3 பெண்களுக்குமே இன்றுவரை நிரந்தர இடம் உள்ளது. இவர்கள் பங்கேற்றிருந்தபோது, விஜய் டிவியின் "கலரும்" வித்தியாசமாக இருந்தது.
ஆனால், மாகாபா, பிரியங்கா இருவருமே விஜய் டிவியில் காலடி வைத்ததும், மேற்கண்ட தொகுப்பாளர்கள் ஒவ்வொருவராக காணாமல் போனார்கள்.. இவர்களில் ஜாக்குலினையும் சேர்த்து கொள்ளலாம். விஜய் டிவியை ஆன் செய்தாலே, மாகாபா, பிரியங்கா இருவருமே நீக்கமற நிறைந்திருந்தார்கள்.. எல்லா நிகழ்ச்சிகளையும் இவர்களே ஆக்கிரமித்திருந்தார்கள்..
சோர்வு : ஒரே மாதிரியான மாடுலேஷன், கிண்டல், கேலி என ரசிகர்களுக்கு சோர்வை தந்துவிட்டது. மகாபா, பிரியங்கா இருவரால், புதிய ரியாலிட்டி ஷோவும், எடுபடாமல் போய்விட்டது. ஒருகட்டத்தில், லவ் டிராக், டபுள் மீனிங் வசனங்களும் விஜய் டிவி தொகுப்பாளர்களால் உச்சரிக்கப்படவும், ரியாலிட்டி ஷோக்கள் மக்களின் மனங்களிலிருந்து விலக ஆரம்பித்தது.
இந்த சமயத்தில்தான் மணிமேகலையின் முடிவு, பரபரப்பை கிளப்பியிருக்கிறது.. மிகவும் துணிச்சலான அறிக்கையை மணிமேகலை வெளியிட்டுள்ளார். சீனியர் தொகுப்பாளினி, மிகப்பெரிய நிறுவனம் என்றெல்லாம் எதற்குமே பயப்படாமல், துணிந்து தன்னுடைய கருத்துக்களை சொல்லியிருக்கிறார்.. அதில் தன்னுடைய சுயமரியாதையையும் காட்டமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்..
குக் வித் கோமாளியை பொறுத்தவரை, இந்த முறை சீசன் ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட சலசலப்புகளை பெற்று வருகிறது.. ஒவ்வொருவராக விலகி அதிர்ச்சியை தந்ததால், மணிமேகலையும் விலகியிருப்பது அதிர்ச்சியை தரவில்லை.
பிரியங்கா: ஆனால், பிரியங்கா மீது அவர் வெளிப்படுத்தியிருக்கும் குற்றச்சாட்டு, பலராலும் ஆமோதிக்கப்பட்டு வருகிறது. அதைவிட முக்கியமாக, பிரியங்காவின் அத்துமீறலை , விஜய் டிவி தெரிந்தும்கூட கண்டுகொள்ளவில்லை என்பதே இப்போது பூதாகரமாகி கிளம்பியிருக்கிறது. பிரியங்காவை அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே அங்கு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்க முடியும் என்ற குற்றச்சாட்டு, விஜய் டிவிக்கே எதிராக திரும்பியிருக்கிறது...
இப்போது மணிமேகலையின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், நெட்டிசன்கள் பலரும் பிரியங்காவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. புகையும்போதே விஜய் டிவி இதையெல்லாம் தலையிட்டு தடுத்திருக்கலாம் என்கிறார்கள்..
கேள்வி: "தான்" என்ற எண்ணமே ஒருவரை அடியோடு காலி செய்துவிடும் என்பது வரலாற்றின் நியதியாக இருந்து வரும் நிலையில், இப்போது நடந்துள்ளதை பிரியங்காவின் ரசிகர்களே மனமுவந்து ஏற்பார்களா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது..
டிடி, பாவனா போன்றோர் சீனியர் தொகுப்பாளர்களாக இருந்தபோதும்சரி, இவர்கள் ஒன்றிணைந்து நிகழ்ச்சிகளை தொகுத்து தந்த போதும்சரி, இதுபோன்ற சலசலப்புகள் எழுந்ததே இல்லை.. மகாபா, பிரியங்கா இருவர் மட்டும்தான் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து தர வேண்டுமா? இவர்களை விட்டால் வேறு யாருமே இல்லையா விஜய் டிவிக்கு? என்று வெளிப்படையான முணுமுணுப்புகள் எழுந்தபோதும், நிறுவனம் அதை கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.
அதேசமயம், இன்னொரு ஷோ ஒன்றிற்கு செல்வதற்காகத்தான் மணிமேகலை இப்படி ஒரு குற்றச்சாட்டை வீசியிருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். அதேபோல, பிரியங்கா சமீபத்தில் விருது வாங்கியிருந்தது, மணிமேகலையின் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம என்றும், மணிமேகலைக்கு சேனலில் இருந்தும் அதிக நிகழ்ச்சிகள் கொடுக்கப்படாமல் இருந்துள்ளதால், இப்படியொரு முடிவை மணிமேகலை எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.
ஒருவேளை, இதெல்லாம் உண்மையாகவே இருந்தாலும், ஒரே தொகுப்பாளர்களை ரசித்து பார்க்க தயாராக இல்லை என்றும், அதுவும் எதிலும் ஆதிக்கம் நிறைந்தவர்களை, எக்காலத்திலும் ஏற்பதில்லை என்றும் நெட்டிகன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். எனவே இரண்டு தொகுப்பாளினிகள் விஷயத்தில், உண்மை எதுவென்று விசாரித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பும், நெருக்கடியும் விஜய் டிவிக்கு இன்று ஏற்பட்டுள்ளது.
பரபரப்பு: அதுமட்டுமல்ல, மணிமேகலை ஸ்டேட்மென்ட்டால் இணையமே பரபரப்பாக கிடக்க, வெளிநாடு செல்லும் ஸ்டோரியை இன்ஸ்டாகிராமில் பிரியங்கா போஸ்ட் செய்துள்ளார்.. மற்றொருபக்கம் பிரியங்காவால் என்னுடைய அண்ணன் மகன் வாழ்க்கையே பாழாகிவிட்டது பாடகி சுசித்ராவும் இன்ஸ்டாகிராமில் பகீரை கிளப்பியிருக்கிறார்.
இப்படி ஒவ்வொருவராக வெளிவந்து குறைகளை சொல்வது பிரியங்காவை மட்டுமல்லாமல், விஜய் டிவியின் பாராமுகத்தையே காட்டி வருவதாக சொல்கிறார்கள்.
சுயமரியாதை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்தே, மணிமேகலை தன் இயல்பிலிருந்து விலகியிருக்கிறாரே? என்ற சந்தேகம் பல தரப்பிலும் எழுந்தவாறே இருந்த நிலையில், அனைத்தையும் பொதுவெளியில் போட்டு உடைத்து, தன்னுடைய சுயமரியாதையை நிலைநாட்டியிருக்கிறார் மணிமேகலை.












Click it and Unblock the Notifications